> என் ராஜபாட்டை : மாற்றான்

.....

.
Showing posts with label மாற்றான். Show all posts
Showing posts with label மாற்றான். Show all posts

Saturday, March 24, 2012

ரஜினியை முந்தும் சூர்யா


சூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் 'மாற்றான்'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

முதன் முறையாக 'மாற்றான்' படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி, தீவிரமாக உழைத்து வருகிறார் சூர்யா.

'மாற்றான்' படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் சூர்யா - காஜல் அகர்வாலை வைத்து ரஷ்யாவில் படமாக்கி இருக்கிறார்கள். கதைப்படி, காஜல் ரஷ்ய மொழியில் பேச வேண்டிய காட்சிகள் இருந்ததால்,  ரஷ்ய மொழி வார்த்தைகள் பலவற்றை கற்றாராம் காஜல்.

இந்திய திரையுலகில் முதன் முறையாக இப்படத்திற்கு PERFORMANCE CAPTURE TECHNOLOGY மூலம் சூர்யாவின் முகபாவனைகளையும் மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.

'எந்திரன்', ' 7ம் அறிவு ' போன்ற பெரும் பட்ஜெட் படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் PERFORMANCE CAPTURE TECHONOLOGY-யை பயன்படுத்தி, சூர்யாவை வைத்து 2 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.


'கோச்சடையான்' படமும் இதே மாதிரி தான் தயாராக இருக்கிறது. கோச்சடையான் படத்திற்கு முன்பே மாற்றானில் இந்த TECHONOLOGYஐ பயன்படுத்தி இருக்கிறார்கள்.
 இந்த PERFORMANCE CAPTURE TECHONOLOGY- பற்றி மேலும் அறிய ..