> என் ராஜபாட்டை

.....

.

Wednesday, January 8, 2014

+2 மாணவர்களுக்கு இலவசமாக மேற்ப்படிப்பு படிக்க வாய்ப்பு





பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள் அதிகம் சேர்வது இன்ஜினியரிங் தான் . நல்ல காலேஜ் கிடைக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதில் சீட் கிடைக்கவேண்டும் என்பது . சீட்டுக்கு பல லட்சம் செலவாகும் . நான்கு வருடங்கள் படித்து முடிக்க இன்னும் சில லட்சங்கள் ஆகும் . படித்த பின் உடனே வேலை கிடைக்குமா என்றால் சந்தேகம்தான் . வருடம் தொடும் பல்லாயிரகணக்கான மாணவர்கள் வேலையின்றி சும்மா இருக்கிறார்கள் .

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் , படித்த மாணவர்கள் உங்களுக்கு இலவசமாக மேற்படிப்பு படிக்க ஒரு எளிதான வழி உள்ளது . அதுமட்டுமல்ல படித்து முடித்ததும் அரசு வேலை உறுதி . சந்தோகம் இல்லை இது உண்மைதான் .


நேஷனல்டிபென்ஸ் அக்கடமி ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது . பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் , படித்த மாணவர்கள் இதுக்கு விண்ணப்பிக்கலாம் . 

நன்மைகள் :

  • தகுதி தேர்வுக்கு சென்று வர இலவச ரயில் டிக்கெட் .

  • முழுவதும் இலவசம் . ஒரு பைசா கூட நீங்கள் செலவு செய்ய வேண்டாம் .

  • படிக்கும் பொழுது உணவு , உடை , உறைவிடம் இலவசம் 

  • படிக்கும் காலத்தில் உங்கள் ஊருக்கு சென்று வர இலவசரயில் டிக்கெட் .

  • படித்து முடித்ததும் உங்கள் மதிப்பென்க்கு ஏற்ப அரசு வேலை .

  • குறைந்த பட்ச சம்பளம் 40000.
 
  • எளிதான தேர்வு முறை .
 
  • TNPSC GROUP I தேர்வுக்கு சமமான வேலைவாய்ப்பு .


மற்ற தகவல்கள் :


இந்த தேர்வுக்குஆன் லைனில் மட்டுமே விண்ணபிக்கலாம் .

விண்ணப்பிக்க : www.upsconline.nic.in



இந்த தேர்வுக்கான நடைமுறைகள் , தகுதிகள் இன்னும் பல விவரங்கள் அறிந்து கொள்ள  : CLICK HERE


Monday, January 6, 2014

எது மதசார்பின்மை ?





தேர்தல் வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “. இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என பார்க்கலாம் வாங்க .

எனது கேள்விகள் :
1.       தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி / மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .

உதாரணம் : இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்

2.       ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது (வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?

உதாரணம் : திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும் கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி போடுவது .

3.       ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை கிண்டல் செய்து விட்டு அடுத்த மதத்து அடையாளங்களை ஓட்டுக்காக மாட்டிகொள்வது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

உதாரணம் : ஒரு M.L.A குங்குமம் வைத்ததை கிண்டல் செய்துவிட்டு ரம்ஜான் கஞ்சி குடிக்க குல்லா போடுவது .


4.       ஒரு மதத்தின் நம்பிக்கையை அல்லது அவர்கள் கடவுள்களை கிண்டல் செய்துவிட்டு மற்ற மதத்தினரிடம் நற்பெயர் வாங்க எந்த கேள்வியும் கேட்காமல் வாய்மூடி இருப்பது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

“ராமன் என்ன இஞ்சினியரா ?” என புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து கேள்வி கேட்பது . மற்ற மதத்தில் இது போல பல கேட்கலாம் ஆனால் மற்றவர்கள் நம்பிக்கை கெடுக்க நான் அரசியல்வாதியில்லை )

5.       ஒரு மதத்திற்கு எதிரான கலவரத்தை / பிரச்சனையை மட்டும் ஊதி பூதாகரமாகி , மற்ற பிரச்சனைகளை மறக்கடிப்பது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

குஜராத் கலவரத்தை பற்றி வாய்கிழிய பேசும் காங்கிரஸ் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை பற்றி வாய்திறப்பதில்லை .காங்கிரஸ் மட்டுமல்ல குஜராத் கலவரத்தை பற்றி பேசும் பலர் வசதியாக சீக்கியர்களை மறந்துவிடுகின்றனர் . கலவரம் , உயிர் , கஷ்டம் ,நஷ்டம் எது என்றாலும் அது அனைவருக்கும் போது தானே ? இரண்டு கலவரத்திலும் பாதிக்கபட்ட மக்களுக்குத்தானே குரல் கொடுக்க வேண்டும் . பிரதமராக ஒரு சீக்கியர் இருந்தும் கூட அதைப்பற்றி வாய்திறக்காமல் குஜராத்தை பற்றி பேசுகிறார் .


கடைசியாக ஒரு வார்த்தை ..
“என் மதம் பெரிது என சொல்வது பிரச்சனை இல்லை
என் மதம் மட்டும்தான் பெரியது என சொல்வதுதான் பிரச்சனை “

 ==============================================================
மாணவர்களுக்காக ஒரு தளம் சென்று பாருங்கள் 

Saturday, January 4, 2014

விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?






தே . மு .தி .க தலைவர் விஜயகாந்தை நக்கல் செய்யாத பத்திரிக்கைகளே இல்லை . பத்திரிகைகள் மட்டும் இன்றி கட்சிகள் பலவும் கிண்டல் செய்கிறது . இது சரியா ? தவறா ? என அலசலாம் வாங்க .


 கட்சிகள் :


முன்பு :

சென்ற தேர்தலில் தனியாக நின்றால் ஜெய்போமா இல்லையோ என்ற பீதியை விட விஜயகாந்த் தி.மு.க பக்கம் போனால் நாம் ஜெய்க்க வாய்ப்பு குறைவு என உணர்ந்ததால்தான் ஜெயா அவரை தன பக்கம் அழைத்துகொண்டார் .

அவர் அந்த பக்கம் இணைந்ததால் விஜயகாந்தை அவர் நடத்தையை கிண்டல் செய்யும் வேலையை தி மு க ஆரம்பித்தது . விஜயகாந்த் ஒரு குடிகாரர் என பரப்ப ஆரம்பித்தது . அவர் தனது கட்சி நபர்களை கூட அடிப்பார் என காட்டியது .


இப்போ :

விஜயகாந்தை கை கழுவிய ஜெயா , அவர் கட்சி ஆட்களை தம் பக்கம்இழுத்துதான் அவரைஜெய்க்க நினைக்கிறார் .

கருணாநிதி தே மு தி க எங்களுடன் இணைந்தால் மகிழ்வோம் என்கிறார் . (இப்போ குடி பத்தி பேசுவதில்லை ) 

பா.ஜ . க விஜயகாந்தை இழுக்க முழு முயற்ச்சி செய்கிறது .

காங்கிரஸ் தன் பங்குக்கு அவரை சந்திக்க வாசனை அனுப்புகிறது .

இப்படி எல்லா கட்சிகளும் அவரையே மையம் கொண்டு வருகிறது .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?

ஊடகங்கள் :



விஜயகாந்த்பற்றி எழுதாத ஊடகங்களே இல்லை . ஆனால் அவரிடம் நியாயமான கேள்விகள் கேட்காமல் அவரை எப்படியாவது கோவபடுத்தி  பார்க்க தான் ஆசைபடுகிறது . கருணாநிதியிடம் அல்லது ஜெயாவிடம் கேள்வி கேட்க பம்முகின்ற இவர்கள் விஜயகாந்திடம் மடக்கி மடக்கி கேட்பார்கள் .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?

டெல்லி தேர்தல் :

டெல்லி தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டதை பலர் கிண்டல் செய்கின்றார்கள் . திருவள்ளுவர் கூட முயல் வேட்டையில் ஜெய்பதை விட யானை வேட்டையில் தோற்ப்பது நல்லது / பெருமை என்கிறார் . டெல்லியில் போட்டியிட இங்கு உள்ள எந்த கட்சிக்கும் தைரியம்  இல்லை . அப்படி போட்டியிட்டால் இதே நிலைதான் மற்றவர்களுக்கும் .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?


விஜயகாந்த் மாற்றி கொள்ள வேண்டிய விஷயங்கள் :

  • கருணாநிதியை போல ஜெயாவை போல வார்த்தை விளையாட்டை கற்றுக்கொள்ளவேண்டும் .

  • பொது இடத்தில் நடிக்க தெரிய வேண்டும் . நல்லவன் போல நடிப்பவர்களுக்குதான் நல்ல பெயர் கிடைக்கும் .


  • கட்சி கரைவதை தடுக்க வேண்டும் .


  • குடும்ப கட்சி என்ற பெயரை சரி செய்யவேண்டும் .


  • பா. ஜ .க வுடன் இணைவதே இபோதைக்கு நல்லது .


  • மக்கள் பிரச்சனைக்கு அடிகடி குரல்கொடுக்க வேண்டும் .



இவையனைத்தும் என் மன எண்ணங்கள் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .

Wednesday, January 1, 2014

சந்தோஷம்





 
புத்தாண்டின் முதல் நாள் உங்கள் மனமும் உங்கள் குடும்பத்தினர் மனமும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் . சந்தோஷம் என்றால் என்ன அது எப்படி எப்போது வரும் ? சந்தோஷத்தை அனுபவிப்பது எப்படி ? அடுத்தவரை சந்தோஷபடுத்துவது எப்படி ?


ü  முதலில் வீட்டில் உள்ள மனைவி , குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் . உங்கள் அலுவலக கோபதாபங்களை அவர்களிடம் காட்டாதீர்கள் . உங்கள் மனதை மாற்றும் அற்புத மருந்து குடும்பம் .


ü  குழந்தைகளுடன் விளையாடுங்கள் . அந்த சமயத்தில் உங்களை புத்திசாலியாக நினைக்காமல் நீங்களும் ஒரு குழந்தையாக மாறுங்கள் . சந்தோசம் பொங்கும் .


ü  வாழ்க்கைக்கு தேவையான பொருள்களை மட்டும் வாங்குங்கள் . அடுத்தவரை பார்த்து தேவையில்லாத பொருளை வாங்கி கடனாளியாகாதீர் .


ü  கோவில் செலும் போது உண்டியலில் பணம் போடுவதுக்கு பதில் அங்கு உள்ள ஏழைக்கு போடுங்கள் . அவர்கள் உங்களை தெய்வமாக பார்ப்பார்கள் .


ü  பழைய , பள்ளி, கல்லூரி கால நண்பர்களுடன் அடிகடி தொடரில் இருங்கள் . ஒரு போன் , மெசேஜ் அனுப்புவதால் உறவுகள் தொடரும் .


ü  நண்பர்களின், உறவினர்களின் பிறந்த தேதியை குறித்துவைத்து கொள்ளுங்கள் . அன்று முடிந்தால் போன் அல்லது மெசேஜ் செய்யுங்கள் . அன்று அவர்கள் அடையும் ஆனந்தம் , மகிஷ்சிக்கு அளவே இருக்காது .


ü  குறைந்தபட்சம் மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள் . அது உங்களை புத்துணர்வு பெற செய்யும் . சுஜாதா “தினமும் பத்து பக்கமாவது படியுங்கள் “ என சொல்கிறார் .


ü  சிரித்த முகத்துடன் இருங்கள் . முகத்தை பார்த்தே பலர் அடுத்தவர்களை எடை போடுகிறார்கள் .


ü  அடுத்தவர் குறைகளை மென்மையாக சுட்டிகாட்டுங்கள் . வீண் விவாதம் சண்டையில் அல்லது பிரிவில்தான் முடியும் .


ü  நல்ல நகைசுவையான நிகழ்சிகளை பாருங்கள் . கண்டிப்பா சீரியல் பார்க்காதீங்க . நீங்கள் ரசித்த நகைசுவைகளை நண்பர்களுடன் , குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள் .


2013 இல்  நடந்த நல்லவைகளை விட அதிகமான நல்லவைகள் ங்கள் குடும்பத்தில் நடக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



HAPPY NEW YEAR 2014

Friday, December 27, 2013

பாத்திரம் கழுவுவது எப்படி ? கிங்’ஸ் கிச்சன்











இவர்களாம் போடும்போது ஒரு” உலகமகா  பிரபல பதிவரகிய “ நீங்கள் ஒன்றும் போடவில்லையா என கேடி சாரி கோடிகணக்கான வாசகர்கள் கேட்டதால் இந்த பதிவு .

பாத்திரம் கழுவுவது எப்படி ?

வெந்நீர் போட்டாலும் , டீ போட்டாலும் , முட்டை அவிச்சாலும் கடைசியில் கண்டிப்பாக பாத்திரம் கழுவ வேண்டும் . பேச்சுலராக இருந்தாலும் , திருமண ஆனா ஆளாக இருந்தாலும் கண்டிப்பாக பாத்திரம் கழுவனும் (இல்லைனா சோறு கிடையாது ).

தேவையா பொருள்கள் :
அழுக்கான பாத்திரங்கள் , (இதுதான் ரொம்ப முக்கியம் )
விம் ,பிரில் , சபீனா அல்லது தேங்கா நாறு  

செய்முறை :


முதலில் ஆண்களாக இருந்தால் கைலியை மடித்துகட்டவும் .(பெண்களாக இருந்தால் என யாராது கேட்டிங்க உம்மாச்சி கண்ணா குத்தும் )

அழுக்கு இரண்டுவகைப்படும் ஒன்னு பவர் ஸ்டார் போல , இரண்டாவது சிவாஜி போல .அழுக்கான பாத்திரத்தை எடுக்கவும் . சில அழுக்கு உடனே போய்விடும் அது பவர் ஸ்டார் போல . சில அழுக்கு பாத்திரத்துடன் ரொம்ப ஒன்றிபோய்விடும் அது சிவாஜி போல .

பாத்திரத்தை அழுக்கு போகும் வரை நன்றாக தேய்க்கவும் . உங்களுக்கு பிடிக்காத ஒருவரை அல்லது உங்கள் மனைவி / கணவன் முதுக்குக்கு சோப்பு போடுவதாக நினைத்து கொள்ளவும் . அப்போதுதான் ரொம்ப வேகமாக அழுத்தி தேய்க்க முடியும் .

பாத்திரத்தை நன்றாக கழுவிய பின் வெய்யிலில் காயவைக்கலாம் , சீனு , ஆவி , தமிழ்வாசி வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் பாத்திரத்தை உங்கள் வீட்டுக்குள்ளேயே காயவைப்பது நல்லது .

டிஸ்கி : இதை விட எளிய வழி ஒரு வேலைக்காரியை வைத்துகொள்வது .(பாத்திரம் கழுவ மட்டும் ). அவளால் குடும்பத்தில் பிரச்சனை வந்தால் சங்கம் பொறுப்பல்ல .

டிஸ்கி : அடுத்து தீவிரவாதி “வீடு கூட்டுவது எப்படி ?” என்றும் அரசன் “துணி துவைப்பது எப்படி என்றும் ?” வரலாற்று சுவடுகள் “ ஒட்டகம் மேய்ப்பது எப்படினும் “ பதிவு போடுவார்கள் .