கேரள நாட்டை “விக்கி”ரமாதித்தியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு அந்த நாட்டிலேயே மிகவும் புத்திசாலியான சிபி என்பவர் மேல் கோபம். (விக்கிக்கு 5 மனைவி, 8 Wife, 10 துனைவி. இதுக்கும் சிபி மேல் உள்ள கோவத்துக்கும் சம்மந்தம் இல்லை) சிபியை எப்படியாவது போட்டுதள்ள வேண்டும் என திட்டம் போட்டார்.
ஒரு நாள் சிபி, கோகுல் மற்றும் தமிழ்வாசி மூவரையும் வரவைத்தார். முதலில் கோகுலை அழைத்து “என் உடம்பில் என்ன வாசனை வருகிறது என பார்” என்றார். கோகுல் முகர்ந்து பார்த்துவிட்டு “வாசனை வரவில்லை, கெட்ட நாத்தம் தான் வருது “ என்றார். உடனெ விக்கி வாளை எடுத்து ஒரே போடு, கோகுல் காலி.
அடுத்து தமிழ்வாசியை அழைத்து அவரிடமும் அதே கேள்வி , தமிழ்வாசி பய்ந்து கொண்டு “மன்னா உங்கள் மீது மல்லிகை வாசம் விசுகின்றது” என்றார். விக்கி “ என்னிடமே பொய்யா?” என கூறி அவரையும் போட்டுதள்ளிவிட்டார்.
இறுதியாக சிபி, விக்கி அவரிடம் “ நீ சொல் “ என்றார். வாசனை என்று சொன்னாலும் காலி, நாத்தம் என சொன்னாலும் காலி. சிபி அவ்வளவுதான் என எல்லாரும் நினைக்க, சிபி மெதுவாக விக்கியிடம் சென்று “ எனக்கு இரண்டு நாளாக ஜலதோஷம், எனவே எனக்கு எந்த வாசமும் தெரியவில்லை “என்றார்.
சிபியை விட மனமில்லா விக்கி, “உன்னை எப்படி கொல்வது என தெரியவில்லை, உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், இந்த நாயை(நாய் நக்ஸ் இல்லை) எப்படி கொல்கின்றாயோ அப்படிதான் உன்னை கொல்வேன்” என்றார். சிறிது யோசித்த சிபி நாயின் வாலை பிடித்து அடித்து கொன்றார். விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை அப்புறம் எப்படி கொல்வது என.
சரியான வாய்ப்பு வந்தும் சிபியை ஒன்னும் பன்னமுடியவில்லையே என விக்கிக்கு வருத்தம். அப்போது அவரது மதியுக மந்திரி மனோ வந்து விக்கி காதில் எதோ சொன்னார். உடனே விக்கி சிபியை பார்த்து “ உன்னை போட்டு தள்ள பார்த்தேன், தப்பி விட்டாய், இருந்தாலும் உனக்கு ஒரு தண்டனை உண்டு”
மரணதண்டனை இல்லை என தெரிந்ததும் சிபிக்கு சந்தோஷம் “என்ன தண்டனை சொல்லுங்கள் “ என்றார். விக்கி “ இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது “
“ படார் “ எது வெடித்தது ? என்ன நடந்துசுனு நான் சொல்லிதான் தெரியனுமா ? விக்கி எண்ணம் கடைசியில பலித்துவிட்டது.



