இது முழக்க முழுக்க கிண்டல் மட்டுமே
விஜய் : ͌பேஸ்புக்கில் என்னை கிண்டல் செய்து வருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அந்த புத்தகம் மட்டும் என் கையில் கிடைத்தால் அதை சுக்கு நூறாக கிழித்து எறிவேன் என கூறிகொள்கிறேன்.
மேனேஜர் : சார் உங்க அடுத்த படத்துல “நடிகை நிலா” வை புக் பன்னிருக்கோம்.
விஜய் : அய்யயோ அவங்க வேண்டாம்
மேனேஜர் :ஏன் சார் ?
விஜய் : அப்புறம் அம்மா “நிலா அபகரிப்பு”னு என் மேல வழக்கு போட்டுட போறங்க..
விஜய் : நிறைய ரீமேக் படத்துல நான் நடிச்சது உண்மைதான் , அதுக்குனு “நண்பன்” படம் “͌பிரண்ட்ஸ்” படத்தின் ரீமேக்கானு கேட்குறது ரொம்ப ஓவர்.
விஜய் : எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதால் இனி என்னிடம் ஆப்ரேஷன் செய்துகொள்பவர்கள் மட்டுமே என் ரசிகர் மன்றத்தில் சேரமுடியும் என தெரிவித்துகொள்கிறேன்.
விஜய் : என் கட்சியில் கொள்கை பரப்பு செயளாலர் இல்லை என்பதால் கொள்கையே இல்லை என எதிர்கட்சிகள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
விஜய் : இந்த இந்தியா- வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் மேட்ச்சைதான் டி.வியிலே காட்டுகின்றார்களே, பின்பு எதுக்காக பிடிவாதமாக சேப்பாக்கம் மைதானத்திலும் ஆட வேண்டும் என்பதே இன் கேள்வி..?
விஜய் : என் அடுத்த படம் பயங்கர சஸ்பென்ஸா இருக்கும்.
ரசிகர் : எப்படி?
விஜய் : எந்த படத்தில் இருந்து சுட்டோம்னு யாரும் கண்டுபிடிக்க முடியாது.
ஆசிரியர் : software னா என்னா? Hardware னா என்னா?
விஜய் : செடிய புடுங்கினா இருப்பது soft-வேர், மரத்தை புடுங்கினா இருப்பது Hard- வேர்.
ஆசிரியர் : நீ சரியான …………!
விஜய் : இந்தியா கிரிக்கெட் அணியின் தோல்வியை ஆராய ஏன் சி.பி.ஐ (CBI) வாராங்க ?
மேனேஜர் : கடவுளே அது பி.சி.சி.ஐ (BCCI)













