> என் ராஜபாட்டை : உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

.....

.

Monday, June 10, 2013

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?





நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.

  1. கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.

  1. குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.


  1. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.

  1. குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.



  1. உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.

  1. உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.


  1. உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.


  1. அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


  1. அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.

  1. உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.


  1. நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.


மாடல் : சரண்

டிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.


இதையும் படிக்கலாமே :

 விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ...

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

14 comments:

  1. டிஸ்கி மிகவும் பிடித்திருந்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. \\\
    அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.\\\ Much Important!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி பாலா ...

      Delete
  3. உண்மை வாத்தியாரே...பல டாக்டருங்க சொல்றத எளிதா சொல்லிட்டிங்க.....ஏழாவது பாயிண்டிற்கு சமூக அமைப்பு அவர்களை ஒரு கட்டத்தில் மாற்றிவிடுகிறது.பெண்ணுரிமை வேறு கொடி பிடிக்கும்.இதை சமாளிப்பது இன்றைய இளம் பெற்றோருக்கு மாபெரும் பிரச்சினையே..

    சரணின் வரிசையான படங்கள் அருமை .....

    ReplyDelete
  4. கடைசி பன்ச் லைன் சூப்பரு!

    ReplyDelete
  5. Payanulla thagavalgal..Thanks...

    ReplyDelete
  6. வ்ல்லவனான புத்திசாலியான குழந்தையோட அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.
    >>
    சரண் அம்மாக்கிட்ட கேட்டாலும் பரவாயில்ல. உங்க அம்மாக்கிட்ட எப்படி கேக்குறதாம்?!

    ReplyDelete
  8. குழந்தை வளர்ப்பு பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! பயனுள்ள குறிப்புகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.//உண்மை தான்.

    ReplyDelete
  10. குழந்தை வளர்ப்பு பற்றி அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய பயனுள்ள குறிப்புகள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...