ஏன் மாணவர்களுக்கு புரிவதில்லை ?
பனிரெண்டாம் வகுப்பு பொது தெரிவில் கணித பாட வினா தாள் கடினம் என ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக படித்தேன். மார்க் மட்டும்தான் வாழ்க்கையா ? தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்றா அர்த்தம் ? அடுத்த பத்து நாட்களில் எழுதி வெற்றி பெறலாம் . ஆனால் உயிர் போனால் ? உங்களை கண்ணுக்கு கண்ணாக , உங்கள் மீது உயிரை வைத்திருக்கும் பெற்றோர்கள் படும் கவலையை கொஞ்சம் நினைத்தால் இந்த முடிவு எடுக்க மனசு வராது. நடிகர் நடிகை புகைப்படங்களை பர்ஸ் அல்லது நோட்டில் வைப்பதற்கு பதில் உங்கள் பெற்றவர்கள் புகைப்படத்தை வையுங்கள் , இது போல தவறான முடிவு எடுக்க தோன்றாது .
===========================================================================
பிடித்த வார்த்தை :
ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை
நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை
===============================================================================
உலகமகா புத்திசாலி
பா.ம.க கட்சியின் கோ.க . மணி ஒரு பேட்டியில் “ மின்சாரம் தயாரிக்க எளிதான வழி ஒன்று உள்ளது, ஒரு இயந்திரத்தை தண்ணி வர வழில வச்சா அது உருண்டு மின்சாரம் வர போகுது இது கூட இந்த அரசுக்கு தெரிவில்லை “
# பா.ம.க ஆட்சிக்கு வந்ததா என்ன என்ன புது திட்டம் வருமோ ?
===============================================================================
ரசித்த ஜோக் :
ஒரு படகில் கருணாநிதி குடும்பம் , ஜெயா , ராமதாஸ் , சோனியா , ராகுல் போறாங்க , அப்ப பயல் அடித்து படகு நடு கடலில் கவிழ்ந்து விடுகின்றது . இப்ப யார் பிழைப்பா ?
--
--
--
--
பதில் : தமிழ்நாடு
====================================================================================
ரசித்த பாடல் :
“வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு ...” வருங்கால தளபதி உதயநிதி நடித்த ஓகே .. ஓகே படத்தில் வரும் பாடல் இது .
“ கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா ... நமக்கு
கண்ணிற் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் நண்பன் போதும்டா “
- கலக்கல் வரிகள்
-
===================================================================================================
ரசித்த புகைப்படம் :
இதையும் படிக்கலாமே :
தெரியுமா உங்களுக்கு ....
அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ
Tweet |
கதம்பம் நல்லா இருக்குய்யா மாப்ள!
ReplyDeleteநன்றி நண்பா
Deleteம்ம்ம் சூப்பரா இருங்குங்க
ReplyDeleteரொம்ப நன்றிங்க
Deleteஈரம் இருக்கும் வரை
ReplyDeleteஇலைகள் உதிர்வதில்லை
நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
//பதில் : தமிழ்நாடு//
ReplyDeleteகடலில் போட்டாலும் கட்டு மரம் அல்லவா
//வருங்கால தளபதி உதயநிதி//
ReplyDeleteமுடிவு பண்ணீட்டீங்க போல........ம்
//உங்கள் பெற்றவர்கள் புகைப்படத்தை வையுங்கள்//
ReplyDeleteஇன்றைய சமூகத்துக்கு தேவையான அறிவுரை - வரவேற்கிறேன்
//////ஏன் மாணவர்களுக்கு புரிவதில்லை?////
ReplyDeleteதேர்வில் தோற்பதை உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு அவமானமாக கருதும் மாணவர்கள் அதை பற்றி முன்னமே யோசித்திருந்தால் நன்றாக படித்து தேர்ச்சியடைந்து விடலாமே. அதைப்பற்றி ஏன் மாணவர்கள் சிந்திப்பதில்லை. மில்லியன் டாலர் கேள்வி....?
தண்ணி வர்ர வழியில இயந்திரத்தை வைக்கிறதா? விஞ்ஞானி கண்டு பிடிச்சிட்டாரு! எல்லா அணையிலும் போய் பார்க்க சொல்லுங்க.....
ReplyDeleteதேர்வில் வெல்வது தேவைதான்.ஆனால் அதுவே வாழ்க்கையல்ல எனபது அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்,
ReplyDeleteநன்று.
கதம்பம் அருமை!
ReplyDeleteபெற்றோர்களோ ஆசிரியர்களோ தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கக் கூடாது ...
ReplyDeleteஅருமை அருமை !
ReplyDeleteதேர்வுக்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய தெளிவு மாணவர்களிடம் இல்லாமல் இருப்பது தான் இது மாதிரியான பரீட்சையின் காரணமாக நடக்கும் தற்கொலைகளுக்கு காரணம். மாணவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் ஏற்ப்படுத்த வேண்டும்..
ReplyDeleteகதம்பம் நல்லாத்தான் இருக்கு...
ReplyDeleteதொடரவும்.....
நடிகர் நடிகை புகைப்படங்களை பர்ஸ் அல்லது நோட்டில் வைப்பதற்கு பதில் //
ReplyDeleteகரெக்ட் ராஜா சார்
ரசித்த புகைப்படம் பகுதி வாசகம் உண்மையானால் ..ஹா ஹா அருமை
ReplyDeleteகதம்பம் நல்லா இருக்கு. நமது கல்வி முறை மனப்பாடம் செய்து ஒப்பித்து, மார்க் வாங்குவதை உயர்வாகக் கருதும் மனப்பான்மையை விதைத்திருக்கிறது. இதை மாற்றினால்தான் இதுபோன்ற விஷயங்கள் நிகழாது.
ReplyDeleteபெற்றோர்களும் சமூகமும் செய்யும் தவறுகளுக்கு பிஞ்சுகள் பலியாகின்றன
ReplyDeleteமாணவர்களுக்கான வார்த்தைகளும் ரசித்த ஜோக்கும் அருமை!!
ReplyDeleteராஜா, சென்ற வாரம் உங்கள் வலைப்பூ இடுகைகளைச் சரியாகப் படிக்க இயலாதபடி, எப்படி முயன்றாலும் இடுகையின் கால்பகுதிக்கு மேல் வராமல் சுற்றிக் கொண்டே இருந்தது. கருத்துப் பெட்டியிலும் எதுவும் பதிவிட முடியவில்லை. முன்பும் ஒரு முறை இப்படி இருந்தது. !? ;(
ReplyDeleteமாணவி தற்கொலை பற்றி... அது தவறான முடிவுதான். ஆனால்.. அந்த முடிவுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம். எல்லோராலும் எல்லாம் இயல்வதில்லை.
என் தோழியின் கையை இங்கு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ;) இப்போது மீண்டும் என்னை இங்கு இழுத்து வந்தது கூகுள் ரீடரில் தெரிந்த அந்தக் கைதான். ;)