> என் ராஜபாட்டை : விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ???

.....

.

Tuesday, May 21, 2013

விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ???
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து மாஸ் என்றால் அது விஜய் தான் . சமிபத்தில் வந்த துப்பாக்கி படம் 100  கோடியை தாண்டி வியாபாரம் ஆனது . அடுத்து தலைவா என்ற படத்தில் நடித்து வருகிறார் .
தலைவா படம் விஜயின் அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என சொல்லபடுகிறது . இந்த படத்தில் மக்கள் போற்றும் தலைவனாக விஜய் நடிக்கிறார் என சொல்கிறார்கள் .
 
அரசியல் ஆசை விஜயை விட அவர் அப்பாவுக்கு அதிகம் உண்டு . கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அதரவாக விஜய் ரசிகர்களை களம் இறக்கினார் . அடுத்து நாடாளுமன்ற தர்தல் வருகிறது . இந்த நேரத்தில் விஜயின் பலத்தை காட்ட வேண்டும் என நினைத்து தான் தலைவா படம் உருவாகிறது என சொல்கிறார்கள் . 

 சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச திருமணம், படிப்பு உதவி என்று சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் திருச்சியில் 15 ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி, 51 சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

அப்போது அவரிடம் நீங்கள் செய்து வரும் சமூக பணிக்கு பின்னணியில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் ஏதேனும் உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜய், ஏழைகளுக்கு உதவி செய்வதால், என் மனசுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது.

அதனால் தான் தொடர்ந்து என்னால் இயன்ற அளவு ஏழை மக்களுக்கு உதவி வருகிறேன் என்றும் இதற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
ஆனால் நேற்று சில ஊடகங்களில் விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியல் நுழைந்து மக்கள் சேவை செய்ய போவதாக வந்துள்ளது . ஆனால் இது உறுதிபடுத்த படாத தகவல்தான் . விஜய் சினிமா , அரசியல் இரண்டிலும் கலக்க வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் ஆசை .
 
ஆனாலும் அவர் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை . ரஜினி போல இல்லாமல் ஏதாவது ஒரு சரியான முடிவு எடுப்பார் என அவர் ரசிகர்கள் நம்புகின்றனர் . பார்ப்போம் என்ன நடக்க போகிறது என ? 

இதையும் படிக்கலாமே ?
 
இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் . 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 
தத்துவம் மச்சி தத்துவம்

11 comments:

 1. என்னடா இவரு திருந்தி மறுபடியும் கொஞ்சம் உருப்படியான படங்களில் நடிக்க ஆரம்பிச்சுட்டாறேன்னு நினச்சேன். இவராவது திருந்துறதாவது? சிலபேருக்கு பட்டால்தான் புரியும். இவரும் அந்த மாதிரிதான். நமக்கென்ன. பதிவுகளில் கலாய்க்க அடுத்து ஒரு விஜய் படம் ரெடி.

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் கலாய்க்க ரெடி பாஸ்...

   Delete
 2. ரஜினிக்கு அடுத்த மாஸ் ... பதில் மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது :-)

  ReplyDelete
 3. விஜய் நடிப்பதை விட்டுவிட்டாலே மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகும்...

  ReplyDelete
 4. ரஜினிக்கு அடுத்த மாஸ் விஜயா? தம்பி விஜய் பான்ஸ்ல எத்தனைபேருக்கு ஓட்டுப்போடுற தகுதி(வயது) இருக்கெண்டு சொல்லுங்கையா முதல்ல....

  ReplyDelete
 5. மீண்டும் ஒரு நடிகர் அரசியலிலா! வெளங்கிரும்!

  ReplyDelete
 6. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 7. அரசியல் கோமாளியாய் ஆகமலிருந்தால் சரி

  ReplyDelete
 8. எப்படியோ நல்லது செய்தால் சரி..அவர் அரசியலுக்கு வந்தால் நிறைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு சீரழியவும் வாய்ப்பு உள்ளது..நாடு என்னும் குடும்பத்திற்காக உழைத்தால் சரிதான்.

  ReplyDelete
 9. rajenikku atutha masna vijaythan political vendam vijay sir ungalukku sinima thuraiyel ungalukku vetri vaippu neraiva erukkintrathu ungaludai nadippu rajinikku atuthapadi athutha superstar vijay sir anukku confident

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...