> என் ராஜபாட்டை : கிண்டல்

.....

.
Showing posts with label கிண்டல். Show all posts
Showing posts with label கிண்டல். Show all posts

Friday, December 27, 2013

பாத்திரம் கழுவுவது எப்படி ? கிங்’ஸ் கிச்சன்











இவர்களாம் போடும்போது ஒரு” உலகமகா  பிரபல பதிவரகிய “ நீங்கள் ஒன்றும் போடவில்லையா என கேடி சாரி கோடிகணக்கான வாசகர்கள் கேட்டதால் இந்த பதிவு .

பாத்திரம் கழுவுவது எப்படி ?

வெந்நீர் போட்டாலும் , டீ போட்டாலும் , முட்டை அவிச்சாலும் கடைசியில் கண்டிப்பாக பாத்திரம் கழுவ வேண்டும் . பேச்சுலராக இருந்தாலும் , திருமண ஆனா ஆளாக இருந்தாலும் கண்டிப்பாக பாத்திரம் கழுவனும் (இல்லைனா சோறு கிடையாது ).

தேவையா பொருள்கள் :
அழுக்கான பாத்திரங்கள் , (இதுதான் ரொம்ப முக்கியம் )
விம் ,பிரில் , சபீனா அல்லது தேங்கா நாறு  

செய்முறை :


முதலில் ஆண்களாக இருந்தால் கைலியை மடித்துகட்டவும் .(பெண்களாக இருந்தால் என யாராது கேட்டிங்க உம்மாச்சி கண்ணா குத்தும் )

அழுக்கு இரண்டுவகைப்படும் ஒன்னு பவர் ஸ்டார் போல , இரண்டாவது சிவாஜி போல .அழுக்கான பாத்திரத்தை எடுக்கவும் . சில அழுக்கு உடனே போய்விடும் அது பவர் ஸ்டார் போல . சில அழுக்கு பாத்திரத்துடன் ரொம்ப ஒன்றிபோய்விடும் அது சிவாஜி போல .

பாத்திரத்தை அழுக்கு போகும் வரை நன்றாக தேய்க்கவும் . உங்களுக்கு பிடிக்காத ஒருவரை அல்லது உங்கள் மனைவி / கணவன் முதுக்குக்கு சோப்பு போடுவதாக நினைத்து கொள்ளவும் . அப்போதுதான் ரொம்ப வேகமாக அழுத்தி தேய்க்க முடியும் .

பாத்திரத்தை நன்றாக கழுவிய பின் வெய்யிலில் காயவைக்கலாம் , சீனு , ஆவி , தமிழ்வாசி வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் பாத்திரத்தை உங்கள் வீட்டுக்குள்ளேயே காயவைப்பது நல்லது .

டிஸ்கி : இதை விட எளிய வழி ஒரு வேலைக்காரியை வைத்துகொள்வது .(பாத்திரம் கழுவ மட்டும் ). அவளால் குடும்பத்தில் பிரச்சனை வந்தால் சங்கம் பொறுப்பல்ல .

டிஸ்கி : அடுத்து தீவிரவாதி “வீடு கூட்டுவது எப்படி ?” என்றும் அரசன் “துணி துவைப்பது எப்படி என்றும் ?” வரலாற்று சுவடுகள் “ ஒட்டகம் மேய்ப்பது எப்படினும் “ பதிவு போடுவார்கள் .

Thursday, August 9, 2012

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்


இன்றைய சினிமா உலகில் அசைக்க முடியாத இரண்டு சக்திகள் விஜய் மற்றும் அஜித் . படம் கதையுடன் இருந்தாலும் மொக்கையாக இருந்தாலும் இவர்கள் படம் முதல் வாரத்தில் வசூலை அள்ளிவிடும் . இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் நண்பர்களாக இருகின்றார்களா என்றால் சந்தேகம் தான் . ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் facebook  இல் நக்கல் செய்வதும் என பயங்கர சண்டையே நடக்கும் . சில சமயங்களில் கிண்டல் வரம்பு மீறி போவதும் உண்டு . அதுபோல கிண்டல் செய்து வெளியிட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு .

அஜித் ரசிகர்கள் வைத்துள்ள facebook page  இல் 








விஜய் ரசிகர்கள் வைத்துள்ள  facebook page இல்





டிஸ்கி 1 :  இதைவிட பல கொடுமையான கிண்டலான புகைப்படங்கல் உள்ளது , 
                   இருவரது ரசிகர்கள் மனது புண்படகூடாது என போடவில்லை .

டிஸ்கி 2 : எனக்கு இருவரையும்  பிடிக்கும்