> என் ராஜபாட்டை : பொது

.....

.
Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, March 25, 2014

குழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்







            

குழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன்னோர்கள் பெயர் வைப்பதா , சாமி பெயரா ?இல்லை யாருக்கும் புரியாத மார்டன் பெயரா என பட்டிமன்றமே நடக்கும் . இந்த நேரத்தில் நமக்கு தேவையான , வித்தியாசமான பெயர்களை தருவதற்கு பல இனிய தளங்கள் உள்ளன . அவற்றை இன்று பார்க்கலாம் .



TAMILCUBE:

              இது பல்வேறு இணைய பயன்பாட்டினை வழங்கி வரும் தளமாகும் .புத்தகங்கள் , பொது அறிவு , ஜோதிடம் என பல தகவல்கள் இதில் உண்டு அதில் ஒன்றுதான் குழந்தைகள் பெயர்கள் .

 

இந்த தளம் செல்ல : CLICK HERE 



வலைத்தமிழ் :

  முன்பு பார்த்த தளம் போல் இதுவும் பல்வேறு வசதிகள் வழங்கும் தளம்தான் . இதில் சினிமா , அரசியல் , இலக்கியம் என பல் வகை செய்திகள்   உண்டு . இது ஒரு நல்ல பொழுதுபோக்கு தளம் . இதில் நமக்கு தேவையான எழுத்தில் குழந்தைகள் பெயர்களை தேட முடியும் .



இந்த தளம் செல்ல : CLICK HERE 


 களஞ்சியம் :

          குழந்தைக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்காக உருவாக்கபட்ட தளம் . அருமையான , பொருள் நிறைந்த , அழகான தமிழ் பெயர்கள் இங்கே குமிந்து கிடைகிறது . எந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்பதையும் , ஆன் அல்லது பெண் குழந்தை என்பதையும் பிரித்து எளிதில் எடுக்கலாம் .


இந்த தளம் செல்ல : CLICK HERE 

சிவம் .ORG

    இந்த தளத்தில் எழுத்துகள் வாரியாக அழகிய தமிழ் பெயர்கள் வரிசைபடுத்தபட்டு உள்ளது . உங்களுக்கு தேவையானதை எளிதில் தெரிவு செய்யலாம் . அத்துடன் பெயருக்கு என்ன அர்த்தம் எனவும் கொடுக்கபட்டு உள்ளது .


 இந்த தளம் செல்ல : CLICK HERE 

swayamvaraparvathi.org:

           இந்த தளத்தில் நீங்கள் நட்சத்திரம் மூலம் உங்களுக்கு தேவையான பெயர்களை தேடலாம் . இங்கும் பல பெயர்கள் கொட்டிகிடகிறது .



 இந்த தளம் செல்ல : CLICK HERE 



புரோகிதர் .COM

   அழகிய தமிழ்ல் இனிய பெயர் வைக்க வாருங்கள் என அழைக்கும் தளம் இது . இங்கு ஆயிரகணக்கான பெயர்கள் உள்ளது . இதில் ஒரு வசதி பெயர்கள் அடங்கிய பட்டியலை தரவிரக்கிகொள்ளலாம் . இணையம் இல்லாமல் இருக்கும் பொது படித்துகொள்ளமுடியும் .


 
 இந்த தளம் செல்ல : CLICK HERE


indianmirror.com

         இந்த தளத்தில் ஆங்கிலத்தில் தான் பெயர்கள் இருக்கும் . இங்கும் பெயர்கள் வரிசைகிரகமாக வைத்துள்ளனர் . நமக்கு தேவையானதை எடுத்துகொள்ளலாம் .




இந்த தளம் செல்ல : CLICK HERE



டிஸ்கி : இதுபோல பல தளங்கள் உள்ளது . உங்களுக்கு தெரிந்த தளத்தை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்

.

Monday, June 10, 2013

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?





நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.

  1. கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.

  1. குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.


  1. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.

  1. குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.



  1. உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.

  1. உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.


  1. உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.


  1. அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


  1. அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.

  1. உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.


  1. நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.


மாடல் : சரண்

டிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.


இதையும் படிக்கலாமே :

 விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ...

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

Friday, April 13, 2012

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு இறைவனும் கருணை காட்டமாட்டார்.

-         நபிகள்

ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு எந்த கடவுளை பற்றியும் கவலை இல்லை .

-         கன்பூஷியஸ்

அறிவுள்ள மனிதன் தன்னை திருத்தி கொள்வதில் கவனத்தை செலுத்துகின்றான் .

-         ஜேம்ஸ் ஆலன்

எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை

-         யாரோ .

நூறு அசடுகளுக்கு தலைவனாக இருப்பதை விட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருக்கலாம் .

-         ஸ்டோன்சிமித்

செயலில் கவனக்குறைவுதான்
தோல்விகளை சந்திக்க காரணமாக இருக்கின்றது

-         பிராங்களின்

குடுக்க குடுக்க குறையாத செல்வம் அன்பு , கல்வி .

-         யாரோ

உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் தாய் பால்
உலகில் எதையும் எதிர்பார்க்காதது தாய் அன்பு
                     
                     -வருங்கால வைரமுத்து ராஜபாட்டை ராஜா


இதையும்  படிக்கலாமே :

என்ன அழகு... எத்தனை அழகு !

பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்

கதம்பம் 04/04/2012

 

 


Wednesday, July 27, 2011

உறவு வலுப்பட என்ன செய்யலாம்




நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உள்ள நமது உறவு வலிமையாகவும், நல்ல படியாகவும் இருக்க சில வழிகள்.

  1. நண்பர்கள்/உறவினர்கள் திருமண நாள், பிறந்த நாளை குறித்துவைத்து கொள்ளுங்கள். Call செய்ய முடியாவிட்டாலும் ஒரு SMS லாவது ஒரு வாழ்த்து சொல்லுங்கள்.

  1. திபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் முடிந்தால் நேரில் அல்லது போனில் பேசுங்கள்.

  1. நண்பர்கள்/உறவினர்களின் நல்ல விஷயத்தில் கலந்துகொள்கின்றிர்கலோ இல்லையோ துக்க காரியத்தில் தவறாமை கலந்துகொள்ளுங்கள்.

  1.  நண்பர்கள்/உறவினர்கள் நமது வீட்டிர்க்கு வந்தால் முதலில் டி.வி யை அனைத்துவையுங்கள்.

  1. நாம் அடுத்தவர் வீட்டுக்கு சென்றால் அவர்கள் டி.வி பார்த்தால் அவர்கள் பார்க்கும் நிகழ்சியை நீங்களும் பாருங்கள். உங்கள் விருப்பத்தை திணிக்காதிர்கள்.

  1. குழந்தை உள்ள வீட்டுக்கு சென்றால் பிஸ்கட், பழங்களும் வாங்கிசெல்லுங்கள்.

  1. நமது வீட்டிர்க்கு யாராவது எதாவது வாங்கிவந்தால் “அய்யோ ! இதை இங்கே யாரும் திங்கமாட்டாங்கலே” என்று சொல்லாதிர்கள்.

  1. முடித்தவரை வார இறுதி நாட்களில் மதியம் 2 TO 4 யார்வீட்டுக்கும்  செல்லாதிர்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு ஒய்வு எடுக்கும் நேரம் அது.

  1. இரவு தங்க போவதாக இருந்தாலோ அல்லது சாப்பிடும் நேரத்தில் செல்ல வேண்டி இருந்தாள் அவர்களுக்கு போன் செய்துவிட்டு செல்லுங்கள்.

  1. நீங்கள் செல்லும் வீட்டில் திருமணமாகி சில மாதமான பெண் இருந்தால் “எதாவது விஷேஷம் உண்டா?” என கேட்காதிர்கள். அவர்கள் தாய்மை அடையவில்லை என்றால் அதை சொல்ல வருத்தபடலாம்.

  1. நண்பர்கள்/உறவினர்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க போகும் இடத்தில் “குழந்தை ஏன் கருப்பா இருக்கு, முடி ஏன் கொஞ்சமா இருக்கு, ஏன் அப்பா போல இல்லை , பெண் குழந்தைதானா?” என குடும்பத்தில் குண்டு வைக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்.

  1. நண்பர்கள்/உறவினர்களிடம் முடிந்த அளவு கடன் வாங்காதீர்கள்/ கொடுக்காதீர்கள்.

  1.  நண்பர்கள்/உறவினர்களின் முன்பு குழந்தையை திட்டாதீர்கள் அவர் மனம் பாதிக்கும்.



எனக்கு தெரிந்த அளவு சொல்லியுள்ளேன். உங்களுக்கு வேறு எதாவது தோன்றினால் பின்னுட்டதில் சொல்லுங்கள்.