சென்னையின் வெண்ணை , வயதான சாரி வயது பெண்களின்
கனவு கண்ணன் திடம்கொண்டு போராடும் “சீனு “ வெந்நீர் வைப்பது எப்படி என பதிவு போட ,
அது தப்பு என சுடுகாட்டு வேந்தன், அடுத்த
அஜித் (என அவரது அல்லகைகளால் மட்டும் அழைக்கப்படும் ) “கோவை ஆவி “ எதிர்பதிவு போட ,
இவர்களாம் போடும்போது ஒரு” உலகமகா பிரபல பதிவரகிய “ நீங்கள் ஒன்றும் போடவில்லையா என கேடி சாரி கோடிகணக்கான வாசகர்கள் கேட்டதால் இந்த பதிவு
.
பாத்திரம் கழுவுவது எப்படி ?
வெந்நீர் போட்டாலும்
, டீ போட்டாலும் , முட்டை அவிச்சாலும் கடைசியில் கண்டிப்பாக பாத்திரம் கழுவ
வேண்டும் . பேச்சுலராக இருந்தாலும் , திருமண ஆனா ஆளாக இருந்தாலும் கண்டிப்பாக
பாத்திரம் கழுவனும் (இல்லைனா சோறு கிடையாது ).
தேவையா
பொருள்கள் :
அழுக்கான
பாத்திரங்கள் , (இதுதான் ரொம்ப முக்கியம் )
விம் ,பிரில் , சபீனா
அல்லது தேங்கா நாறு
செய்முறை
:
முதலில் ஆண்களாக
இருந்தால் கைலியை மடித்துகட்டவும் .(பெண்களாக இருந்தால் என யாராது கேட்டிங்க
உம்மாச்சி கண்ணா குத்தும் )
அழுக்கு இரண்டுவகைப்படும் ஒன்னு பவர் ஸ்டார் போல , இரண்டாவது
சிவாஜி போல .அழுக்கான பாத்திரத்தை எடுக்கவும் . சில
அழுக்கு உடனே போய்விடும் அது பவர் ஸ்டார் போல . சில அழுக்கு பாத்திரத்துடன் ரொம்ப
ஒன்றிபோய்விடும் அது சிவாஜி போல .
பாத்திரத்தை அழுக்கு
போகும் வரை நன்றாக தேய்க்கவும் . உங்களுக்கு பிடிக்காத ஒருவரை அல்லது உங்கள் மனைவி
/ கணவன் முதுக்குக்கு சோப்பு போடுவதாக நினைத்து கொள்ளவும் . அப்போதுதான் ரொம்ப
வேகமாக அழுத்தி தேய்க்க முடியும் .
பாத்திரத்தை நன்றாக
கழுவிய பின் வெய்யிலில் காயவைக்கலாம் , சீனு , ஆவி , தமிழ்வாசி வீட்டுக்கு அருகில்
இருப்பவர்கள் பாத்திரத்தை உங்கள் வீட்டுக்குள்ளேயே காயவைப்பது நல்லது .
டிஸ்கி : இதை விட எளிய வழி ஒரு வேலைக்காரியை வைத்துகொள்வது
.(பாத்திரம் கழுவ மட்டும் ). அவளால் குடும்பத்தில் பிரச்சனை வந்தால் சங்கம்
பொறுப்பல்ல .
டிஸ்கி : அடுத்து தீவிரவாதி “வீடு
கூட்டுவது எப்படி ?” என்றும் அரசன் “துணி
துவைப்பது எப்படி என்றும் ?” வரலாற்று
சுவடுகள் “ ஒட்டகம் மேய்ப்பது எப்படினும் “ பதிவு போடுவார்கள் .
Tweet |
மழை நேரத்தில் கழுவிய பாத்திரத்தை எங்கே காய வைப்பது????
ReplyDeleteஅடுப்புக்கு மேல...
Deleteஹா... ஹா... பகிர்வுகள் தொடரட்டும்...
ReplyDeleteஹி ஹி.. சூப்பர் ஜி.. சூப்பர் ஜி..
ReplyDeleteஆகா
ReplyDeleteஹஹஹா.. நல்லா கழுவி அனுபவம் போலிருக்கு!! ;-)
ReplyDeleteபி.கு : ஆமா, உங்க அறிமுகத்துல மட்டும் ஒரு அரசியல் சாயம் தெரியுதே, எனக்கு மட்டும் தானா?
அனுபவம் பேசுது. உங்களுக்கு நகைச்சுவையா எழுத நல்லாவே வருது ராஜா! இதே பாணியை தொடருங்க!
ReplyDeleteஇரண்டு மூன்று நாட்களா நம்ம மக்கள் இப்படியான சமூகப் பணி செய்திட்டிருக்காங்க...அதில உங்கள் பங்கை சிறப்பாகச் செய்தமைக்கு வாழ்த்துக்கள் ராஜா..
ReplyDeleteஉங்களின் சமூக கடமை உணர்வு மெய் சிலிர்க்க வைத்தது! எப்படியோ ஆளாளுக்கு ஒரு பதிவு தேத்திட்டீங்க! ஜமாயுங்க!
ReplyDeleteஹா ஹா ஹா.... இந்த ஆட்டதில நான் சேரவே இல்லையேன்னு இப்போ வருதபடரென். அடுத்த பதிவா கழுவிய பாத்திரத்தை அடுக்கி வைப்பது எப்படின்னு போடா போறேன்...... ராஜா நீங்க ராஜாதான் !
ReplyDeleteஎன்ன கொடுமை யுவர் ஆனர் !
ReplyDelete