> என் ராஜபாட்டை : மாணவர்களுக்காக : படிக்க காசு வேண்டுமா ?

.....

.

Saturday, January 7, 2012

மாணவர்களுக்காக : படிக்க காசு வேண்டுமா ?




நன்றாக படிக்கும் பல மாணவர்கள் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத காரணத்தால் பாதியில் படிப்பை விடுகின்றனர். சிலர் நல்ல மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. இவர்களுக்காக சில உதவி தொகை வழங்க சில அமைப்புகள் உள்ளன அவற்றை பற்றிய ஒரு தொகுப்புதான் இது.

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் :

பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிக்க உதவி தொகை வழங்குகின்றனர். இது சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்மே.

விவரங்களுக்கு :  www.ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட் :

இது தனிரர் நிறுவனம் , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக உதவுகின்றது இது .

விவரங்களுக்கு : jaigopal garodia scholarships center, jaigopal garodia vivekananda vidyalaya trust , U-6 Seventh street, anna nagar, chennai ph : 26206261

கௌரவ் பவுண்டேஷன் :
சென்னையில் உள்ள நிறுவனம் , ஆய்வு மற்றும் உயர்கல்விக்கு உதவி தொகை வழங்குகின்றது. பயனாளிகளின் வருட வருமானம் 4,00,000  லட்ச ரூபாய் குள்ள இருக்க வேண்டும் .

விவரங்களுக்கு :  http://gauravfoundation.org/scholarship.html

எஸ் . கே . டி .பி தொண்டு நிறுவனம் :

சென்னை தி நகரில் இயங்கிவரும் நிறுவனம் இது. தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html

மற்ற சில நிறுவனங்கள் ....

1. vidhyasakar educational trust
  B-1 Narumakar apartment, Brindavan nagar Extension
  Adambakkam, chennai -88









நன்றி : புதிய தலைமுறை வார இதழ்


நேற்று :


டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , உடான்ஸ் , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .



14 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. அனைவருக்கும் உதவும் அருமையான தகவல்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம் ராஜா சார்,

    சூப்பர் ஐடியா கொடுத்திருக்கிறீங்க.

    பல தடவை நான் அன்பாக சொல்லியும் கேட்காது, வெளிக் குத்து பதிவு போட்டும் கேட்காது பதிவைப் படிக்காது லிங் கொடுக்கிற உங்களுக்கு ஒரு நல்ல பணி இன்று முதல் செய்யப் போறேன்.

    இன்று முதல் என் ப்ளாக்கின் சைட் பாரில உங்க ப்ளாக் அப்டேற் வரும்! ஹே...ஹே...
    மவனே இதுக்குப் பிறகும்
    ஒருத்தன் செத்திருக்கான் என்று எழுதுற பதிவில வந்து கலக்கிட்டாய் என்று போட்டீங்க. பிச்சுப் புடுவேன் பிச்சு!

    இப்போ சந்தோசமா?

    ReplyDelete
  4. அருமையான தகவல்...ஏழை மணவர்களுக்கு பயன்படும்....

    ReplyDelete
  5. நல்ல தகவல் பாஸ் தந்திருக்கிங்க . மாணவர்களுக்கு பயன்தரும் தொகுப்பு .

    ReplyDelete
  6. ஏழை மாணவர்களுக்கு உபயோகமான பதிவு வாழ்த்துக்கள் மக்கா...!!!

    ReplyDelete
  7. உங்களுடைய வலைப்பூவில் நான் படித்தவரைக்கும் இந்தப் பதிவுதான் டாப்...!! ஏழைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும், பயன்தரக்கூடிய பதிவை யார் கொடுத்தாலும் பாராட்ட வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை.. அந்த வகையில் நீங்கள் பாராட்டுக்குரியவர் ஆகீறீர்.. நன்றி ராஜபாட்டையார் அவர்களே..!!!

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  9. அருமையான பதிவு அனைவரிடமும் கொண்டு செல்ல அனைத்திலும் வாக்களித்தேன்.....

    ReplyDelete
  10. Arumai Sir! Ezhai Maanavarkalukku migavum payanpadu oru pathivu. Vaalthukkul!

    ReplyDelete
  11. நல்லமனங்களுக்கும் அவற்றை பட்டியலிட்ட தங்களுக்கும் மிக்க நன்றி சார்..
    கல்லாமை எனும் குற்றம் களைய உதவும் நெஞ்சங்கள்தான் உண்மையில் உலகை நகர்த்தி செல்பவர்கள்..

    ReplyDelete
  12. படிக்க வசதியில்லாத ஆனால் தகுதியான மாணவகளுக்கு பயன்படும் வகையில் பதிவிட்டிருக்கீங்க. நன்றி சகோ

    ReplyDelete
  13. நல்ல தகவல்

    இன்போசிஸ் அறக்கட்டளை நேரடியாக மாணவருக்கு காசு தருவதில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...