கடந்த சில மாதங்களில் என்னை மிகவும் பதித்தசில மரணங்கள் பற்றிய தொகுப்பும், கேள்விகளும்தான் இந்த பதிவு . மரணம் அறியா வீடு இல்லை ஆனால் ஒவ்வொரு மரணமும் எதோ ஒருவகையில் யாருக்கோ ஈடு செய்ய முடியாத இழப்பாகத்தான் இருக்கும் .
முதல் மரணம் :
கடந்த சனிகிழமை கனமழை , புயலில் அறுந்துதொங்கிய மின் கம்பியில் மாட்டி மரணத்தை தழுவினான் என் முன்னாள் மாணவன் ஒருவன் . கடந்த ஜூனில் தான் அவனை கடைசியாக பார்த்தேன் . நல்ல காலேஜ்இல் சேர்ந்துவிட்டேன் என சந்தோஷமாக சொன்னான் . ஆனால் இன்று அவன் இல்லை . அவன் மரணம் என்னுள் சில கேள்விகளை எழுப்புகிறது .
- பலத்தமழை என்று தெரிந்தும் மகனை ஊர்சுற்ற அனுமதித்தது ஏன் ?
- காற்று வேகமாக வீசும் , புயல் அடிக்கும் என அனைத்து ஊடகங்களும் அலறிக்கொண்டு இருக்க அந்த வேளையில் ஏன் வெளியே போக அனுமதித்தார்கள் ?
- அறுந்து விழுத்த மின் இணைப்பை துண்டிக்க சொல்லி யாரும் மின்வாரியத்துக்கு சொல்லாது ஏன் ?
- இவை எல்லாத்துக்கும் ஒரே பதில் "அலட்சியம் "
எங்கள் ஊர் மாணவன் ஒருவன் சமிபத்தில் பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டான் . ஒரே பிள்ளையான அவனை அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தனர் . சுமாரா படிக்கும் அவனை ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர் . அங்கு அவர்கள் போகும் வேகத்துக்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை . ஆசிரியர்களும் அவனால் முடிந்த அளவு படித்தால் போதும் என அவனை தொந்தரவு செய்யவில்லை . உன்னால் என்ன முடியுமோ அதையாவது எழுது எனதான் சொல்வார்கள் . அந்த மாத தேர்வில் அவன் சரியாகமார்க் எடுக்கவில்லை.
பெற்றோர்கள் அவனை அதிகமாக திட்டியதால் தற்கொலை செய்துகொண்டான் . இப்பொது மகனையும் இழந்து , வாழ்வின் சந்தோஷத்தையும் இழந்து அந்த குடும்பம் தவிக்கிறது .
- அதிக செல்லம் கொடுத்து அவனை கெடுத்தது யார் ?
- பெற்றோர் திட்டுவதை கூட தாங்க முடியாதவன் நாளை சமுதாயத்தை எப்படி எதிர்கொள்வான் ?
- மாணவனின் என்னத்தை அறிந்து அவன் விரும்பும் பள்ளி , குருப்பில் சேர்க்காமல் தங்கள் நினைக்கும்பிரிவில் சேர்த்து மாணவனை வீணடிப்பது ஏன் ?
- மதிப்பெண் மட்டும்தான் வாழ்க்கையா ?
இந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை . பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துகொள்ளுங்கள் . அவனுடன் பேசுங்கள் .அவன் குறைகள், கஷ்டங்கள் , விருபங்கள் பற்றி பேசுங்கள் . அவர்கள் தான் உங்கள் எதிர்காலம் என்பதை மறக்காதீர்கள் .
Tweet |
கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துக்கள்...
ReplyDeleteசிந்திக்க வேண்டிய விஷயங்கள்
ReplyDeleteஇரண்டு மரணங்களும் அலட்சியம் தான் காரணமென்றாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் பெற்றோர்களின் கவனிப்பு! நல்ல பகிர்வு!
ReplyDeleteபெற்றோர்கள் குழந்தைகளிட்ம் மனம் விட்டுப் பேசினாலே போதும், பிரச்சினைகள் தீரந்து விடும் பலருக்கு நேரமிருப்பதில்லை, பலருக்கு பிள்ளையை என்ன கேட்பது என்ற மனப்பான்மை..
ReplyDeleteமனம் கனக்கச் செய்யும் பதிவு..
ReplyDeleteநினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய அறிவுரைகள்.
இன்றைய அவசர உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இதிலெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை ... பாதித்த பின் அழுவதில் என்ன பயன் இருக்கிறது ... நல்ல பதிவு சார் ...
ReplyDelete