> என் ராஜபாட்டை : நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?

.....

.

Saturday, March 17, 2012

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?


1. நமது அழகுக்கும், திறமைக்கும் கதா நாயகன் வாய்ப்பே கொடுக்க க்யூ கட்டி நின்றாலும் மறுத்து விட்டு, வடிவேலுக்கு அல்லக்கையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றலாம். மக்கள் தொலைக்காட்சியில் தோன்ற விரும்பினால், ரஷ்ய மொழி திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கலாம்.


2. நெடுந்தொடரில் கதா நாயகனாக நடிக்க விரும்பும் ஆண்கள் பேக்கு போலவும், வில்லனாக விரும்பும் ஆண்கள் பத்து கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கதாநாயகியாக விரும்பும் பெண்கள் பிறந்ததிலிருந்து சிரித்ததே இல்லை என்பது போலவும், வில்லி வாய்ப்பை விரும்புபவர்கள் சாணியை மிதித்தது போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.ஏற்கனவே வெள்ளித்திரையில் தோன்றி விட்டால் பிரச்சனையே இல்லை. நீங்கள் படப்பிடிப்பு இடைவேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஓய்வறையில் உட்காந்து கொண்டிருக்கும் போதோ குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்படுவீர்கள்.


3. தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய பிறகு அடுத்த கட்டம் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவது தான். நான்கு திரைப்படத்தில் நடித்து விட்டால் நடுவராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது.


4. இருபது நகைச்சுவை துனுக்குகளை பார்க்காமல் மனப்பாடமாக சொல்லப் பழகிக் கொண்டால், அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றலாம். நமது மொக்கை ஜோக்குகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பிரபலத்தை சிரிக்க(சிரிப்பது போல நடிக்க) வைத்து நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் sadist மிருகத்திற்க்கு தீனி போட்டுக் கொள்ளலாம்.


5. ஜாரியு(ஃபிகரு)டன் அலைபேசியில் மணிக்கனக்கில் மொக்கை போட்டு பழக்கமிருக்கிறதா?(அது தான் பொழப்பேவா?) இந்த ஒரு தகுதி போதும் நீங்கள் வர்ணனையாளராவதற்க்கு. இல்லையென்றாலும் பரவாயில்லை.. எங்கேருந்து பேசுறீங்க, என்ன பண்றீங்க, என்ன பாட்டு(நகைசுவை துனுக்கு) வேணும்? யாருக்கு டெடிக்கேட் பண்ணனும் என்ற நான்கு கேள்விகளை மனப்பாடமாகக் கேட்கத் தெரிந்தால் போதும். பர்ஸனாலிட்டி முக்கியமில்லை. மாறு வேடமிட்டு மறைத்துக்கொள்ளலாம்.


6. ஐம்பது கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கத் தெரிந்தால், தில் தில் மனதில் மற்றும் சவால் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றலாம்.(முயற்சியில் விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டவும்)


7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.


இது தவிர சித்த வைத்தியம், பாலியல் வைத்தியம், ராசிக்கல் ஜோதிடம், டெலி ஷாப்பிங் மாதிரி சொந்த செலவில் டைம் ப்ளாட் வாங்கி கொள்வது உங்கள் வசதி வாய்ப்பைப் பொருத்தது.இது தவிர உங்களுக்கு வேறு யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். 


நன்றி : மெயில்  அனுப்பிய நண்பனுக்கு .

7 comments:

  1. அட...
    நல்லா சொல்லுராங்கையா...

    டீடைலு....

    ReplyDelete
  2. பார்ரா....அட கைக்குட்டையை போட்டு இடத்தை பிடிங்கப்பு.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது மிகச் சரி
    அப்படித்தான் இருக்கிறது
    மனம் கவர்ந்த ஜாலியான பதிவு

    ReplyDelete
  4. அட்வைஸுக்கு நன்றி. ட்ரை பண்ணுவோம்.

    ReplyDelete
  5. நீங்க எப்போ டிவில வரப்போறீங்க?

    ReplyDelete
  6. செம நக்கல். அதிலும் கடைசி செம காமெடி.

    ReplyDelete
  7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.
    சரியாய் சொன்னிர்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...