தல அஜித் , ஆர்யா , நயன் தாரா , டாப்சி என பெரிய நடிகர் பட்டாளங்களும் , பில்லா வெற்றிப்பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும் பலரை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருந்த படம் ஆரம்பம் .
கதை :
புல்லட் புருப் ஊழலில் சிக்கும் ஒரு அரசியல்வாதி , அவரின் பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு இந்திய அரசிடம் அளிக்கும் கதை . இதற்க்கு கம்பியுட்டரில் புகுந்து விளையாடும் ஆர்யா எப்படி உதவுகிறார் ,டாப்சி யார் , நயன்தாரா யாருக்கு ஜோடி என்பதை வெண்திரையில் பார்க்கவும் . முழுகதையும் சொல்ல வேண்டாம் என தான் சொல்லவில்லை .
+ பாயிண்ட் :
அஜித் நடிப்பு . தனது சக நடிகர்களை விட்டு தன்னைபுகழ்ந்து கொள்ளும் பல நடிகர்களுக்கு மத்தியில் அனைவருக்கும் இணையான முக்கியத்துவம் தந்து நடித்தத்தர்க்கு பாராட்டலாம் .
கார் சேசிங்க காட்சியில் தானே நடித்தது .
நீண்ட நாட்களுக்கு பின் நல்ல மெசேஜ் உள்ள கதை .
இறுதி காட்சியில் அஜித் பேசும் வசனங்கள் .
சமகாலங்களில் நடந்த சில அரசியல் கேலி கூத்துகளை காட்டியது ( வெளியுறவுத்துறை அமைச்சர் மேசையில் தேசிய கொடி தலைகிழாக இருந்தது .)
பாடல்கள் படமாக்கபட்ட விதம் .
பின்னணி இசை .
ஆர்யாவின் துள்ளல் நடிப்பு .
டாப்சியின் மேக்கப்
- பாயிண்ட்ஸ் :
ஆங்கில படமான சுவர்ட் பீஷ் இல் இருந்து சில காட்சிகளை சுட்டது .
காமெடி காட்சிகள் குறைவு .
நயன்தாராவை கொஞ்சம் (!!) கிழவி போல காட்டியது .
மன்க்காத்தாவை நினைவு படுத்தும் 200 கோடி கொள்ளை .
மொத்தத்தில் :
இது தல ரசிகர்களுக்கு அதிரடி திபாவளி என்பதில் ஐயமில்லை .
விஜய் ரசிகர்கள் சில நாட்கள் வயிற்று எரிச்சலடுடன் இருப்பார்கள் .
"நல்ல பக்கா ஆக்க்ஷன் படம் "
ஆனந்த விகடன் : 44
குமுதம் : நன்று
ராஜபாட்டை : 8/ 10
(மயிலாடுதுறையில் ரத்னா , கோமதி இரண்டில் வந்துள்ளது )