> என் ராஜபாட்டை : பேஸ்புக் ல அக்கௌன்ட் இருக்க ? அப்ப இது உங்களுக்குதான் ..

.....

.

Wednesday, November 2, 2011

பேஸ்புக் ல அக்கௌன்ட் இருக்க ? அப்ப இது உங்களுக்குதான் ..


சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், சில எதிர்மறையான விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அடுத்தவர்களின் கணக்குகளில் அத்துமீறி நுழைந்து, அந்த கணக்கிற்குரியவரின் தகவல்களை அழித்து அவர்பற்றிய தவறான கருத்துக்களை பரப்பும் நடவடிக்கை சில கயவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேஸ்புக் இப்போது பாதுகாப்பு வழிகளை இறுக்கிவிட்டாலும், இவ்வாறு திருட்டுத்தனமாக அடுத்தவர் கணக்கில் நுழைவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
இப்போது அடுத்த அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 600,000 திருட்டுத்தனமான நுழைவு முயற்சிகள் நடக்கின்றனவாம்.
அதுவும் சரியான பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்தே நுழைகிறார்களாம். ஆனால் பலர் தமது கணக்குகளிற்கு verification கொடுத்து வைத்திருப்பதால் கணக்கில் உள்நுழையமுடியாமல் வெளியேறியிருக்கிறார்கள். இந்த 600,000 என்ற கணக்கில் verification கொடுக்காமல் ஹக் செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை
ஆகவே எமது கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது எமது பொறுப்பு.
எப்படி கணக்கிற்கு verification கொடுப்பது?
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறவுங்கள்.  பின்னர் Account Setting இற்குள் நுழையுங்கள்
அதன் பின்னர் வரும் விண்டோவில் Security – Log in Approval என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் Setup Now என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும். இலக்கத்தை கொடுத்தபின், நீங்கள் கொடுத்த இலக்கத்துக்கு ஓர் இரகசிய குறியீட்டை அனுப்பிவைக்கும். அந்த குறியீட்டை கொடுத்ததும் சேமிக்கப்பட்டுவிடும்.
அவ்வளவுதான். இனி நீங்கள் உங்களது பயனர்பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுழையும்போது உங்கள் கைத்தொலைபேசிக்கு ஒரு தற்காலிக குறியீட்டு எண்ணை அனுப்பிவைக்கும். அதை உள்ளிட்டால்தான் கணக்கினுள் நுழைய முடியும். தொடர்ந்து பாவிக்கும் கணினியாக இருந்தால் இரகசிய குறியீட்டை கொடுக்கும்போது Save Device என்பதை தெரிவுசெய்துவிட்டால் அடிக்கடி கொடுக்கத்தேவையில்லை

நன்றி : வணக்கம் .நெட் 

30 comments:

  1. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


    .

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  3. உண்மைதான்.. நான் கூட செய்து வைத்திருக்கிறேன். இதைப்பற்றிய பதிவெழுதி மற்றவர்களக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி இராஜா..!

    ReplyDelete
  4. ஆறுமுகம் அலார்ட் ஆகிக்கோ...

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி மாப்ள..

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு.அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு உபயோகப்படும் நன்றி சகோ

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  9. முக நூல் கணக்கை அழிப்பது எப்படி, அப்படின்னு ஒரு பதிவு போடுங்க...

    ReplyDelete
  10. எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம்

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  11. தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி மக்கா...!!!!

    ReplyDelete
  12. தகவலுக்கும் பகிர்விற்கும் நன்றி சார் :)

    ReplyDelete
  13. எனக்கு அதில் கணக்கு இல்லை ,இருந்தாலும் சம்பந்தபடடவர்களுக்கு உபயோகமாக இருக்கும் நண்பரே

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  15. nanba en security settingsla login approval
    oru option illa enna seivathu

    ReplyDelete
  16. மிகவும் சிறப்பான தகவல் நண்பரே உளம் நிறைந்த பாரட்டுகள்

    ReplyDelete
  17. உபயோகமான தகவல். கூகிள் அக்கௌன்ட் அடிக்கடி இப்படி ஆகுது

    ReplyDelete
  18. என் கணக்கில் அப்படி ஒரு இடமே (Login Approval) வரவில்லையே நண்பரே

    ReplyDelete
  19. பகிர்விற்கு நன்றி சகோ. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  20. பகிர்விற்கு நன்றி! ஆனால் பாருங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணதோட சரி.

    ReplyDelete
  21. மிகப் பயனுள்ள பகிர்வு ராஜா சார்... மிக்க நன்றி.

    ReplyDelete
  22. super thagaval, kodanu kodi nandrigal

    ramakrishnan, kotagiri, the nilgiris, tamilnadu

    ReplyDelete
  23. மிகப் பயனுள்ள பகிர்வு.மிக்க நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...