> என் ராஜபாட்டை : ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்

.....

.

Saturday, January 11, 2014

ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்



செப்டம்பரில் நடந்த பதிவர் சந்திப்பின் போது இந்த புத்தகத்தை வாங்கினேன் . இதை பற்றி எழுதலாம் என பலமுறை நினைத்தும் முடியவில்லை .இபோதுதான் நேரம் கிடைத்தது .வாருங்கள் பதிவுக்குள் போகலாம் .




1991 MAY 21 அன்று ராஜீவ் கொல்லபட்ட பின் தமிழகத்தில் நடந்த , அந்த கொலை தொடர்பாக CBI மற்றும் இதர இலாக்காக்கள் விசாரித்த முறையில் இருந்த குறைகளை , தவறான நடைமுறைகளை பட்டியலிடுகிறது இந்த புத்தகம் .இதன் ஆசிரியர் கேட்கும் பல கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை . அல்லது சொல்ல முடியவில்லை .ஒரு மர்ம நாவலை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பல சஸ்பென்ஸ் இந்த ராஜீவ் கொலையில் உள்ளது . இன்றுவரை இதற்க்கு சரியான பதில் இல்லை . அதில் சில கேள்விகள் இதோ ...



  • ·         குண்டு வெடிப்பு நடந்த பொதுகூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடக்டர் இல்லையே ஏன் ?
  • ·         ராஜீவுடன் எப்போதும் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட அந்த குண்டு வெடிப்பில் பலியாகவில்லையே எப்படி ?
  • ·         டெல்லி செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சுப்பிரமணியசாமி ஏன் போகாமல் சென்னையில் தங்கினார் ?
  • ·         ராஜீவ் கொல்லபட்டதும் காணாமல் போன வாழப்பாடியார்  30 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்தார் . அதுவரை அவர் எங்கே சென்றார் ?
  • ·         ராஜேந்திர ஜெயின் என்பவர் ஜெயின் கமிஷன் முன் வாக்குமூலம் வழக்க வேண்டிய நாளுக்கு முதல் நாள் கொல்லபட்டது எப்படி ? ஏன் ?

  • ·         சிவராசனில் டைரியில் வாழப்பாடி ராமமுர்த்தி அவர்களை அடிகடி சந்தித்தகாக இருந்தது அதை ஏன் சி.பி.ஐ கண்டுகொள்ளவில்லை ?
  • ·         ராஜீவ் கொலையாகும் போது மூப்பனார் அங்கு இல்லை , ஏன் என கேட்டதுக்கு பீடி குடிக்க போனேன் என்றார் , இது உண்மையா ?
  • ·         கொலை சதியில் முக்கிய பங்கு உள்ளவர் என சந்தேகிக்கப்படும் ரோசையாவுக்கு முதல்வர் பதியும் இப்பொது தமிழக ஆளுநர் பதவியும் காங்கிரஸ் வழங்கியது ஏன் ?
  • ·         மனித வெடிகுண்டாக இருந்த தானுவை காரில் அழைத்துவந்தது மரகதம் சந்திரசேகரின் மகள் லதாபிரியா . ஏன் அவர் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் வரவில்லை ?
  • ·         மே 21 (கொல்லபட்ட நாள் ) அன்று மாலை 5 மணிக்கு மேல் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்டாலின் ஏன் ரத்து செய்தார் ?

  • ·         போட்டோகிராபர் அரிபாபு என்பவர் விடுதைபுலிகளின் ஆதரவாளர் என சீ.பி.ஐ சொன்னது . ஆனால் அவர் எடுத்த புகைப்படங்கள் மூலமாகத்தான் கொலையாளிகள் படம் தெரிந்தது . கொலையாளிகள் எப்படி புகைபடகாரரை துணைக்கு வைத்துகொள்வார்கள் ?
  • ·         வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிகொடுத்ததுக்கு பேரறிவாளனுக்கு தூக்கு ஆனால் அந்த வெடிகுண்டை செய்து கொடுத்தது யார் என இதுவரை கண்டுபிடிக்காதது ஏன் ?
  • ·         காந்தியடிகள் , இந்திரா போன்றோரின் கொலை வழக்கை பகிரங்கமாக நடத்திய இந்திய அரசு ராஜீவ் கொலைவழக்கை மட்டும் ரகசியமாக நடத்தியது ஏன் ?

  • ·         மதுரை சி.பி.ஐ நகரமன்ற உறுப்பினர் லீலாவதி கொன்றவர்களை 7 வருடத்தில் விடுதலை செய்த அரசு நளினியை மட்டும் இன்னும் ஏன் விடுவிக்கவில்லை ?
  • ·         காந்தியை கொன்ற கோட்சேக்கு கூட 11 ஆண்டுகள் மட்டும்தான் தண்டனை கிடைத்தது ஆனால் பேரறிவாளம், நளினிக்கு ?
  • ·         இந்த கொலைவழக்கின் முக்கிய ஆவணங்கள் ப .சிதம்பரம் வசம் இருந்த போது எப்படி காணாமல் போனது ?

  • ·         ராஜீவ் கொலைக்கு காரணம் சோனியாதான் என சுப்பிரமணிய சாமி ஒரு புத்தகமே வெளியிட்டு உள்ளார். ஏன் காங்கிரசார் அதை பற்றி கண்டுகொள்ளவில்லை ?

இதுபோல பல நூறு கேள்விகள் கேட்க்கபட்டு உள்ளது ஆனால் பதில்தான் இல்லை .


நூலின் தொகுப்பாசிரியர் : தமிழன் பாபு
வெளியிடு : வள்ளலார் பதிப்பகம் 
        (டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும் )
விலை : 60

5 comments:

  1. சார் இது போல் எண்ணற்ற வினாக்களுக்கு விடையில்லாமல் தான் இன்னும் இருக்கிறது .. என்ன செய்ய ? தமிழன் வாங்கி வந்த வரம் அப்படி

    ReplyDelete
  2. ராஜீவ் கொலை ஒரு விடை தெரியா வினோதம்! பகிர்வுக்கு நன்றி! புத்தக சந்தைக்கு வரும்போது புத்தகம் வாங்கலாம் என்று நினைக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு.கொழும்பில் கிடைக்குமோ தெரியவில்லை தேடிப் பார்க்கணும்

    ReplyDelete
  4. இதைப் பற்றி ஜூனியர் விகடனில் பகிரங்கமான தொடர் வந்து படிச்சேன்....அதிலும் இதே கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...