> என் ராஜபாட்டை : TATA DOCOMO : சில திருட்டுதனங்கள்

.....

.

Thursday, April 18, 2013

TATA DOCOMO : சில திருட்டுதனங்கள்






கடந்த முன்று வருடங்களுக்கு முன் TATA DOCOMO PREPAID SIM வாங்கினேன் . கால் கட்டணங்கள் வினாடிக்கு அரை பைசாவும் , SMS இலவசமாகவும் இருந்ததால் அதையே பயன்படுத்தினேன் . மற்ற நிருவனகளுடன் ஒப்பிடும் போது BOOSTER PACK மிகவும் கம்மி .( வோடபோன் இல் 225 ரூபாய் உள்ளது இதில் வெறும் 52 ரூபாய் தான் ). ஏதேனும் குறை என்றால் 198 க்கு அடித்தால் உடனே சரி செய்வார்கள் , தவறாக எடுத்த பணத்தை உடனே கொடுப்பார்கள் .

ஆனால் இப்பொழுது ???

நிகழ்ச்சி 1:

CALLER TUNE நான் கேட்காமல் வைத்து விட்டு 120 ரூபாய் எடுத்தார்கள் , புகார் செய்ததும் 30 திருப்பி கொடுத்தனர் . மீதி இரண்டு நாளில் கிடைக்கும் என்றனர் . இரண்டு நாள் கழித்து கேட்டதும் மீண்டும் அதே பதில் இன்னும் இன்ரண்டே நாள் என்று . மறுபடி கேட்ட பொழுது தவறாக எடுக்கபட்ட பணம் இரண்டு நாளில் திருப்பி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான் . திரும்ப அளிக்க எங்களுக்கு உரிமையில்லை என சொன்னார்கள் . அரை மணிநேரம் அவர்களுடன் வாதிட்டு பணத்தை திரும்ப பெற்றேன் .




நிகழ்ச்சி 2:

கடந்த மாதம் தினம் ஒரு ஜோக் என சொல்லி 10 ரூபாய் எடுத்தனர் . புகார் செய்த போது நீங்கள் SMS முலம் ACTIVATE செய்து உள்ளிர்கள் . இது உங்கள் தவறு என்றனர் . நான் SMS செய்யவில்லை என வாதடியபின் பணத்தை திருப்பி அளித்தனர் .
அடுத்தநாள் தினம் ஒரு ஆபர் என சொல்லி 30 ரூபாய் எடுத்தனர் . மீண்டும் புகார் செய்ய நீங்கள் GPRS பயன்படுத்தி உள்ளிர்கள் என சொன்னார்கள் . என் மொபில் பேசிக் மாடல் அதில் அந்த வசதி இல்லை என்றதும் சரி என சொல்லி 20 ரூபாய் திருப்பி தந்தார்கள் . மீதி 10 எங்கே என்றதுக்கு ஒருவருக்கு மாதத்திற்கு 30 மட்டுமே திருப்பி அளிக்க முடியும் என்றால்கள் .

இது என்ன கதை எடுப்பது எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் கொடுப்பது முப்பதுதானாம் . ஒருவாரம் தொடர்ந்து வாதாடினேன் .
விளைவுகள் :

  1. முன்று வருடமாக இலவசமாக இருந்த SMS பைசாவாக மாற்ற பட்டது .
  2. கால் கட்டணம் 1.2 / S  என மாறியது ( BOOSTER போட்டும் )
  3. எந்த BOOSTER போட்டாலும் பணம் போகுமே தவிர அதன் பலன்கள் கிடைக்காது .

சில கேள்விகள் :

  1. எனக்கு ஒரு BOOSTER APLICABLE ஆகாது என்றால் எப்படி பணத்தை மட்டும் எடுத்து கொண்டு இது உங்களுக்கு கிடையாது என சொல்லலாம் ?
  2. ஒரு BOOSTER போடும் போது முன்பு உள்ள BOOSTER தானாகவே செயல் இழந்து விடும் . இதுதானே அனைத்து நிறுவனங்களின் நடைமுறை .
  3. வாடிக்கையாளரின் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் மாதம் 30 மட்டுமே திருப்பு தருவோம் என்பது பகல் கொள்ளை அல்லவா ?
  4. தவறாக ACTIVATE செய்யபட்ட சர்வீசும் 24 ம்ணி நேரத்திர்க்குள் 155223 என்ற எண்ணின் மூலம் DEACTIVATE செய்யபட்டால் முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என்பது TRAI விதிமுறை . அதை எப்படி மீறுகின்றனர் ?
  5. ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒருதடவைதான் 198 சேவையை பயன்படுத்தலாமா ?( DOCOMO CUSTOMER TRY பண்ணிபாருங்க இரண்டால் தடவை முயற்சி செய்தால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி பிஸியாக உள்ளார் என வரும் )
  6. வாடிக்களையாலரை கேட்காமல் எப்படி SMS மூலம் ஒரு சேவையை அவர்களே ACTIVATE செய்யலாம் . SMS படிக்க தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ?

என்ன தீர்வு ?

நண்பர்களே இதுக்கு என்ன தீர்வு ? இதை முடிந்த அளவு FACEBOOK இல் SHARE  செய்யுங்கள் . உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் . இதுபோல உங்களுக்கு எதாவது நேர்ந்துள்ளதா ?







12 comments:

  1. ஆமா சார் எனக்கும் எதாவது காரணம் சொல்லி திருடிருவாங்க கால் பண்ணி சண்டை போட்டதும் திருப்பி தரங்க டோகோமோல மட்டும் தான் வாங்க முடிஞ்சது அதே மத்த சர்வீஸ் ல 10 பைசா கூட வாங்க முடியல்ல

    ReplyDelete
    Replies
    1. Try in their official FB page...
      I got monry through Fb in airtel....

      Delete
  2. மற்ற சர்வீஸ்களை விட இது எவ்வளவோ பரவாயில்லை என்று இருந்தது... இவர்களும் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் போல...

    SMS படிக்க தெரியாதவர்கள் / தெரியாதவர்கள் என்று யாராக இருந்தாலும்... கைபேசி எடுத்தவுடன் நாம் end அல்லது back key-யை பெரும்பாலும் பயன்படுத்துவோம்... அதை தவிர்த்தால் இந்த தொல்லையை தவிர்க்கலாம்... இது போல் sms வரும் போது அந்த கீயை அழுத்தி போனை எடுக்கும் போது, அந்த sms ok ஆகி அந்த நிமிடமே கொள்ளை ஆரம்பித்து விடுகிறது...

    ReplyDelete
  3. ராஜா...
    donot distrub யூஸ் பண்ணுங்க... பிரச்சனை பெருமளவு குறையும்..

    நான் சிம் வாங்கியவுடன் முதலில் செய்வது DND activate

    அடுத்து, sms இல் இன்டர்நெட் டவுன்லோட் லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்தால் இன்டர்நெட்-க்குள் நுழையாதவாறு setting மாற்றுதல்...

    உங்க மொபைலை வேறு யாரும் உபயோகிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். முக்கியமா, கேம் பைத்தியங்களிடம் மொபைலை தராதீர்கள்...

    இப்போ வர்ற கேம்ஸ் பெரும்பாலும் இன்டர்நெட்டுடன் தொடர்புடையவை.

    இன்னும் சொல்லிட்டே போகலாம்....

    நம்ம மொபைல்ல மொத்ததுல நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும்....

    ReplyDelete
  4. எனக்கும் இது போல ஒரு முறை நேர்ந்தது,முதலில் பேசிப்பார்த்து வேலைக்காகவில்லை,அப்புறம், listen@tatadocomo.com கு mail அனுப்பியும் சரியான தகவல் இல்லை,பிறகு appellate.tn@tatadocomo.com கு எல்லா விபரங்களையும் சொல்லி ஒரே ஒரு மெயில் அனுப்பினேன்,அடுத்த நாள் அவர்களிடமிருந்து கால் வந்தது,பிரச்சினை தீர்ந்தது,ஆனால் தீர்வு கிடைக்க கிட்டத்தத்ட் ஒரு மாதமானது.கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல.,

    ReplyDelete
  5. இப்போது பி.எஸ் என் எல் லிலும் இதுபோல ஆரம்பித்து விட்டார்கள்! மொட்டை அடிக்காமல் விடமாட்டார்கள் போல!

    ReplyDelete
  6. எல்லா கம்பெனியிலும் இந்தக் கொள்ளை உள்ளது
    குறிப்பாக நான் பயன்படுத்தும் ரிலையன்ஸ் மற்றும்
    ஏர்டெல்லிலிலும்...
    விரிவான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. ஏர்டெல் ப்ரீபெய்டில், ஏதாவது சர்வீஸ் உள்ளதா (கிரிகெட்,ரிங்டோன்..இப்படி) என்பதற்கு ஒரு ஆப்சன் உண்டு அதில் பார்த்தால் எந்த சர்வீசும் இல்லை ஆனால் 28 ரூபாய் பிடித்ததாக (ஐபிஎல் ஸ்கோர்) ஒரு எஸ் எம் எஸ் வந்தது. சண்டைபோட்டு திரும்ம பெறவேண்டியிருந்தது அதிக பணம் ரீசார்ஜ் செய்திருப்பவர்களுக்கு அல்லது ஆங்கிலம் தெரியாதவர்கள் பணம் ஸ்வாகாதான்.இன்னும்.. தொடர்பாளரிடம் பேசுவதற்கும் ஒரு சார்ஜ் பிடித்தமும் உண்டு.

    ReplyDelete
  8. தமிழ்வாசி சொன்னார் donot distrub ... இந்த சர்வீஸ் ஆக்டிவேட் ஆக 1 அல்லது 2 நாள் ஆகுமாம் ஆனால் நமக்கு தெரியாமல் பிடிக்கும் எந்த சர்வீஸும் உடனே ஆக்டிவேட் என்பது எப்படி?

    ReplyDelete
  9. முதலில் அதிக பயனாளர்களை சேர்த்து விட்டு ..

    பின்னர் கொள்ளை அடிப்பதே இவர்களது பாலிசி .

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...