> என் ராஜபாட்டை : மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

.....

.

Monday, May 6, 2013

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு



+2 தேர்வு முடிவுகள் வியாழன் ( 9-5-13)  அன்று வருகின்றது. நன்றாக படிக்கும் மாணவன் முதல் , பாஸ் பண்ணினா போதுன் என நினைக்கும் மாணவன் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவர்களை விட அதிக ஆவலுடன் மற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் பெற்றோர்கள். தன மகனை அடுத்து என்ன சேர்ப்பது , எங்கே சேர்ப்பது என கனவு கண்டுகொண்டு இருப்பவர்கள். இவர்கள் இருவார்க்கும் சில வார்த்தைகள் ....

மாணவர்களே ...

நல்ல மதிப்பெண் பெற்றால் அல்லது எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் வந்தால் எவ்வளவு சந்தொஷமடைகிரோமோ அது போல மதிப்பெண் குறைந்தால் கவலைபடாதீர்கள் . சிலர் ஒரு மார்க் குறைந்ததுக்கு பல நாட்கள் அழுது பார்த்துள்ளேன்.

மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தேர்வில் தோல்வி  வெற்றியை தவரவிட்டாலோ மனதை தளரவிடவேண்டாம். தேர்வு முடிவு வந்த அடுத்த 15  நாட்களில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம. வெற்றி தள்ளி போய் உள்ளதே தவிர கிடைக்காமல் போகாது.

தப்பி தவறி கூட தற்கொலை என்ற முட்டாள் தனமான , தவறான முடிவை எடுக்காதிர்கள். இந்த தேர்வில் தோற்றால் மறுபடியும் வெற்றி பெற வாய்ப்புண்டு ஆனால் உயிர் போனால் மீண்டும் வராது. உங்கள் மேல் பாசம் வைத்து உங்களையே உலகமாக நினைத்து வாழும் பெற்றோரை  ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள், வாழ்வில் மதிப்பெண் மட்டுமே முக்கியமில்லை. படிக்ககாத , தேர்வில் பாஸ் ஆகாத பலர் வாழ்கையில் முன்னேறிஉள்ளனர் ( தோணி B.Com ல இன்னும் பாஸ் செய்ய முடியலை, டெண்டுல்கர் 10 வகுப்புடன் நிறுத்திவிட்டார் )

பெற்றோருக்கு ..

பையன் நல்ல மதிப்பெண் பெற்றால் என் மகன் என பாசம் காடும் நீங்கள் அவன் மார்க் குறைந்தாலோ அல்லது பெயில் ஆனாலோ அதே பாசத்தை காட்டுங்கள். உங்கள் பாசத்தைவிட உங்கள் அரவணைப்பை விட அவனை தேற்றும் சக்தி வேறு இல்லை. உங்கள் ஒரு தவறான , அல்லது கோபமான சொல் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.

என் கல்வி அனுபவத்தில் DISTRICT FIRST, SCHOOL FIRST எடுத்தவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை அல்லது இன்னும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான். ஆனால் சாதரணமாக படித்தவன் , குறைவான மதிப்பெண் எடுத்தவன் இன்று பல உயர் பதவியில் உள்ளனர். (சாதாரண மார்க் எடுத்த என் மாணவன் இப்போது கப்பற்படையில் உயர் பதவியில் உள்ளான். )

மகனை மதிப்பெண் பெரும் இயந்திரமாக பார்க்காதீர்கள் . முக்கியமாக அடுத்த மாணவருடன் அல்லது மாணவியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவன் உங்களை அடுத்த குழந்தையின் அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?
கடைசியாக , அவன் மதிப்பெண் குறைய அவன் மட்டுமே காரணம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


டிஸ்கி : தேர்வு முடிவுகளை பார்க்க








7 comments:

  1. நல்ல ஆலோசனைகள்... பெற்றோர்களும் மாணவ மாணவியர்களும் உணர வேண்டியவை...

    தேர்வு முடிவு இணைப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
  2. நேரத்துக்கேற்ற பதிவு

    ReplyDelete
  3. வரும் முன் காப்போம் அவசியமான பதிவு

    ReplyDelete
  4. எந்த ஒரு மாணவனும் தோல்வியடைவதற்கு நிச்சயம் அவன் மட்டும் பொறுப்பல்ல..அவனுடைய பெற்றோரும்தான் என்பதை உணரவேண்டும்.

    ReplyDelete
  5. என்னைக் கூட உதாரணமா எடுத்துக்கலாம்... மார்க் கொறஞ்சதுக்கு நா அளவே இல்லையே :-)

    ReplyDelete
  6. நல்ல பதிவு ... தங்கள் பதிவை எனது தளத்தில் வெளியிட்டு உள்ளேன். பதிவை வெளியிட அனுமதி தந்ததுக்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...