> என் ராஜபாட்டை

.....

.

Monday, November 11, 2013

இலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARES )




இன்றைய இணைய உலகில் மென்பொருளின் பயன்பாடும் வளர்ச்சியும் அளவிடமுடியாத ஒன்று ஆகும் . நம் கணினியில் பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அடிக்கடி சில மென்பொருள்களை வாங்குவோம் அல்லது தரவிறக்கம் செய்வோம் . அது போல நமக்கு அன்றாடம் பயன்பட கூடிய சில முக்கியமான மென்பொருள்களின் தொகுப்புதான் இங்கே தரபட்டுள்ளது . இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்த கூட மென்பொருள்கள் ஆகும் .

கீழே சில மென்பொருள்களின் பெயர்களும் அதை தரவிறக்கம் செய்ய வேண்டிய லின்கலகும்(LINKS) உள்ளது . உங்களுக்கு தேவையானதை தரவிறக்கு கொள்ளவும் . இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என எண்ணுகிறேன் .



1. Windows 8 Life time Activator



2. IDM Crack for Life Time 


3. Kickass Undelete  Pro


4. Advanced Mobile Care 3.1  







5. VLC Media Player (VideoLAN) 2.0.6 



6. Free Ringtone Maker Portable 2.4.0.1162


7. Audacity 2.0.3  
 

8. AVG AntiVirus Free 2013 13.0 Build 3272a6212


9. avast! Free Antivirus 8.0.1483.72
 


10. Fat32Formatter 1.1





MORE  SOFTWARES VISIT:

Thursday, November 7, 2013

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா ?



இன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , நாம் நல்ல பெயர் எடுக்கும் வகையிலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது இந்தியாவில் இருந்துஊழலை ஒழிப்பதற்கு சமம் . குழந்தைகளிடம் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் சாராம்சம் .


1. குழந்தையை கண்டிப்பாக அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதிர்கள் . குழந்தை உங்களை அடுத்த பெற்றோருடன் ஒப்பிட்டால் பொறுத்து கொள்விர்களா ?


2. குழந்தைகளுடன் பேச , விளையாட நேரம் ஒதுக்குங்கள் . டிவி சிரியல் முக்கியமல்ல , எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் சிரியல் புரியும் . பெற்றவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என என்னும் குழ்\குழந்தைகள் அதிகம் .

3. குழந்தைகள் சொல்வதை கேளுன்க்கள் . அது சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகாய இருந்தாலும் கேளுங்கள் . அப்போதுதான் குழந்தை நன்றாக பேச வரும் . கூச்சம் போகும் .

4. பாராட்டுங்கள் . அது சின்னதாக ஏதாவது நல்ல விஷயம் செய்தாலும் பாராட்டுங்கள் . 


5. ஏதாவது தவறாக செய்தால் மென்மையாக கண்டியுங்கள் . அடித்துதான் ஒரு குழந்தையை நல்லவனாகக் முடியும் என்பது தவறு .

6. அடம்பிடிப்பதை கண்டியுங்கள் . அது கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து கெடுக்காதிர்கள் . ஏன் வாங்கி தரவில்லை என்பதை புரியவைக்க முயற்ச்சி செய்யுங்கள் .

7. பெண் குழந்தைகள் உடை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் . எத்தனை வயதானாலும் உங்களுக்கு அவள் குழந்தைதான் ஆனால் மற்றவர்கள் பார்வையில் ?


8. மற்றவர்களிடம் மரியாதையாக பேச கற்று கொடுங்கள் . முதலில் நாம் மரியாதையாக பேச வேண்டும் . நாம் மனைவியை வாடி என்றால் குழந்தையும் வாடி என்றுதான் சொல்லும் .

9. குழந்தை முன் சண்டை போடாதிர்கள் . அது அதன் மனதில் காயத்தை ஏற்படுத்தும் .

10. அடுத்த குழந்தையை பற்றி தவறான எண்ணம் நம் குழந்தை மனதில் புகுதாதிர்கள் .


11. அடுத்தவர்களுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தை கற்றுகொடுங்கள் . இன்றய நிலையில் நெறைய குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள்  சொல்லும் தவறான வார்த்தை " யாருக்கும் கொடுக்காம நீ மட்டும் சாப்பிடு " என்பதுதான்


எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .

மாடல் : R.S.சரண்


படித்து விட்டிர்களா ?


ANDROID KITKAT பற்றி தெரியுமா ?

Monday, November 4, 2013

சின்ன சின்ன விஷயங்கள்



கீழே நீங்கள் படிக்க போவது அனைத்தும் எனது முக நூலில் நான் பகிர்ந்தவை . அவற்றில் பல நான் சொந்தமாக யோசித்தது (ஏய் !! யாருப்பா அது சிரிக்கிறது ?? பிச்சுபுடுவேன் பிச்சு ...) . சில படித்ததில் ரசித்தது . உங்களுக்காக அந்த தொகுப்பு இதோ ..

======================================================================


முக்கிய செய்தி:
விஜய்காந்த், வடிவேலுவுடன் இனைந்து. .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
நடித்த "தவசி " படம் கே டி.வியில் இப்போது. . .


==================================================================


நடிகர் கார்த்திக்கு இப்போது பிடிக்காத ஆனால் அவருக்கு இன்றய நிலையில் பொருத்தமான புது பாடல். .
.
.
.
.
"என் ஃபிஸு போச்சே. . . ."


=======================================================================


சுட்டகதை படம் முடிவில் இயக்குனர் படம்பார்த்த நமக்கு, பட தயாரிப்பாளருக்கு, நடித்த நடிகர்களுக்கு என அணைவருக்கும் ஒரு அருமையான வசனம் வைத்துள்ளார். அது
.
.
.
.
"வெளங்கிரும். . ."

#படத்தோட ரிசல்ட் அவருக்கு முன்பே தெரியும் போல???


=====================================================================


நேற்று பூம்புகாரில் தண்ணீ அடித்துவிட்டு கடலில் குளித்த நபர் ஒருவர் அலையால் இழுத்து செல்லபட்டு உயிரிழந்தார். தண்ணீ அடிக்கிற பக்கிங்க குடிச்சுட்டு சும்மா இருக்காம கடலில் போயா வீரத்தை காட்டுவது?
டாஸ்மாக் 10 மணிக்குதான் திறக்கிறது என்கின்றனர் ஆனால் பல கடைகள் சைடில் வியபாரம் செய்கின்றனர். கிடாரங்கொன்டான் டாஸ்மாக் காலை 7 மணிக்கே கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பொதுமக்களும், போலிஸும் வேடிக்கைதான் பார்கின்றனர்.

#வாழ்க_ஜனநாயகம்.


===================================================================


"இலையை கண்ட இடத்தில் போட்டால் நாய்கள் சண்டை போடும்"
#திண்டுக்கல் லியோனி

#சேம் சைட் கோல். வாய் தவறி உளரிட்டாரா???


=====================================================================

ரிலிஸ் ஆகி ஒரு வாரமே ஆன "சுட்டகதை " படம் நாளை மாலை புதுயுகம் டி.வியில்.

நேரடியாக டி.வியில் படம் ரிலிஸ் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

#தமிழ்படங்களுக்கு வந்த சோதனை!!!


=================================================================

வெடிலாம் ஓவர் விலை ஓவரா இருக்கு. பேசாம 100 ரூபாய்க்கு பலூன் வாங்கி 200 ரூபா சம்பளத்துக்கு ஆள் வைத்து ஊத சொல்லி வெடிக்கலாம்னு பார்க்குறேன். செலவும் மிச்சம், சுற்றுசூழலுக்கும் பாதிப்பில்லை.

#தீபாவளி_ஐடியா


====================================================================

ஒருவர் இன்று எங்கள் கடைக்கு சாப்பாடு ஆர்டர் கொடுக்க வந்தார். 2 இட்லி, ஒரு கரண்டி பொங்கல், ஒரு கரண்டி கேசரி, 2 போண்டா, ஒரு கப் காப்பி, 2 பூரி இப்படி ஒரு செட் என்ன விலை வரும் என்றார். 50 ரூபாய் ஆகும் என்றோம். அவர் இது ரொம்ப அந்நியாயம் ஒரு 25 ரூபாய் போட்டுகுங்க என்றார். கடைசியில் 45 ரூபாய்க்கு ஒத்துகொன்டார். 1000 அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அவர் சொன்னதுதான் ஹைலைட்.
"50 பேர்க்குனா சரியா 50 பேர்சாப்பிடுவது போல செய்யாதிங்க. ஒரு 100 பேராவது சாப்பிடிவது போல செய்யுங்க"

#அடபாவி நீ நிதிஅமைச்சர் சிதம்பரம் போல வருவடா. . .


=====================================================================

அதிரடி ஆரம்பம் :
,
,
,
,

,
,
மின்வெட்டு.

#பழைய குருடி கதவ திறடி கதை!!


==================================================================
 தீபாவளி உடையில் சிங்கமும் , சிங்க குட்டியும்


  
      
இதையும் படிக்கலாமே :

 FUNCTION KEYS : DO U KNOW?

Thursday, October 31, 2013

ஆரம்பம் : "அதிரடி " விமர்சனம்





தல அஜித் , ஆர்யா , நயன் தாரா , டாப்சி என பெரிய நடிகர் பட்டாளங்களும் , பில்லா வெற்றிப்பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும் பலரை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருந்த படம் ஆரம்பம் . 

கதை :

புல்லட் புருப் ஊழலில் சிக்கும் ஒரு அரசியல்வாதி , அவரின் பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு இந்திய அரசிடம் அளிக்கும் கதை . இதற்க்கு கம்பியுட்டரில் புகுந்து விளையாடும் ஆர்யா எப்படி உதவுகிறார் ,டாப்சி யார் , நயன்தாரா யாருக்கு ஜோடி என்பதை வெண்திரையில் பார்க்கவும் . முழுகதையும் சொல்ல வேண்டாம் என தான் சொல்லவில்லை .


+ பாயிண்ட் :

அஜித் நடிப்பு . தனது சக நடிகர்களை விட்டு தன்னைபுகழ்ந்து கொள்ளும் பல நடிகர்களுக்கு மத்தியில் அனைவருக்கும் இணையான முக்கியத்துவம் தந்து நடித்தத்தர்க்கு பாராட்டலாம் .


கார் சேசிங்க காட்சியில் தானே நடித்தது .

நீண்ட நாட்களுக்கு பின் நல்ல மெசேஜ் உள்ள கதை .

இறுதி காட்சியில் அஜித் பேசும் வசனங்கள் .

 சமகாலங்களில் நடந்த சில அரசியல் கேலி கூத்துகளை காட்டியது ( வெளியுறவுத்துறை அமைச்சர் மேசையில் தேசிய கொடி தலைகிழாக இருந்தது .)

பாடல்கள் படமாக்கபட்ட விதம் .

பின்னணி இசை .

ஆர்யாவின் துள்ளல் நடிப்பு .

டாப்சியின் மேக்கப்


- பாயிண்ட்ஸ் :

ஆங்கில படமான சுவர்ட் பீஷ் இல் இருந்து சில காட்சிகளை சுட்டது .


காமெடி காட்சிகள் குறைவு .

நயன்தாராவை கொஞ்சம் (!!) கிழவி போல காட்டியது .

மன்க்காத்தாவை நினைவு படுத்தும் 200 கோடி கொள்ளை .


மொத்தத்தில் :

இது தல ரசிகர்களுக்கு அதிரடி திபாவளி என்பதில் ஐயமில்லை .

விஜய் ரசிகர்கள் சில நாட்கள் வயிற்று எரிச்சலடுடன் இருப்பார்கள் .

"நல்ல பக்கா ஆக்க்ஷன்  படம் "


ஆனந்த விகடன் :  44

குமுதம் : நன்று 

ராஜபாட்டை : 8/ 10

(மயிலாடுதுறையில் ரத்னா , கோமதி இரண்டில் வந்துள்ளது )

Tuesday, October 29, 2013

இந்த தீபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா ?





இந்த திபாவளிக்கு நமது வெட்டி பிளாகர் சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளோம் . கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.


1.         நஸ்ரியா வெடி.

இந்த வெடிமுழுவதும் நன்றாக துணியை சுற்றி திரி மட்டும் தெரியும் வண்ணம் வெடிக்க வேண்டும் . இல்லை என்றால் வெடிக்காது நம்மை பார்த்து நையாண்டி செய்யும் . பதிவர் ஆ.வி க்காக ஸ்பெஷல்லாக செய்தது .

2.      சிபி வெடி :

இந்த வெடிக்கு மேல எதாவது காப்பி டம்பளர் வைத்தால்தான்  வெடிக்கும்.

3.      ஆரூர் மூனா வெடி:

இந்த வெடியை பக்கத்துல போய் "அரே ஊ சம்போ சத்தமா சொல்லணும் . அப்பத்தான் வெடிக்கும் .

4.      விஜய்காந்த் ராக்கெட்:

குவாட்டர் பாட்டில் உள்ளே வைத்துதான் விட வேண்டும். விடும் முன்பு அதன் தலையில் நன்றாக தட்ட வேண்டும்

5.      அஜித் வெடி:

பற்ற வைத்த பின் அரை கிலோ மீட்டர் நடத்து போய்தான் வெடிக்கும். பின்னணி இசை வைத்தால் நலம் .

6.      காங்கிரஸ்  புஷ்வாணம்  :

இதை பற்றவைக்கும் முன் அருகில் சில்லறை காசு வைக்கவேண்டும் . இத்தாலியில் இருந்து சிக்னல் இருந்தால்தான் எரியும் .

7.       2G வெடி

இது எப்ப வெடிக்கும், எப்படி வெடிக்கும், வெடிக்குமானு தெரியாம ஒரே சஸ்பென்சா இருக்கும்.

8.      விஜய் வெடி

இது நம்ம வீட்டில் வெடிக்குமா , அடுத்த வீட்டில் வேடிக்குமானு தெரியாது . பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்).

9.      பண்னிகுட்டி அனுகுண்டு :

வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.

10.     கருணாநிதி வெடி

இந்த வெடியை குடும்பத்துடன்  மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட அந்த அந்த குடுப்பத்திற்க்கு மட்டும்தான் கேட்கும்.

     12. காமெடி கும்மி வெடி :

                    இது எதுக்காக வெடிக்கும் , யார் மேல வேடிக்கும்னே தெரியாது . 
                பத்தவச்சவங்க மேலேயே வெடிக்கும் . வெடிக்காட்டி சிரிப்பு சத்தம்
               வரும் . யாருக்கும் தொல்லை இல்லாத வெடி .
    
    13. கண்ணாடி மச்சான் "சீனு " வெடி 

               வெடிக்கும் முன் தான் எப்படி வெடிக்க போகிறேன் என 15 பக்கத்துக்கு விளக்கம் சொல்லிவிட்டு தான் வெடிக்கவேண்டும் . அப்பத்தான் வெடிக்கும் . பெண்கள் வெடித்தால் உடனே வெடிக்கும் என்பது இதன் ஸ்பெஷல் .


  



டிஸ்கி ; இது போல உங்களிடம் எதாவது வெடி இருந்தால் சொல்லுங்கள்,
   எங்கள் கம்பெனி வாங்கிகொள்ளும்.