இந்த பதிவு முழுவதும் நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க, பித்தளை) மகன் மனோ அவர்களை கலாய்த்து எழுதப்பட்டது.
மனோ பள்ளியில் படிக்கும் போது..:
ஆசிரியர் : ஏண்டா பிளம்பர்(plumber) கூப்பிட்டுகிட்டு வந்துருக்க?
மனோ : Qestion Paper லீக் ஆகுதானு செக் பன்ன..
( ஆசிரியர் அவுட்)
…………………………………………………………………………………….
ஆசிரியர் : முதல் மாசம் பிப்ரவரினா, 10 வது மாசம் என்ன ?
மனோ : டெலிவரி
………………………………………………………………………………….
ஆசிரியர் : உனக்கு எது மிகவும் பிடிக்கும் ? தமிழ் மொழியா? ஆங்கில மொழியா?
மனோ : இரண்டும் இல்லை.
ஆசிரியர் : பின்பு?
மனோ : உங்க பொண்னு கனிமொழியை தான் பிடிக்கும்
------------------------------------------------------------
மனோ தனது விடைதாளில் அணைத்து பதில்களுக்கும் ||||||||||||||||| என போட்டிருந்தார் அதன் கீழே அவர் எழுதினார்..
“ விடைகளை சுரண்டி தெரிந்து கொள்ளவும்”
…………………………………………………………………………..
காட்டில் சிபியும் மனோவும் சுற்றிபார்க்கும் போது ஒரு சிங்கம்( நான் இல்லப்பா..) வந்தது,
சிபி : மனோ Shoot பன்னு.. Shoot பன்னு..
மனோ : இருப்பா .. இப்பதான் கேமராவில் பேட்டரி போடுறேன்.
(மனோ புத்திசாலி…)
…………………………………………………………………………….
மனோவின் மகன்: அப்பா 5 + 3 எத்தனை ?
மனோ : முட்டாள் பய மகனே, அறிவில்லதவனே, இந்த சின்ன கணக்கு கூட தெரியில்ல நி படிச்சு என்ன கிழிக்க போற? இதுகூட தெரியாத நீ கருன் போல வாத்தியாராதான் போவ… சரி .. சரி போய் Calculator எடுத்துவா போட்டுகாட்டுறேன்.
………………………………………………………………………………..
மனோவின் மகன்: அப்பா.. முட்டாள் என்றால் யார்ப்பா?
மனோ : ஒரு விஷயத்தை மிக எளிதாக சரியான விளக்கத்துடன் எடுத்து கூறி ஒரு குழந்தை கூட புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டும். அப்படி புரியவைக்க முடியாதவந்தான் முட்டாள் .. புரிந்ததா?
மனோவின் மகன்: ஒன்னுமே புரியவில்லை
விக்கி : அந்த சைனீஷ் பொண்னுகிட்ட I Love You சொன்னியே என்ன ஆச்சு ?
மனோ : வேஸ்ட்.. அவ ஏற்கனவே இரண்டு பேர லவ் பண்றா போலிறுக்கு..
விக்கி : எப்படி சொல்லுற?
மனோ : I Love You too( 2) னு சொன்னாலே..
மனோ , விக்கி, சசிகுமார் மூவரும் ஒரு வங்கிக்கு செல்கின்றனர். எதிர்பாராதவிதமாக அங்கு கொள்ளை நட்க்கின்றது. கொள்ளைகாரனில் ஒருவன் விக்கியிடம்..
கொள்ளைகாரன் : இந்த கொள்ளையை நீ பாத்தியா?
விக்கி : ஆமா…( டூமில்.. விக்கி காலி)
கொள்ளைகாரன்( மனோ விடம்) : இந்த கொள்ளையை நீ பாத்தியா?
மனோ : இல்லை.. ஆனா சசி பார்த்தார்.
( என்ன ஒரு கொலைவெறி)
ஒரு குருப்பாத்தான் இருக்கோம்