> என் ராஜபாட்டை : இந்த வருடத்தின் சிறந்த நடிகர் யார் ? பிரமாண்ட கருத்து கணிப்பு

.....

.

Tuesday, December 17, 2013

இந்த வருடத்தின் சிறந்த நடிகர் யார் ? பிரமாண்ட கருத்து கணிப்பு


யார்யாரோ எதுஎதுக்கோ கருத்து கணிப்பு நடத்துறாங்க . நாமளும் நடத்துவுமே . இந்த வருடத்தின் மிக சிறந்த நடிகர் யார் ? என்ற கேள்வியை உங்கள் உன் வைக்கிறேன் . நான் சில நடிகர்களை பரிந்துரை செய்கிறேன் . இவர்களை தவிர வேறு யாராவது இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள் . நான் சொன்ன நடிகருடன் உங்கள் கருத்து ஒத்து போனால் ஓட்டு போடுங்கள் .
1.   அஜித் இந்த வருடம் வந்த ஆரம்பம் அஜித்தை 100 கோடி வசூல் செய்யும் ஹீரோக்கள் பட்டியலில் இணைத்தது . ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடப்பது , படத்தின் புரோமோகாக ஆஹா, ஓஹோ, என கதை விடாதது , ரசிகர் மன்ற கலைப்புக்கு பின்பும் பலமான ரசிகர்களை கொண்டிருப்பது இவர் சிறப்பு .

2.   விஜய் 

தலைவா படத்தின் ஒரு TAG LINE மூலம் பல பிரச்சனைகளை கண்டவர் . துப்பாக்கி மூலம் கிடைத்த நல்ல பெயரை டைரக்டர் விஜய் மூலம் கொஞ்சம் கலங்கடித்துவிட்டார் . ஆனாலும் இன்னும் உடலை கட்டுகோப்பாக வைத்துகொண்டு சின்ன பையன்போல் நடிப்பது இவர் தனி சிறப்பு . அரசியல் ஆசை ஒருபுறம் , அப்பாவின் தொல்லை ஒரு புறம் என இருந்தாலும் கணக்கில் அடங்க ரசிகர்கள் இவர் பலம் .
3.   கமல்

விஸ்வருபம் படத்துக்கு தமிழக அரசே காரணம் என்றும் தமிழ்க் நாட்டை விட்டு போய்விடுவேன் என சொன்னவர் ஜெயா டிவியில் பட்டிமன்ற நடுவராக போனதில் இருந்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதை நிருபித்து விட்டார் . ஆனாலும் அசராமல் இரண்டாம் பாகம் எடுக்கிறார் .
4.   சூர்யா 

சிங்கம் 2 மூலம் வசூல் நாயகனாக உயர்துள்ளார் . படத்துக்காக தனது உடலை வருத்திகொல்வதில் விக்ரமுக்கு அடுத்து இவர்தான் . ஆனாலும் கவுதம் மேனன் படத்தில் இருந்து விலகி சர்சையில் சிக்கினர் .
5.   விஜய் சேதுபதி 

அதிரடி ஹிட் , வித்தியாசமான வேடம் , சப்தமில்லா வெற்றி என அதிரடியாக உயர்ந்து வருகிறார் சேதுபதி . இவரின் ஒவ்வொரு படமும் முதல் படத்தின் சாயல் இல்லாமல் இருப்பது பெரிய சிறப்பு . மெகா பட்ஜெட் படங்கள் மண்ணை கவ்வும் போது இவரின் படங்கள் லாபத்தை ஈட்டுவதால் இப்போது தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளை இவர் .இவர்கள் இல்லாமல் அகிலஉலக சூப்பர் ஸ்டார் பவர் ஸ்டார் , எழுகிரக நாயகன் ராஜகுமாரன் போல பலர் உள்ளனர் . உங்கள் மனம் கவர்ந்த இந்த ஆண்டின் நாயகன் யார் ?

12 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...