> என் ராஜபாட்டை : இந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )

.....

.

Monday, December 16, 2013

இந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )

பதிவுலகில் தொடர் பதிவு வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது என சில நண்பர்கள் சொல்லியதால் , இந்த வருடத்தில் எனக்கு நடந்த சில நல்ல , கஷ்டமான , சந்தோஷமான , துக்கமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . இதுபோல நீங்களும் தொடருங்கள் .

நல்ல விஷயங்கள் :
 • எங்கள் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது .
 • கணினி பாடத்தில் 200/200  எடுத்து எனது மாணவன் என் பெயரை காப்பாற்றியது .
 • சென்னை பதிவர் சந்திப்பில் பல நண்பர்களுடன் உரையாடியது .
 
 • சீனு , அரசன் ,சிவா , ரூபக் , குடந்தை சரவணன் , ஸ்கூல் பையன் , சதீஷ் , ரேவதி சதீஷ் , மதுமதி , கே .ஆர்.பி செந்தில் ,சதீஷ் சங்கவி ,ஆரூர் மூனா செந்தில் , கேபிள் சங்கர் , அப்துல் பாசித் ,சங்கரலிங்கம் சார் , பிரபு கிருஷ்ணா , வெற்றி வேல், கணேஷ் சார், வீடு சுரேஷ் , பிரகாஷ் (தமிழ்வாசி),சென்னை பித்தன் , பட்டிகாட்டான் ,உண்மைத்தமிழன் ,மயிலன் ,ராஜி , சசிகலா ,  கோகுலத்தில் சூரியன் வெங்கட் , இனியவை கூரல் , இவர்களுடன் அரட்டை .
 
 • பிலாசபி பிரபாவின் உபசரிப்பு . (நக்ஸ் மூலம் பிரியாணி ஊட்டியது ).
 
 

 • கோவை ஆவியின் அறிமுகம் . பல புகழ்பெற்ற பதிவர்கள் சந்திக்க முடிந்தது .
 

 • விகியுலகம் வெங்கட் அவர்களை முதல் முறையாக சந்தித்தது ..

விரும்பத்தகாத நிகழ்வுகள் :

 • சொந்தக்காரன் என நம்பி வீட்டுக்குள் விட்ட ஒருவனால் 13 பவுன் நகைகள் திருட்டு போனது . திருட்டுப்போனது ஒருபுறம் என்றால் அவனே எங்கள் கூட சேர்ந்து தேடியது , அவனை வீட்டுக்கு காவல் வைத்துவிட்டு நாங்கள் காவல் நிலையம் சென்றது . அதை தனி பதிவாக போடலாம் .

 • சரண் வெண் நீரை கையில் ஊற்றி கொண்டது . ஒருவாரம் மிகவும் மனுளைசலை தந்தது . மூன்று நாட்கள் மருத்துவமையில் அவன் இருந்ததும் , அங்கு கையை சுத்தம் செய்து கட்டுபோடும் பொது அவன் கதறியதை கேட்க்கபிடிக்காமல் வெளியே வந்துவிடுவேன் . எங்க அப்பா மரணத்திக்கு பின் அதிகம் அழுதது அப்போதுதான் .
 
 

 • எங்கள் பள்ளி மாணவன் (முன்னாள் ) ஒருவன் மழை நேர விபத்தில் இறந்தது , மாணவி (முன்னாள் ) தற்கொலை செய்து கொண்டது மறக்கமுடியாத விஷயம் .
 • காலையில் சரணுடன் விளையாடி விட்டு போன நண்பன் இரவு சாலை விபத்தில் மரணம் . அவன் சிரிப்பு அப்படியே கண்ணில் நிற்கின்றது .

டிஸ்கி : நண்பர்களே உங்களுக்கு இதுபோல சில அனுபவங்கள் இருக்கும் அதை தொடருங்கள் .

டிஸ்கி : இதை யார் வேண்டுமானாலும் தொடரலாம் . நான் சிலரை அழைக்கிறேன் அவர்களும் நேரம் இருந்தால் தொடரலாம் .

கோவை ஆவி

தளிர் சுரேஷ்

ஸ்கூல் பையன்

காணமல் போன கனவுகள் ராஜி

9 comments:

 1. குட்டி பையன் வென்னீரை கையில் கொட்டிக்கும் அளவுக்கு நீங்க என்னப் பண்ணிட்டு இருந்தீங்க சார்!?

  ReplyDelete
 2. நான் சிலரை அழைக்கிறேன் அவர்களும் நேரம் இருந்தால் தொடரலாம் .
  >>
  இதைவிட வேற வேலை என்ன இருக்கு எனக்கு!? கண்டிப்பா நான் தொடர்கிறேன். பதிவை தேத்துன மாதிரி ஆச்சுல்ல!!

  ReplyDelete
 3. இனிய நினைவுகள்... முதல் நாள் அறையில் சந்தித்த நினைவுகள் வந்து சந்தோசப்பட்டேன்...

  சகோதரி இப்பவே கிளப்பிட்டாங்கையா... கிளப்பிட்டாங்க....!

  ReplyDelete
 4. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியின் விளக்கம்.. நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன்... நன்றி...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

  ReplyDelete
 5. 500ஆவது தொடர்வோர்-க்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. சரண் கையில் வெந்நீர் ஊற்றியதால் ஏற்பட்ட காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கிவிடலாமே நண்பரே! வேறு
  ஒரு சாதாரணப்படம் போடலாம்...

  // சரண் வெண் நீரை கையில் ஊற்றி கொண்டது //
  - அவனே எடுத்து ஊற்றிக் கொண்டானா நண்பரே

  ReplyDelete
 7. விரும்பாத நினைவுகளை எழுதி உங்கள் பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள்... எங்களுக்கு வருத்தமாகிப் போனது...

  ReplyDelete
 8. //அதை தனி பதிவாக போடலாம் .// Please Post

  ReplyDelete
 9. தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி நண்பரே! உடல் நலம் சரியில்லாமையால் பத்து நாட்களாக இணையம் வரவில்லை! இன்றுதான் உங்கள் அழைப்பை பார்த்தேன்! விரைவில் எழுதுகிறேன்! நன்றி!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...