நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.
- கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.
- குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.
- குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.
- குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.
- உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.
- உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.
- உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
- அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.
- அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.
- உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.
- நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.
இதையும் படிக்கலாமே :
அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ
Tweet |
இது கொஞ்ச நாளுக்கு முன்னமயே வந்திருந்தால் உங்க அம்மா அப்பா படிச்சி, யூஸ் பண்ணியிருப்பாங்க.
ReplyDeleteநல்ல நல்ல உபயோகமான குறிப்புகளை சொல்லியிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteஅருமையான கருத்துகள்..!!!
ReplyDeleteஎல்லா அம்மாக்களும் பிள்ளைகளை நல்லபடியாகத்தான் வளர்க்கிறார்கள். ஒரு சில பிள்ளைகள் வளர்ந்ததும் ஆட்டம் போட ஆரம்பிச்சிடறாங்க..(நிச்சயமா உங்கள சொல்ல வாத்யாரே..!!)
ReplyDeleteநம்பிடேன்
Deletekolaiya....kolluraarey...
ReplyDeleteஎல்லாம் நல்ல இருந்திச்சி ஆனா கடைசியில் சொன்ன ஜோக்தான் அருமை. ஹா ஹா ஹா
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteஅட................
ReplyDeleteசரிங்க
சரிதான் சார்...
ReplyDeleteகுறிப்பாக பெண் குழந்தைகள் உடை விஷயம் பற்றிய உங்களது கருத்து என்னுடன் நூறு சதவிகிதம் ஒத்து போகிறது... ஆடை குறைப்புதான் பெண் சுதந்திரம் என்பது போன்றும் நம்மை போன்றவர்கள் பென்னாதிக்கவாதி என்பது போன்றும் பரவலாய் சொல்ல படுகிறது.. பெண்களுக்கு வீரத்தை விட வெட்கம்தான் அழகு..
(அதிகபிரசங்கி என்று நினைப்பவர்கள் மன்னிக்கவும்...)