> என் ராஜபாட்டை : பில்லா 2

.....

.
Showing posts with label பில்லா 2. Show all posts
Showing posts with label பில்லா 2. Show all posts

Monday, July 9, 2012

அஜித் : நடிகனா ? மனிதனா ?

இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அனுகியிருக்கிறேன். பார்க்கலாம்..
சுமார் எட்டு வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான ஏப்ரல் 17, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல்14, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த நேரத்தில் தான் வசீகரா, பகவதி என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா.. ‘வில்லன்’ பட வெற்றியை அஜித்துக்கு தக்க வைத்துக்கொள்ளத்தெரியவில்லை. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.
பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான். ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது.  அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.
2006ல் இருவரும் தைப்பொங்களில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ஆதியை விட பரமசிவன் நன்றாக ஓடியது. 2006ல் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த திருப்பதி ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார்.
ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.
இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்களுக்கு வந்த வேல் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது.
அஜித் வருடத்தின் முடிவில் பில்லா என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார். 
2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய்க்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை சுறா மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்.
இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு,  குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். 

ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”,  என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2001 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், காவலன் என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், வேலாயுதம் மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு சென்றது.
கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த சிறுத்தை அனைவரையும் கவர்ந்து அவரையும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது. 
கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று நியூஸ் வாசிக்கும் பெண் “இன்றைய முக்கியச்செய்திகள்” என்று சொல்வதை போல் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் சிறுத்தை நடித்திருந்தார். ஆனல் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் மங்காத்தா, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது.
விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்யான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அது ஒவ்வொரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. 
ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் திமிராக இருக்கிறார் என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. பில்லா 2 ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை. அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது.. அஜித் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது. அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
 நீ எப்பவும் டாப் தான் ‘தல’.... 
நன்றி  : இந்த பதிவை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்த நண்பர் ராம்குமார்க்கு நன்றி , அவரது பதிவை பார்க்க   சிவகாசிக்காரன்

Wednesday, June 20, 2012

பில்லா 2: பாடல் சொல்லும் வாழ்கை பாடம்



கடந்த பல நாட்களாக நான் விரும்பி கேட்டும் பாடல் பில்லா பட பாடல்கள் தான். "அதிலும் உனக்குள்ளே ஒரு மிருகம் “ என்ற பாடல் தான் அடிகடி கேட்பது. தினமும் குறைந்தது பத்து முறையாவது கேட்பேன் . அதில் பல வரிகள் நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய செய்திகள் பல உள்ளன. என் அறிவுக்கு எட்டியவரையில் எழுதிள்ளேன்.


“உனக்குள்ளே மிருகம் தூங்கி விட துடிக்கும்
எழுந்து அது நடந்தால் எரிமலையும் வெடிக்கும் “

 - ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நல்ல , கெட்ட மிருகம் இருக்கும் (மதன் கூட மனிதனுக்குள் ஒரு மிருகம் என புத்தகம் எழுதியதாக நினைவு ). அந்த நல்ல மிருகத்தை தூங்க விடாமல் பார்த்துகொண்டாள் நீ எரிமலையை கூட கடக்கலாம்

“கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி உந்தன் கையில் குடுக்கும்”

-          கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னார் , அந்த கனவுதான் உன்னை பற்றி நீ அறிய உதவும்.( தனிமையில் நீ என்ன சிந்திகின்றாயோ அதுதான் நீ – விவேகானந்தர் )

"எரிக்காமல் தேனடைகள் கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது "

-          எதுவும் முயற்சி செய்யாமல் கிடைக்காது. தானாகவே நடக்கும் என நினைப்பவன் முட்டாள். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு – நியுட்டன் லா


"வலியதுதான் உயிர்பிழைக்கும் – உலகில்
இயற்கையின் விதி இதுதான் ."




Survivals of the fittest  இது டாவின்சி விதி . உலகை எதிர்த்து போராட துணிந்தவை  மட்டுமே உயிர் பிழைக்கும் .


"“நரகமத்தில் நீயும் வாழ்ந்தால் மிருகம் என மாற வேண்டும்
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து “"

     - வாழும் இடத்திருக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ள வேண்டும் . சொர்க்கத்தில் கடவுளாகவும் நரகத்தில் மிருகமாகவும் இருக்க வேண்டும் .

“இங்கு நன்பான் யாரும் இல்லையே
இங்கு பகைவன் யாரும் இல்லையே
நீதான் உனக்கு நண்பனை – இனி
நீதான் உனக்கு பகைவனே “

 - இந்த உலகில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை . என்றுமே நான் தான் நமக்கு நண்பன் , நான் தான் எதிரி .

“முதலடியில் நடுக்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும் “

-          தற்காப்பு கலையில் முதல் பாடமே இதுதான் . எதிரி அடிக்கும் முன் நாம் அடிக்கவேண்டும் அதுவும் அந்த அடியில் அவன் பயப்பட வேண்டும். அடுத்த அடியில் அவன் நம் அருகே வர தயங்க வேண்டும்.


“அடிகடி நீ  இறக்கவேண்டும்
மறுபடியும் நீ பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ
இரு விழி திறந்தபடி  “

இறந்து பிறந்தால் எப்படி புத்துணர்ச்சியாக இருப்போமே அதுபோல எப்பொழுதும் இருக்க வேண்டும். உறக்கத்தில் கூட உள் மனது விழித்துருக்கும். அலெக்சாண்டர் கண்களை திறந்து கொண்டே தூங்குவாராம்(உண்மையா என தெரியவில்லை ) அதுபோல எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் .


“இனி நீ தான் உனக்கு தொல்லையே
இனி நீதான் உனக்கு எல்லையே “

- அடுத்தவனுடன் ஒன்னை ஒப்பிடதே அது உன்னை நீயே கேவலபடுத்தி கொள்வது போல என சொல்வார்கள் . எப்பொழுதும் உனக்கு எல்லை என்பது நீ செய்த சாதனைகள் தான் அதை தாண்ட நீ முயற்சி செய். தானாகவே அடுத்தவர் சாதனைகள் முரியாடிப்பாய் .



Saturday, June 16, 2012

பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?



இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .


இன்றைய நிலையில் தமிழ் சினிமாவின் பலத்த எதிர்பார்ப்பு தல அஜித்தின் "பில்லா 2" தான். பில்லா வின் வெற்றி மற்றும் மன்காத்தாவின் வசூல் சாதனையால் பில்லா 2 வின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . கமலை இயக்கிய இயக்குனர் சக்ரி இந்தப்படத்தை இயக்குகிறார்.

யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் மதுரை பொண்ணு , உனக்குள்ளே ஒரு மிருகம் இரண்டும் அதிரடி ஹிட் . படத்தின் சண்டைகாட்சிகள் பெரிதும் எதிர்பார்ப்பை அதிகபடுத்தயுள்ளது .


சகுனி :

தொடர் வெற்றிகளை குவித்துவரும் கார்த்திக்கின் அடுத்த அதிரடி ஆட்டம் சகுனி . காமெடி படமான இதில் சந்தானம் வேறு இருப்பது படத்திற்கு இன்னும் பலம் . டிவி யில் டிரைலர் கூட சந்தானத்தை முன் நிறுத்தி செய்யபடுகிறது . படங்கள் நன்றாக உள்ளது . இயக்குனர் புதியவர் .

ஜூலை 2 வர வேண்டிய படம் திடிரென 22 தேதி வருகின்றது . அன்றுதான் பில்லா 2 ரிலிஸ் . எனவே போட்டி கடுமையாக இருக்குன் என தெரிகின்றது . அன்றுதான் இளைய தளபதியின் பிறந்த நாள் .

இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .

Sunday, April 29, 2012

அஜித் : தல போல வருமா ?




இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

“ தினமும் காலயில் கடவுளைள வேண்டும் போது  என் ரசிகர்களு க்காகவும் வேண்டிக்கிறன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன் நாளைக்கு இல்லா மல்  போவன் . ஆனா, ஒரூ அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரூ  வேண்டுகோள் .  உங்க தன்மானத்தை  யாரூக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க . உங்க வேலைய 100 சதவிகிதம் ரசிச்சு  செய்யுங்க. நல்லாப் படிங்க . நான் பத்தாவது  வைரக்கும்தான் படிச்சேன் . வாழ்க்கையில்கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்கைளக் கத்துக்கிட்டேன் . ஆனா, படிச்சிரூந்தா இவ்வளவு  அடிபட்டு  வந்திரூக்க வேண்டிய அவசியம் இரூந்திருக்காதே . அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க . மத்தவன் கால மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்ரேன்... வாழு... வாழவிடு .. “

இது கடந்த வாரம் விகடனில் வந்த அஜித்தின் பேட்டி. உங்களுக்காக நான் இருக்கின்றேன் , உங்களை கைவிட மாட்டேன் , உங்களுக்காக உயிரையும் குடுப்பேன் என வசனம் பேசும் நடிகர்கள் மத்தியில் “யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க” என உண்மையை பேசும் தைரியம் ரஜினிக்கு பின் அஜித்துக்கு மட்டும்தான்.

சினிமா மட்டும் இன்றி விளையாட்டுத்துறையிலும் ஆர்வம உள்ளவர் அஜித். இவர் ஒரு கார் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஹெலிகாப்டர் ஓட்ட உரிமம் வைத்துள்ள முதல் தமிழ் நடிகர் இவர்தான். விருது வழங்கும் விழாவுக்கு மட்டும் மனைவிகளை அழைத்து வரும் நடிகர்கள் மத்தியில் , தன மனைவியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்குவிதமாக அவரை பூபந்தாட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.

ஒரு டப்பா படத்தில் நடித்தாலே அது என்னமோ “உலக பட “ரேஞ்சுக்கு இருக்குனு பில்டப் குடுப்பது நமது பல ஹீரோக்களின் பழக்கம். படம் வந்த அன்றே ஏதாவது டிவி சன்னலில் “இப்படி நடிச்சேன் , அப்படி நடிச்சேன் “, பயங்கர ஹிட்னு கதைவிட்டு பேட்டி கொடுப்பார்கள் .(ஆனா படம் இரண்டு நாள்ல காணாம போய்டும் ). ஆனால் தன படங்களை மக்கள் மட்டும்தான் பார்த்து கருத்து சொல்ல வேண்டும் , நான் எந்த மீடியாவிலும் பேசமாட்டேன் , தன படம் சம்பந்த பட்ட எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்ற கருத்தில் தீவிரமாக உள்ளவர் தல.

இறுதியாக எந்த நடிகனும் செய்ய துணியாத செயல் , தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது. நீ ரசிகனாக இரு ஆனால் முதலில் உன் குடும்பத்திற்கு நல்ல பிள்ளையாக இரு அதுதான் முக்கியம் என மன்றதை கலைத்த பெருமை தலைக்குதான் உண்டு.



டிஸ்கி : இளையதளபதி ரசிகர்கள் கூட மேலே உள்ள கருத்தை ஒத்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.


இதையும் படிக்கலாமே :

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

 

அஜித் : THE REAL HERO

 

 

Wednesday, March 7, 2012

துப்பாக்கி Vs பில்லா 2





விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் பில்லா 2 இசை!



அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. சக்ரி டோல்ட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது :

" இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும். டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்.

மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை துவக்க இருக்கிறோம்."

நன்றி : விகடன்

இதையும் படிக்கலாமே :


தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

Tuesday, February 21, 2012

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

 சினிமா செய்திகள் தொகுப்பு :




2011-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்​களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறந்த படங்​களைத் தேர்வு செய்யும் ஜூரி​களில் ஒருவராக, நம்ம ஊர் டைரக்டர் ஜனநாதன் இருக்கிறார். இதுவரை பார்த்த படங்களில், தமிழுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

''படங்கள் தயாரித்து​க்கொண்டு இருப்பவர்கள், தொழி​லாளர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்​கத் தயாராக இருக்கிறார்​கள். ஆனால், படமே எடுக்காத தயாரிப்​​​​பாளர்கள்​தான் சங்கத்தில்இருந்து​​கொண்டு சண்டை போடுகிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார் அமீர். இவருக்​குப் போட்டியாக, ''கேமராவைத் தொடாத சிவா, புரொடக்ஷன் வேலை பார்த்தே பல வருடங்​கள் ஆன சந்திரன் போன்ற​வர்கள்தான் பெப்ஸியில் பஞ்சாயத்​துப் பேச வர்றாங்க...'' என்று கடுப்பாகிறது தயாரிப்பாளர்கள் தரப்பு.
'துப்பாக்கி’ படம் ட்ராப் என்று கிளம்பி இருக்கும் செய்தியால் விஜய் படுஅப்செட். ஆளாளுக்கு  செல்போனில் துளைத்து எடுக்கிறார்​களாம். 'முதல் ஷெட்யூல் முடிஞ்​சிடுச்சு. விரைவில், அடுத்த ஷெட்யூல் ஆரம்பம்...’ என்று, ஒவ்வொருவருக்​கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறார்.


கோலிவுட்டில் பெப்ஸி தொழிலா​ளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடு​வதால், தமிழகத்தில் எங்கேயும் ஷூட்டிங் நடக்கவில்லை. ஆனால், 'மாற்றான்’ படத்தின் பாடல் காட்சியை தெலுங்கு டான்ஸர்களைக்கொண்டு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் கூலாகப் படமாக்கி வருகிறார்கள். அதுபோலவே, 'பில்லா 2’ படப்பிடிப்பும் மும்பையில் கனஜோராக நடக்கிறது.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு. மலையாள​த்தில் 1,000 படங்களுக்கு மேல் இசை​யமைத்த ராஜாமணியின் புதல்வர். படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர், நடிகை ரோகிணி.

நன்றி : ஆனந்த விகடன் 

இதையும் படிக்கலாமே :

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி