> என் ராஜபாட்டை : அன்பு + அறிவு + திறமை +பாசம் = எங்கள் R.S சார்

.....

.

Monday, January 30, 2012

அன்பு + அறிவு + திறமை +பாசம் = எங்கள் R.S சார்




நான் மேலையூரில் உள்ள சீனிவாசா மேல்நிலை பள்ளியில்   + 2 படிக்கும் போது எனக்கு கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாடம் எடுத்தவர் எனது அன்பு ஆசிரியர் R.சுப்பிரமணியன் அவர்கள். இன்று நான் ஒரு ஆசிரியராக பல மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராக இருக்க இவர்தான் காரணம்.

இரண்டு வருடத்தில் இவர் மாணவர்களை அடித்தது இரண்டு அல்லது முன்று முறை மட்டுமே. அதுவும் லேசாகதான். அன்பால் திருத்துவதில் வல்லவர். மாணவர்கள் வெறும் புத்தகபுழுவாக மட்டும் இருக்ககூடாது என நினைப்பவர். நான் படிக்கும் போது ஆனந்தவிகடனில் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் கவிதை நாவல் தொடராக வந்தது. அதை எனக்கு அறிமுகம் செய்து வாரம் வாரம் விகடன் வாங்கிவந்து படிக்க சொல்வார்.

விகடனில் வந்த 3D படங்களை வெறும் கண்ணால் எப்படி பார்ப்பது என கற்றுத்தந்தார். புத்தகத்தில் உள்ளதை அப்படியே வாசிக்கும் சிலருக்கு மத்தியில் முதலில் பாட சம்பந்தபட்ட ஆனால் அன்றாட வாழ்வில் நடக்கும் சில விஷங்களை நகைசுவையாக விலக்கிவிட்டு பின்பு பாடத்திற்குள் செல்வார். இதனால் பாடத்தில் கவனம் அதிகமாகும். இப்போது நானும் இந்த விதத்தில் தான் நடத்துகின்றேன். இவர் தந்த ஆர்வத்தினால் தான் பள்ளி முதல் கல்லுரி வரை கணக்குபதிவியலில் முதல் மதிப்பெண் எடுக்க முடிந்தது. இன்றும் நான் புதிதாக வகுப்பு எடுக்க ஆரம்பித்தால் இவரை பற்றி சொல்லிவிட்டுதான் துவங்குவேன்.

NSS ல நான் இல்லை என்றாலும் நான் அசைப்பட்டதிர்க்காக NSS  முகாமில் கலந்துகொள்ள அனுமதித்தார். இப்போது மிகவும் பிரபலமாக உள்ள நாகநாதன் கோவில் (கேது ஸ்தலம்) அப்போது பாழடைந்து கிடந்தது , அவர் தலைமையில் சென்ற நாங்கள் அதை சுத்தம் செய்தோம்.

பல வருடங்களுக்கு முன்பு படித்த எங்களை கூட என்னும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நாபக சக்தி உள்ளவர். 

நாளை அவர் ஒய்வு பெரும் தினம். இவரது ஒய்வு அந்த பள்ளிக்கு கண்டிப்பாக இழப்புதான். இனி வரும் வருடங்கள் இவருக்கு இன்பமாகவும் , நல்ல உடல் நிலையுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் வாருங்கள்.

20 comments:

  1. வணக்கம் பாஸ் உங்கள் ஆசிரியரை நினைவு கூர்ந்தமை மிகவும் சிறப்பானது.உங்கள் பதிவை படித்தால் அவர் மிகவும் சந்தோசம் அடைவார்

    ReplyDelete
  2. எனக்கும் இதே துயரம் இருந்திருக்கிறது ராஜா...

    ஒவ்வொறு பள்ளிக்கும் இதுபோன்ற ஒரு அபூர்வமானவர்கள் கண்டிப்பாக கிடைத்துவிடுகிறார்கள்...

    இவர்களின் ஓய்வு கண்டிப்பாக வருத்தமே...

    கண்டிப்பாக இவரிடம் கல்வி பயண்ரவர்கள் இவரைப்போன்று வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...

    நீங்களும்தான்...

    அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்..

    ReplyDelete
  3. அவருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனி வரும் வருடங்கள் இவருக்கு இன்பமாகவும் , நல்ல உடல் நிலையுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்

    ReplyDelete
  5. ஆசிரியரை நினைவுகூர்தல் நல்ல விஷயம், இன்று ஓய்வு பெரும் அவருக்கு எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. இவர் போன்ற ஆசியரிர்களுக்கு மனதார வாழ்த்துவோம் ...
    ஆண்டவன் அருளினால் வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  7. நல்ல ஆசிரியரை நாம் மறப்பதில்லை...நல்ல மாணவனை ஆசிரியர்களும் மறப்பதில்லை!

    ReplyDelete
  8. ஆசிரியர்கள் மதிக்கபடவேண்டியவர்களே..

    ReplyDelete
  9. இன்று ஓய்வு பெரும் அவருக்கு எனது வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. அருமையான, அவசியமான பதிவு.
    உங்கள் ஆசிரியரை வணங்குகிறேன்.
    இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ஆசிரியரை நினைவுகூர்ந்து பதிவு எழுதியது சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Coming Soon...
    http://faceofchennai.blogspot.in/

    ReplyDelete
  13. உங்கள் ஆசிரியரின் ஓய்வு காலம் சந்தோசமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன் ! நினைவு கூர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  14. உங்க ஆசிரியரை பற்றி கூறி எங்களையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  15. The best teacher we ever had. God bless him.

    ReplyDelete
  16. மாணவர்களிடம் நன்மதிப்பைப் பெற்றவரே நல்லாசிரியர்.
    அந்த வகையில் உங்களுக்குப் பாடம் புகட்டிய RS அவர்களும் நல்லாசிரியர் தான்!

    ReplyDelete
  17. I really enjoyed reading your blog, you have lots of great content.
    If you are among the queue to search responsible and proficient Packers And Movers Pune constantly then you are advised to do nothing except hanging out with friends as Best Movers Packers Pune
    http://thebusinessplace.in/packers-and-movers-pune-to-chennai

    ReplyDelete
  18. Thanks for sharing useful information for us.
    Most Trusted and Reasonable Packers and Movers in Patna… Ensured!
    Visit here: @ Packers And Movers Patna
    Packers And Movers Chhapra
    Packers And Movers Madhubani

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...