> என் ராஜபாட்டை : நண்பன்

.....

.
Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Monday, August 13, 2012

நட்பு நீடிக்க ...





உலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...

  1. நண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .
  2. நண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .
  3. நல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட  இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்
  4. நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )
  5. விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .
  6. கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .
  7. நண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .
  8. நண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா ?
  9. நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .
  10. பெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .


இவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள்  உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .

இந்த பதிவை தொழிற்களம் வலையிலும் காணலாம் 

Wednesday, February 1, 2012

நண்பன் பட சிடி இலவசம் ?


இப்படிதான் சிரிக்க போறிங்க ...




இவர் பக்திக்கு அளவே இல்லை ..

 
கமெண்ட் போடல தோலை உரிச்சிடுவேன் 
 
ஓவரா படிச்சா இப்படிதான் 
 
மூளையுடன் முடியும் வழியுது 
 
பாவம் விஜய் (நண்பன் பட சிடி இலவசம் ?)
 
வெளிநாட்டு வேலைதான் வேணுமா ?
 
நாங்கலாம் அந்த காலாத்து ஆளுங்க ...

Monday, January 23, 2012

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்




நண்பன் படம் மாபெரும் வெற்றி என்று சொன்னால் அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல ஆகும். எனது சில நண்பர்கள் தீவிர அஜித் ரசிகர்கள். அவர்களை அழைத்துகொண்டு (இழுத்துக்கொண்டு ) நண்பன் படம் பாக்க போனேன். அங்கே அவர்களின் கமெண்ட் பற்றிதான் இந்த தொகுப்பு.

மயிலாடுதுறையில் உள்ள விஜயா தியட்டரில் படம் பார்த்தோம். இலவச அனுமதி கூப்பன் என உள்ளதை 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.(ஜெ. அம்மா இதுக்கு ஏதாவது பன்னகூடாதா ?)

படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம்  ஆனாதால் கூட்டம் இருக்காது என சொன்ன நண்பன் தியட்டர் கூட்டத்தை பார்த்து பிரமித்து போனான். படத்தில் பல இடங்களில் அவன் மனம்விட்டு சிரித்ததை பார்க்கமுடிந்தது. அதுவும் சத்யன் ஆசிரியர் தினத்தில் பேசும் காட்சியில் அவன் என் மேல் விழுந்து விழுந்து சிரித்தான்.

இடைவேளையில் அவனிடம் கேட்டதுக்கு பரவலா படம் ஜாலியா போகுது என்றான். படம் முடிந்து வெளியில் வந்ததும். ஒரு நண்பன் என்ன உங்க தலைவர் எல்லாரிடமும் அடி வாங்குறார் என்றான். நான் பதில் சொல்லும் முன் இன்னொரு நண்பன் ஏண்டா பத்து பேர அடிச்சா ஏண்டா அடிச்சகுற , அடிக்கலனா ஏண்டா அடிக்கலன்குற .. உன்னையெல்லாம் ....

தீவிர அஜித் ரசிகனான நண்பன் சொன்னான் இந்த படத்துக்கு எங்க அப்பாவை கூப்பிட்டு வரணும்டா என்றான். எல்லாரும் ஆச்சர்யமாக அவனை பார்த்தோம். டீச்சர் ட்ரைனிங் படிச்சு வாத்தியாரா போகுணைம்னு ஆசைப்பட்ட என்னை B.E படின்னு சொல்லி இப்ப முடிக்கமுடியாம கஷ்டபடுறேன். அவர் பாக்கனும்டா. இனி தல எனக்கு எப்படி பிடிக்குமோ அதுபோல தளபதியையும் பிடிக்கும் என்றான்.

உண்மைதான் இந்த படத்திற்கு பின் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்பது உண்மை.

டிஸ்கி : எனது சில பதிவுகளை பார்த்து எனக்கு விஜய் பிடிக்காது என சிலர் நினைக்கலாம். எனக்கு தலயும் பிடிக்கும் தளபதியும் பிடிக்கும்.


Thursday, January 19, 2012

நண்பன் VS வேட்டை




பொங்கலுக்கு வந்த படங்களில் பெருத்த எதிர்பார்ப்பையும் , ஆவலையும் கிளப்பிய படங்கள் என்றால் அது நண்பன் மற்றும் வேட்டை. (கொள்ளைக்காரன் என ஒரு படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ) இந்த இரண்டு படங்களில் மக்கள் ஆதரவு எந்த படத்திரிக்கு என பார்ப்போம் .

நண்பன் :

விஜய் என்ற ஒரு ஆளுக்காகவே படம் பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. அதுபோல ஷங்கர் இயக்கம் என்றால் நம்பி போகலாம், இவர்களுடன் வளர்ந்து வரும் நடிகர் ஜீவா , கலக்கல் வில்லன் சத்தியராஜ் , இசை ஹரிஷ் ஜெயராஜ் என பக்கா கூட்டணியில் வந்தபடம். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம்தான் என்றாலும் தமிழ் நாட்டுக்கு ஏற்றார்போல சில மாறுதலுடன் ஷங்கர் கொடுத்துள்ளார் .

விஜயின் எந்த அலட்டலும் இல்லாத , பஞ்ச டயலாக் இல்லை , அதிரடி சண்டை இல்லை ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.


வேட்டை :

சாக்லேட் ஹீரோ மாதவனும் , ஆர்யாவும் இணைந்து நடித்தபடம். கனவு கண்ணி (!) சமீரா , அமலாபால் என இரண்டு கவர்சி கண்ணிகளுடன் , அதிரடிக்கு புகழ்பெற்ற லிங்குசாமி இயக்கத்தில் வந்த படம். பாடல்கள் ஹிட். கதை என்று பார்த்தால் ஏற்கனவே வந்த பலபடன்களின் தொகுப்புதான். ஆனாலும் அதை லிங்குசாமி கையாண்டவிதம் அருமை.

அதிரடி சண்டைகளும் , நல்ல பாட்டும் , கொஞ்சம் சென்டிமென்ட்டும , கொஞ்சம் நகைசுவையும் இருந்தால் எந்த கதையையும் ஒப்பேத்திடலாம் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் .

நண்பன் VS  வேட்டை

இரண்டில் இது வெற்றி என சொல்ல நான் ஒன்னும் நாட்டாமை இல்லை . ஒரு படத்தின் வெற்றி என்பது உங்கள் கையில் உள்ளது . எனவே மறக்காம சைட் பாரில் உள்ள ஓட்டு படையில் உங்களுக்கு பிடித்த படத்திற்கு ஓட்டு போடவும் .




Wednesday, January 4, 2012

விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .

இந்த பொங்கல் திருநாள் மற்றவர்களுக்கு எப்படியோ .. விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்தான் . காரணம் "நண்பன் " பட ரீலிஸ் .  சங்கர் , ஹாரிஸ் ஜெயராஜ் என ஜாம்பவங்களுடனும் , அருமையான கதையுடனும் வருகின்றது . இதைவிட விஜய்யின் மாஸ் , அவரது நடிப்பு படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .

அந்த  அருமையான படத்தின் சில படபிடிப்பு காட்சிகள் உங்களுக்காக ..
மேலும் விவரங்களுக்கு : www.directorshankaronline.com
















இதுலாம்  சும்மா , பொங்கலுக்கு இருக்கு கச்சேரி .... 

Saturday, December 24, 2011

நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

நம்ம விஜய் ரசிகர்களுக்காக ...








 










இது  சும்மா டிரைலர்தான் .. மெயின் picture கலக்கும் ...
பாடல்கள் பதிவிறக்கம் செய்ய :

நண்பன் பாடல்கள்