ரெட் ஜெயன்ட்
வெளியிடு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பை கிளப்பியாதால் இந்த படம் பார்க்க போனேன்
. தியட்டரில் 6 மணிக்கு படம் ஆனால் 6.15 க்குதான் போனேன் . உள்ளே என்னை சேர்த்து
மொத்தம் 6
பேர் தான் . நமக்கு நேரம் சரியில்லை என நினைத்து படம் பார்க்க துவங்கினேன் .
கதை
ஒரே நாளில் நடக்கும் கதை . ஹீரோ
நவீன் வில்லன் வட்டி ராஜா விடம் வாங்கிய கடன் , தங்கை கணவனுக்கு தரவேண்டிய வரதடசனை
இவை இரண்டையும் மாலை 5 மணிக்குள்
தரவேண்டும் இத்துடன் தன் காதலி தனக்காக வீட்டை விட்டு வந்துவிட அவளை அவள் தோழி
வீட்டில் இருக்க சொல்லி 5 மணிக்கு அழைத்து
செல்கிறேன் என சொல்கிறான் . வேறு ஒருவன் தர வேண்டிய பணத்துக்காக தவறுதலாக ஹீரோயினை
கடத்தி 5 மணிக்குள் வட்டி ராஜா பணம் கேட்க
இவை அனைத்தும் எப்படி முடிகிறது என்பதுதான் கதை .
+ பாயிண்ட்
- ஹீரோ , ஹீரோயின் என அதிக புது முகங்கள் . (இதுவே – பாயிண்ட் )
- தேவையில்லாத பாடல்கள் இல்லாதது .
- பஞ்ச் டயலாக் , குத்து பாட்டு , இரட்டை வசனம் ஏதும் இல்லாதது .
- 1 மணி 57 நிமிடத்தில் படத்தை முடித்தது .
- இறுதியில் வரும் நாசர் பேசும் வசனங்கள் .
- படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஒரே சம்பவத்தில் தொடர்புடையதாக காட்டும் யுக்தி .
- காதல் காட்சிகளை வள வள என இழுக்காமல் முடித்தது .
- கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் .
- பாயிண்ட் :
- சரியான விளம்பரம் இல்லாததால் இப்படி ஒரு படம் வருவதே தெரியவில்லை .
- நாசர் வில்லனா , காமெடியனா என தெளிவில்லாமல் உள்ள குழப்பம் .
- ஹீரோ ஆரம்பத்தில் வேலை போய்விட்டது என்கிறார் , ஆனால் அடுத்து போகும் நேர்முக தேர்வில் முன் அனுபவம் இல்லை என்கிறார் எப்படி ?
- ஒரு I T கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு 50,000 ரூபாய் ஒரு பெரிய தொகையா ?
- ஒளிப்பதிவு ஆரம்பத்தில் சில இடங்களில் டல்லாக உள்ளது .( தியட்டர் சரியில்லையோ ??)
- பின்னணி இசை சில காட்சிகளில் வசனத்தை மறைக்கிறது .
முடிவா !!!!!
படம் துவக்கம் மிக மெதுவாக போகிறது ஆனால் இடை
வேலைக்கு பின் வேகமாக உள்ளது .
“நேரம் “ (தியட்டரில்) இருந்தால் பார்க்கலாம் .
ஆனந்த விகடன்
மார்க் : 36
குமுதம் :
பரவாயில்லை
ராஜபாட்டை
மதிப்பீடு : 2.5 / 5
Tweet |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்