> என் ராஜபாட்டை : தீவிரவாதிகள் பிடியில் பதிவர்கள்.

.....

.

Saturday, September 24, 2011

தீவிரவாதிகள் பிடியில் பதிவர்கள்.
ஒரு கட்டிடத்தில் நமது பதிவர்கள் சந்திப்பு நடக்கிறது. அந்த சமயத்தில் ஒரு தீவிரவாதி உள்ளே புகுந்து அனைவரையும் பிடித்து கொள்கிறான். அந்த நேரத்தில் அவர்கள் ரியாக்ஷன் அப்படி இருக்கும் என ஒரு கற்பனை.

சீனா : நாம வேனா வாரம் ஒருத்தரை தீவிரவாதியிடம் பேச்சுவார்த்தை
        நடத்த அனுப்பலாமா?

சித்ரா : ஐயா.. இது வலைசரம் இல்லை.. கொலை சரம்.

சீனா : நீ போய் ஒரு டான்ஸ் ஆடு. அதை பார்த்து அவன் பயத்துல
        செத்துடுவான். நாம தப்பிச்சுடுலாம்.

கூடல் பாலா: அய்யோ ! வேண்டாம்.. பில்டிங் கொஞ்சம் பழசு.. நான் வேணா
         தீவிரவாதிக்கு எதிரா ஒரு போராட்டம் நடத்தட்டா?

சீனா : 2 நாளாதான் போராட்டம் நடத்தாம இருக்க.. வேண்டாம் விடு.

வேடந்தாங்கல் கருன் : நான் வேனா ஒரு கவிதை சொல்லட்டா?

சீனா : கவிதை வேண்டாம் . அவங்கிட்ட போய் ஒரு 2 மணி நேரம் வகுப்பு
        எடு. அவன் தானே ஒடிடுவான்.

வேடந்தாங்கல் கருன் : நம்ம சி.பி எங்கே ?

சீனா : புதுசா கண்னடிக்கும் கன்னி” னு ஒரு கில்மா படம் வந்து இருக்கு. அத பார்த்து விமர்சனம் எழுத போயிருக்கார். வாங்க பலே பிரபு நீங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்க ?

பலே பிரபு : நான் அந்த தீவிரவாதியின் பயோடேட்டா வை வாங்கி என்
               வலையில் போடவா ?

சீனா : நீ ஒன்னும் போடவேண்டாம். அதோ வந்தேமாதரம் சசி வாரார்
        அவர்கிட்ட கேட்போம்.

சசி : வைரஸ்களிடம் இருந்து தப்பிபது எப்படி தெரியுமா ?

கருன் : முதலில் தீவிரவாதியிடம் இருந்து தப்பிபது எப்படினு சொல்லு ?

சசி : ஆண்டி வைரஸ்…….

சி.பி : என்னது ஆண்டியா ? எங்கே?

சசி : யோவ்.. நான் சொன்னது ANTI VIRUS

சி.பி ; அதோ விக்கி தக்காளி வாரான். அவங்கிட்ட கேட்போம்.

விக்கி : என் குட்டிசுவர் தொடரை படிக்க சொல்லுவோம். அத படிச்சுடு
          அவன் எப்படி உயிரோடு இருப்பானு பார்கிறேன்.

ரமேஷ் : நம்ம டெர்ரர் கும்மி குருப்பை விட்டு கலாய்க சொல்லலாமா?

சி.பி : 4 நாள் கழித்து கொல்லுரவன் உடனே கொன்னுடுவான்.

நாஞ்சில் மனோ : நான் என் லேப்டாப் வச்சு எதாவது பண்ணடா ?
கவிதைவீதி சௌந்தர் : வேண்டாம் . அப்புறம் நான் கவிதை சொல்லி உன்னை கொன்னுடுவேன் .
                                 சரி எங்கே நம்ம தமிழ்வாசி ?
நாஞ்சில் மனோ : அவர் எப்பவோ ஆதிவாசியா போய்டார் .

கவிதைவீதி சௌந்தர் : சரி பன்னிகுட்டி ராமசாமி எங்கே ?

நாஞ்சில் மனோ : அவர் பூமிய தேடி போய்டார் .

கருன் : அங்க பாருங்க.. நம்ம FOOD திவிரவாதிக்கு எதோ குடிக்க குடுத்தார் . அவன் மயங்கி விழுந்துடான்.

சி.பி. : வெரி குட், FOOD. எப்படி உனக்கு மயக்க மருந்து குடுக்குற ஐடியா
        வந்தது ?

FOOD :  ஐயோ ! ! நான் மயக்க மருந்து குடுக்கல.

கருன் : பின்னே என்ன குடுத்த ?

FOOD : நான் தயாரிச்ச சூப்பைதான் குடுத்தேன்.

எல்லாரும் மயக்கம் அடித்து விழுகின்றனர்.

டிஸ்கி 1: சீனா ஐயா கோவித்துகொள்ள கூடாது.

டிஸ்கி 2: சிரிப்பு வரலைனா நான் பொருப்பு இல்லை

டிஸ்கி 3: இதில் இடம்பெற்ற பதிவர்கள் தவறாக எடுத்துகொள்ளகூடாது.

இப்படிக்கு :  டிஸ்கி மேல டிஸ்கி போடும் சங்கம்.31 comments:

 1. என்கையா ஒட்டு பட்டைகள் இணைக்கவில்லையா?

  ReplyDelete
 2. ஆமா இப்போ சரி ஆயிரிச்சு..போட்டிட்டேன்!

  ReplyDelete
 3. //வேடந்தாங்கல் கருன் : நான் வேனா ஒரு கவிதை சொல்லட்டா?

  சீனா : கவிதை வேண்டாம் . அவங்கிட்ட போய் ஒரு 2 மணி நேரம் வகுப்பு
  எடு. அவன் தானே ஒடிடுவான்.//

  ஹா ஹா... செம காமடி

  ReplyDelete
 4. `ஹய்யோ...ஹய்யோ...சிரிச்சு சிரிச்சு வயிற்று வலிதான். காலையிலேயே நண்பர்கள் நிறைய காமெடி பதிவா போடுறீங்களே...இதென்ன நகைச்சுவை சனிக்கிழமையா??? கலக்குங்க ....கலக்குங்க...

  ReplyDelete
 5. எங்க இதுல ராஜபாட்டை ராஜாவை காணோம்

  ReplyDelete
 6. என்ன நக்கல் பண்ணா மதுரனுக்கு என்ன சிரிப்பு, ராஸ்கல் பிச்சுடுவேன், உன்னை இல்லை ராஜாவை..

  ReplyDelete
 7. மாப்ள கலாய்க்கறதுன்னு முடிவானதுக்கப்புரம் எதுக்கு சின்னதா பெருசா போடுய்யா....சண்டைக்கு வைய்டிங் ஹிஹி!

  ReplyDelete
 8. சூப்பர் காமெடி சார்

  ReplyDelete
 9. அவங்க எப்படியோ மயக்க மருந்து கொடுத்து தப்பிச்சிட்டாங்க, எங்களால தப்பிக்க முடியலையே.

  ஹா ஹா ஹா, கலக்கலான காமெடி...

  ReplyDelete
 10. சும்மா பட்டைய கிளப்பியிருகீங்க போங்க....

  ReplyDelete
 11. எலேய் விருமாண்டி, எட்றா அந்த வீச்சறுவாளை, எட்றா வண்டியை....ஹி ஹி தப்பிச்சி ஓடிருவோம், பயபிள்ளைங்க ஒரு மாதிரியா கிளம்பி இருக்கு...

  ReplyDelete
 12. பசங்க பட டயலாக் ஒன்று ஞாபகம்

  ”யோசன மஞ்சி வாண்டுத”

  படுத்திவிட்டு வாய்விட்டு சிரித்தேன் நண்பரே..

  நன்றி பகிர்விற்க்கு
  சம்பத்குமார்

  ReplyDelete
 13. இதற்குமுன் யாரும் சீனா சாரை கலாய்ச்சதில்லை.

  ReplyDelete
 14. பாவம் பதிவர்கள், தீவிரவாதிகள்கிட்ட தப்பிச்சுட்டாங்க... ஆனா.......

  ReplyDelete
 15. மொக்கை சூப்பர் மக்கா.......

  ReplyDelete
 16. இது மாதிரி ஒன்னு நடந்த பதிவுலகம் தப்பிக்கும...


  கலக்கு மச்சி.. கலக்கு...

  ReplyDelete
 17. பதிவர்கள்-ஆண்டவா!இந்த ராஜாகிட்ட இருந்து என்ன காப்பாத்து.இந்த தீவிரவாதிகள நாங்க பாத்துக்கிறோம்!
  ஹிஹி!

  ReplyDelete
 18. ஆஹா!!!!!!!!!! எல்லாம் ஓக்கே. உணவு உலகம் ஆஃபீசர் எல்லோருக்கும் சீனியர் என்பதால் அவரைப்[பார்த்து வா போ உரையாடலில் வாங்க போங்க என மாற்றவும்

  ReplyDelete
 19. இதோடு தீவிரவாதம் ஒளிஞ்சிடும்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...