> என் ராஜபாட்டை : tamil movie

.....

.
Showing posts with label tamil movie. Show all posts
Showing posts with label tamil movie. Show all posts

Wednesday, January 4, 2012

விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .

இந்த பொங்கல் திருநாள் மற்றவர்களுக்கு எப்படியோ .. விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்தான் . காரணம் "நண்பன் " பட ரீலிஸ் .  சங்கர் , ஹாரிஸ் ஜெயராஜ் என ஜாம்பவங்களுடனும் , அருமையான கதையுடனும் வருகின்றது . இதைவிட விஜய்யின் மாஸ் , அவரது நடிப்பு படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .

அந்த  அருமையான படத்தின் சில படபிடிப்பு காட்சிகள் உங்களுக்காக ..
மேலும் விவரங்களுக்கு : www.directorshankaronline.com
















இதுலாம்  சும்மா , பொங்கலுக்கு இருக்கு கச்சேரி .... 

Saturday, December 24, 2011

நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

நம்ம விஜய் ரசிகர்களுக்காக ...








 










இது  சும்மா டிரைலர்தான் .. மெயின் picture கலக்கும் ...
பாடல்கள் பதிவிறக்கம் செய்ய :

நண்பன் பாடல்கள் 

Sunday, August 7, 2011

வேலாயுதமா ? வினையாயுதமா ?- ஆஸ்கர் அதிர்ச்சி


விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு போட்ட பட்ஜெட்டை விட ரூ.10 கோடி அதிகமாகிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அதேசமயம் விஜய் படம் என்பதால், போட்ட காசை எடுத்த விடலாம் என்று நம்பிக்கையிலும் இருக்கிறார். “காவலன்” படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் “வேலாயுதம்”. விஜய்யுடன், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ‌”ஜெயம்” ராஜா இயக்குகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது. 

         இந்நிலையில் இப்படத்திற்காக ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட் ரூ.35கோடியாம். ஆனால் இப்போது படத்தில் கம்யூட்டர் கிராபிக்ஸ், பாடல்கள் பிரம்மாண்டம் அது, இது என்று ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சற்று கலக்கத்தில் இருக்கிறாராம். ஆனால் அதே சமயம், இது விஜய் படம்,  கவலைப்படாதீர்கள் போட்ட காசுக்கு மேலாக எடுத்துவிடலாம் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருவதால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம்.

விஜய் படம் என்றாலே அதிரடி ஆக்ஷன், கலக்கல் சாங்ஸ், காமெடி, காதல், செண்டிமென்ட் என்று எல்லாமே இருக்க வேண்டும் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதேபோல், இந்தபடத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா…? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வேலாயுதம் ஆஸ்கர்க்கு வினையாயுதம் ஆகம இருந்தா சரி .
 

Sunday, March 13, 2011

மங்காத்தாவைப் பார்த்து பிரம்மித்த தயாநிதி.....!!

அஜீத் நடித்து வெங்கட் பிரபு இயக்கும் படம் மங்காத்தா. படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் எடிட்டிங்கையும் முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. 
பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத் நடித்த ஏகன், அசல் என இரண்டு படங்களுமே அவருக்கு படு தோல்வியை கொடுத்ததோடு அவர் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அவர் ரசிகர்களை திருப்த்திப்படுத்தும் வகையில் மங்காத்தா இருக்கும் என வெங்கட் பிரபு சொல்லிவருகிறார்.
அதனால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதுவும் அஜீத் பிறந்தநாளன்று படம் வெளிவர இருப்பதால் அஜீத் ரசிகர்கள் இந்த வருட தீபாவளியை மங்காத்தா ரிலீஸில் இருக்கும் என்றே சொல்லாலாம்.
படத்தில் இன்னொரு முக்கிய நட்சத்திரமும் இருக்கிறார், அவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். திரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் லக்‌ஷ்மி ராய், அஞ்சலி, வைபவ் என பல முன்னனி நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
படத்தின் எடிட்டிங் முடித்திருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. எடிட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையிலும் படத்தைப் பார்த்த தயாநிதி அழகிரி பிரம்மித்துப் போனாராம்.
படம் பிராமாதமாக இருப்பதைப் பார்த்து உற்சாகத்தில் `தல தல தான்` என்றும் சொல்லி இருக்கிறார். படத்தைப் பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள் என்று சொல்கிறது மங்காத்தா டீம். யுவன் ஷங்கர் ராஜா படத்தின் பின்னணி இசை வேளைகளை படு வேகமாக செய்துவருகிறார்.
 
Thanks : tamilcnn.com