அன்பு நண்பர்களே , கதம்பம் என்ற பல்சுவை தொகுப்பை மிக நீண்ட நாளாக எழுத
முடியவில்லை . இனி மாதம் ஒரு முறையாவது எழுத முயற்சிக்கிறேன் .
நண்பர்கள் :
கடந்த செவ்வாய் அன்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது . அங்கு சென்ற பின்
பதிவுலக நண்பர்கள் சிலரை பார்க்க நினைத்தேன் . ஆனால் நண்பருக்காக போனதால்
முடியவில்லை . “கரை
சேரா அலைகள் “ அரசன்
அவர்களுக்கு போன் செய்தேன் . பின்பு மெட்ராஸ்பவன் சிவகுமாருக்கு போன் செய்தேன் .
அலுவலகம் கிளம்பு போகிறேன் என சொன்னவர் , திடிரென “இருங்கள் செந்தில் வருகிறார் , அவருடன் நீங்கள் இருக்கும்
இடத்திற்கு வருகிறேன் “ என
சொன்னார் .
சிவாவும் , KRP செந்திலும் வந்தார்கள் .
சுமார் ஒரு மணிநேரம் பேசினோம் . மிக
ஜாலியாக இருந்தது . இருவரும் என்னமோ நீண்ட நாள் நண்பர்கள் போல பேசினார்கள் .
நேரமின்மையால் அதிகம் பேச முடியவில்லை . பதிவர் சந்திப்பில் அந்த குறை தீரும் என
எண்ணுகிறேன் .
====================================================================
அரசியல் :
மோடிக்க விசா தரகூடாது என அமெரிக்காவுக்கு 29 MP கள் கடிதம் .
# அதுவும் போர்ஜரியா பலர் கையெழுத்தை யாரோ போட்டுருக்காங்க .
# ராஜபக்ஷே இந்தியா வந்தப்ப இவர்கலாம் என்ன பண்ணிகிட்டு இருந்தாங்க ???
28 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளார்கள்
என அர்த்தம் .: திட்ட கமிஷன்
# சென்னையில் வசந்த பவனில் 2 இட்லி 42 ரூபாய் .
# இந்த வீணா போன கிமிஷன் இருக்கும் இடத்தில் பாத்ரும் கட்ட செலவு 27 லட்சம்
ரசித்த ஜோக் :
வகுப்பில் காப்பி அடித்த மாணவனை இனி காப்பி அடிக்க மாட்டேன்னு 100 தடவை
இம்போசிஷன் எழுத சொன்னார் ஆசிரியர் . அந்த மாணவன் எழுதியது கிழே ..
#include
void main( )
{
int i;
for(i=1;i<=100;i++)
{
printf(“இனி காப்பி அடிக்கமாட்டேன் “);
}
}
முகபுத்தகத்தில் எனது STATUS
ஒருவரை பிடிக்கா விட்டால் உடனே விலகிவிடு . இல்லையெனில் இறுதியில் அவமானமே
மிச்சம் இருக்கும் .
இதுவரை S.P.பாலசுப்ரமணியம் குரல்தான்
உலகிலேயே அழகு என்று இருந்தான் , என் மகன் சரணின் “அப்பா “ என்ற குரலை போனில் கேட்கும் வரை .
உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி
நல்ல நண்பர்களை பெற்றவர்களே .
இது உண்மையா ?