> என் ராஜபாட்டை : vijay

.....

.
Showing posts with label vijay. Show all posts
Showing posts with label vijay. Show all posts

Wednesday, August 15, 2012

TOP 10


கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்க பட்ட பதிவுகள் உங்கள் பார்வைக்கு ..
இவை அனைத்தும் மே 7 முதல் ஜூன் 5 வரை வாங்கிய ஹிட்ஸ் அடிப்படையில் தொகுக்கபட்டது .












 டிஸ்கி : அப்பாடி ஒரு பதிவு தேத்தியாசு ...

Thursday, August 9, 2012

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்


இன்றைய சினிமா உலகில் அசைக்க முடியாத இரண்டு சக்திகள் விஜய் மற்றும் அஜித் . படம் கதையுடன் இருந்தாலும் மொக்கையாக இருந்தாலும் இவர்கள் படம் முதல் வாரத்தில் வசூலை அள்ளிவிடும் . இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் நண்பர்களாக இருகின்றார்களா என்றால் சந்தேகம் தான் . ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் facebook  இல் நக்கல் செய்வதும் என பயங்கர சண்டையே நடக்கும் . சில சமயங்களில் கிண்டல் வரம்பு மீறி போவதும் உண்டு . அதுபோல கிண்டல் செய்து வெளியிட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு .

அஜித் ரசிகர்கள் வைத்துள்ள facebook page  இல் 








விஜய் ரசிகர்கள் வைத்துள்ள  facebook page இல்





டிஸ்கி 1 :  இதைவிட பல கொடுமையான கிண்டலான புகைப்படங்கல் உள்ளது , 
                   இருவரது ரசிகர்கள் மனது புண்படகூடாது என போடவில்லை .

டிஸ்கி 2 : எனக்கு இருவரையும்  பிடிக்கும்

Thursday, August 2, 2012

விஜய் : TOP 5 படங்கள்




நடிகர் விஜய் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஐந்து படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அவர் நடித்த பல படங்கள் நன்றாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சில படங்களில் இந்த ஐந்தும் முக்கிய இடம் பிடிக்கும் .

1.  கில்லி




இதுவரை நான் பார்த்த விஜய் படங்களில் மிக வேகமாக , பரபரப்பாக இருந்த ஒரே படம் கில்லி தான் . அதுவும் திரிஷாவுடன் அவர் ஓடிவரும் போது பல லாரிகளில் வில்லன்களின் அடியாட்கள் வருவார்கள் அவர் அனைவரிடமும் இருந்து விஜய் தப்பிக்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும் . கடைசி வரை இந்த விறுவிறுப்பு குறையாமல் தரணி காட்சிகளை அமைத்து இருப்பார் .



2. காதலுக்கு மரியாதை

நான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் பார்த்தது . அப்போது கல்லுரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பிடித்த படம் இது . விஜய்யின் இமேஜை மாற்றிய படம் இது என்றால் அது மிகை ஆகாது . படத்தில் இறுதி காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை அருமையாக இருக்கும் . படத்தில் பாடல்களும் , காமெடியும் அதன் வெற்றிக்கு மிக உதவியது .


3. பூவே உனக்காக ..


குடும்ப பெண்களுக்கு விஜய் மிகவும் பிடிக்க காரணமாக இருந்த படம் இது . அதுவரை குத்து பாட்டு , சண்டை , சங்கவி என இருந்த விஜய் இந்த படத்தில் முற்றிலும் வேறு மாதிரியாக நடித்து இருப்பார் . விக்கிரமனின் வசனங்களும் , ராஜ்குமாரின் பாடல்களும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது . கடைசி காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும் .

4. துள்ளாத மனமும் துள்ளும்


இயக்குனர் எழில் அறிமுகமான படம் இது . " இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு ..." என்ற பாடல் மிக பிரபலம் . விஜயின் அமைதியான நடிப்பும் , பாடல்களும் பெரிதும் பேச பட்டது . அதுவும் தனது அம்மா இறந்த செய்தி கேட்டு விஜய் பாத்ரூமில் அழும் காட்சி அவரது நடிப்பு திறமைக்கு சான்று . தான் நல்லவன் என சிம்ரனிடம் நிருபிக்க விஜய் எடுக்கும் முயற்சிகள் அருமையாக திரைக்கதையில் பின்ன பட்டு இருக்கும் .

5.  நண்பன்
விஜய் முற்றிலும் மாறுபட்டு , குத்து பாட்டு , ஹீரோ இன்ட்ரோ பாட்டு , பஞ்ச டயலாக்ஸ் என எதுவும் இல்லாமல் வந்த படம் . இதுவரை மற்றவர்களை அடித்து பழக்கபட்ட விஜய் இந்த படத்தில் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களிடமும் அடி வாங்கி விடுவார் . ஆனாலும் அலுக்காத , அலட்டாத அவரது நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம் . ரீமேக் படமாக இருந்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பால் புது வடிவம் கொடுத்து இருப்பார் விஜய் .


டிஸ்கி : இது எனக்கு பிடித்த வகையில் வரிசை படுத்தி உள்ளேன் . இது தவிர வேறு படங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் பின்னுடத்தில் சொல்லுங்கள்

Tuesday, May 29, 2012

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி



விஜய் டிவியின் லொள்ளு சபா அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நகைசுவை நிகழ்ச்சி . அவர்கள் பல படங்களை கிண்டல் செய்துள்ளனர் . சமயம் விஜய் டிவி நிகழ்சிகளையே கிண்டல் செய்வார்கள் . இப்போ கலக்கும் காமெடியன் சந்தானம் இங்கேருந்து வந்தவர்தான் . இந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு படம் நடிகர் விஜய் ரசிகர்களின் பெருத்த எதிர்ப்பை பெற்றது . இந்த எதிர்ப்பிற்கு பின் லொள்ளு சபா நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது .
பலத்த எதிர்ப்பை பெற்ற போக்கிரி பட உல்டாவான பேக்கிரி 



இரண்டாம் பகுதி 




 
பயங்கர கண்டனத்துக்குள்ளான  நீயா நானா 

டிஸ்கி 1 : இந்த காரணத்துக்காக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது சரியா ?தவறா ? 
                     என பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .


டிஸ்கி 2 : கடந்த வாரம் நடந்த நீயா ? நானா வில் பவர் ஸ்டார்  
                    கேவலபடுத்த பட்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது .

இதையும் படிக்கலாமே :

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

Sunday, May 6, 2012

கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்



கடந்தமாதம் மொத்தம் 14 பதிவுகள் எழுதினேன். இவற்றில் அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்ட முதல் 5  பதிவுகளின் சாரத்தை இங்கே தருகின்றேன் .

1. அஜித் : தல போல வருமா ?

              இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

 மேலும் படிக்க :  அஜித் : தல போல வருமா ?

2.  அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

         
தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர்

மேலும்  படிக்க : அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

3.  கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

        இது விஜய் டிவியில் வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் வீடியோ. அவர்கள் நிகழ்ச்சியில் அவர்கள் கலாய்த்த படங்களின் தொகுப்பை அவர்களை வரிசை படுத்தி கிண்டல் செய்துள்ளனர். இதை முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக சிரிப்பு வரும் அப்படி சிரிக்கவில்லை எனில் எதாவது நல்ல டாக்டரை (பவர் ஸ்டார் அல்லது தளபதி ) பார்க்கவும் .

மேலும் படிக்க :  கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

4. ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்

  ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவர்; கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, நடிப்புத் துறையில் கால் பதித்து, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து, இன்று 'சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையோடு இருக்கிறார்.

மேலும் படிக்க :  ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்


5. உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.

    
கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இறுதியில் மதிப்பென்னை கனக்கிட்டு கொள்ளுங்கள்.  நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிபெண்

1 . ஆன்/ பெண் இனைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு 
    தோனுவது.

   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
 


டிஸ்கி : இது April 7 முதல் May 6  வரை எழுதிய பதிவுகளில் Google stat கணக்குப்படி ..



Thursday, March 22, 2012

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ




தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர் R.S.ண்

அவரின் சில புகைப்படங்கள் உங்களுக்காக ...

அவரின் ரொமாண்டிக் லுக்

பயம்

சோகம் அல்லது செண்டிமெண்ட்

பக்தி

கோவம் 

வெட்கம்





டிஸ்கி : இவரின் அப்பா இந்தியாவிலேயே நேர்மைக்கும் , அன்புக்கும் , பாசத்துக்கும்  பெயர் பெற்ற ஒருவர் .


டிஸ்கி 2 : இவரின் அப்பா வைத்துள்ள பிளாக்கின் பெயரரின் முதல் எழுத்து என் , கடைசி எழுத்து ராஜபாட்டை நடுவில் எழுத்தே கிடையாது.

இதையும் படிக்கலாமே :

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?

 


Wednesday, March 7, 2012

துப்பாக்கி Vs பில்லா 2





விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் பில்லா 2 இசை!



அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. சக்ரி டோல்ட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது :

" இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும். டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்.

மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை துவக்க இருக்கிறோம்."

நன்றி : விகடன்

இதையும் படிக்கலாமே :


தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

Tuesday, February 21, 2012

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

 சினிமா செய்திகள் தொகுப்பு :




2011-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்​களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறந்த படங்​களைத் தேர்வு செய்யும் ஜூரி​களில் ஒருவராக, நம்ம ஊர் டைரக்டர் ஜனநாதன் இருக்கிறார். இதுவரை பார்த்த படங்களில், தமிழுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

''படங்கள் தயாரித்து​க்கொண்டு இருப்பவர்கள், தொழி​லாளர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்​கத் தயாராக இருக்கிறார்​கள். ஆனால், படமே எடுக்காத தயாரிப்​​​​பாளர்கள்​தான் சங்கத்தில்இருந்து​​கொண்டு சண்டை போடுகிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார் அமீர். இவருக்​குப் போட்டியாக, ''கேமராவைத் தொடாத சிவா, புரொடக்ஷன் வேலை பார்த்தே பல வருடங்​கள் ஆன சந்திரன் போன்ற​வர்கள்தான் பெப்ஸியில் பஞ்சாயத்​துப் பேச வர்றாங்க...'' என்று கடுப்பாகிறது தயாரிப்பாளர்கள் தரப்பு.
'துப்பாக்கி’ படம் ட்ராப் என்று கிளம்பி இருக்கும் செய்தியால் விஜய் படுஅப்செட். ஆளாளுக்கு  செல்போனில் துளைத்து எடுக்கிறார்​களாம். 'முதல் ஷெட்யூல் முடிஞ்​சிடுச்சு. விரைவில், அடுத்த ஷெட்யூல் ஆரம்பம்...’ என்று, ஒவ்வொருவருக்​கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறார்.


கோலிவுட்டில் பெப்ஸி தொழிலா​ளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடு​வதால், தமிழகத்தில் எங்கேயும் ஷூட்டிங் நடக்கவில்லை. ஆனால், 'மாற்றான்’ படத்தின் பாடல் காட்சியை தெலுங்கு டான்ஸர்களைக்கொண்டு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் கூலாகப் படமாக்கி வருகிறார்கள். அதுபோலவே, 'பில்லா 2’ படப்பிடிப்பும் மும்பையில் கனஜோராக நடக்கிறது.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு. மலையாள​த்தில் 1,000 படங்களுக்கு மேல் இசை​யமைத்த ராஜாமணியின் புதல்வர். படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர், நடிகை ரோகிணி.

நன்றி : ஆனந்த விகடன் 

இதையும் படிக்கலாமே :

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி

 

Wednesday, February 1, 2012

நண்பன் பட சிடி இலவசம் ?


இப்படிதான் சிரிக்க போறிங்க ...




இவர் பக்திக்கு அளவே இல்லை ..

 
கமெண்ட் போடல தோலை உரிச்சிடுவேன் 
 
ஓவரா படிச்சா இப்படிதான் 
 
மூளையுடன் முடியும் வழியுது 
 
பாவம் விஜய் (நண்பன் பட சிடி இலவசம் ?)
 
வெளிநாட்டு வேலைதான் வேணுமா ?
 
நாங்கலாம் அந்த காலாத்து ஆளுங்க ...

Thursday, January 12, 2012

நண்பன் : திரை விமர்சனம்

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நண்பனின் வெற்றி முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் . பலரின் விமர்சனங்களை இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்குகிறேன் .



1 . நண்பன் - விஜய் - விமர்சனம் 

                             நன்றி : "நல்ல நேரம் " சதீஷ்


2 . நண்பன் - FIR 

                             நன்றி : இட்லி வடை

3 . நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

                             நன்றி : அட்ராசக்கை : சிபி

4 . நண்பன் - சினிமா விமர்சனம் - சுடச்சுட


                    நன்றி :  தோத்தவண்டா : 


5 . நண்பன்: விஜய்யின் புதிய மாஸ்! ரசித்த சினிமா!!


             நன்றி : மருதமூரான்


டிஸ்கி : படம் பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் எடுக்கனும்னு சொல்றங்க .. அதான் இப்படி ...