> என் ராஜபாட்டை : உறவு வலுப்பட என்ன செய்யலாம்

.....

.

Wednesday, July 27, 2011

உறவு வலுப்பட என்ன செய்யலாம்




நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உள்ள நமது உறவு வலிமையாகவும், நல்ல படியாகவும் இருக்க சில வழிகள்.

  1. நண்பர்கள்/உறவினர்கள் திருமண நாள், பிறந்த நாளை குறித்துவைத்து கொள்ளுங்கள். Call செய்ய முடியாவிட்டாலும் ஒரு SMS லாவது ஒரு வாழ்த்து சொல்லுங்கள்.

  1. திபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் முடிந்தால் நேரில் அல்லது போனில் பேசுங்கள்.

  1. நண்பர்கள்/உறவினர்களின் நல்ல விஷயத்தில் கலந்துகொள்கின்றிர்கலோ இல்லையோ துக்க காரியத்தில் தவறாமை கலந்துகொள்ளுங்கள்.

  1.  நண்பர்கள்/உறவினர்கள் நமது வீட்டிர்க்கு வந்தால் முதலில் டி.வி யை அனைத்துவையுங்கள்.

  1. நாம் அடுத்தவர் வீட்டுக்கு சென்றால் அவர்கள் டி.வி பார்த்தால் அவர்கள் பார்க்கும் நிகழ்சியை நீங்களும் பாருங்கள். உங்கள் விருப்பத்தை திணிக்காதிர்கள்.

  1. குழந்தை உள்ள வீட்டுக்கு சென்றால் பிஸ்கட், பழங்களும் வாங்கிசெல்லுங்கள்.

  1. நமது வீட்டிர்க்கு யாராவது எதாவது வாங்கிவந்தால் “அய்யோ ! இதை இங்கே யாரும் திங்கமாட்டாங்கலே” என்று சொல்லாதிர்கள்.

  1. முடித்தவரை வார இறுதி நாட்களில் மதியம் 2 TO 4 யார்வீட்டுக்கும்  செல்லாதிர்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு ஒய்வு எடுக்கும் நேரம் அது.

  1. இரவு தங்க போவதாக இருந்தாலோ அல்லது சாப்பிடும் நேரத்தில் செல்ல வேண்டி இருந்தாள் அவர்களுக்கு போன் செய்துவிட்டு செல்லுங்கள்.

  1. நீங்கள் செல்லும் வீட்டில் திருமணமாகி சில மாதமான பெண் இருந்தால் “எதாவது விஷேஷம் உண்டா?” என கேட்காதிர்கள். அவர்கள் தாய்மை அடையவில்லை என்றால் அதை சொல்ல வருத்தபடலாம்.

  1. நண்பர்கள்/உறவினர்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க போகும் இடத்தில் “குழந்தை ஏன் கருப்பா இருக்கு, முடி ஏன் கொஞ்சமா இருக்கு, ஏன் அப்பா போல இல்லை , பெண் குழந்தைதானா?” என குடும்பத்தில் குண்டு வைக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்.

  1. நண்பர்கள்/உறவினர்களிடம் முடிந்த அளவு கடன் வாங்காதீர்கள்/ கொடுக்காதீர்கள்.

  1.  நண்பர்கள்/உறவினர்களின் முன்பு குழந்தையை திட்டாதீர்கள் அவர் மனம் பாதிக்கும்.



எனக்கு தெரிந்த அளவு சொல்லியுள்ளேன். உங்களுக்கு வேறு எதாவது தோன்றினால் பின்னுட்டதில் சொல்லுங்கள்.

25 comments:

  1. நல்ல வழிகள் தல!
    thamil10 இணைக்கப்படவில்லை!

    ReplyDelete
  2. சி pi தினசரி இதே பாட்டு தான் பாடுறார் !!

    ReplyDelete
  3. @மைந்தன் சிவா
    அவர் என்றும் பேச்சு மாறமாட்டார்

    ReplyDelete
  4. நல்ல கருத்துக்கள் சொல்லியுள்ளீர்கள் ராஜா.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. \\\நீங்கள் செல்லும் வீட்டில் திருமணமாகி சில மாதமான பெண் இருந்தால் “எதாவது விஷேஷம் உண்டா?” என கேட்காதிர்கள்\\\ திருமணமாகாத பெண்கள் இருந்தால் ...ஹி ...ஹி ...

    ReplyDelete
  6. உறவு வலுப்பட நல்ல யோசனைகள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. உறவுகள் மேம்பட
    உணரவேண்டிய வாக்கியங்கள்...
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. சூப்பர் அறிவுரைகள்.....!!!!!

    ReplyDelete
  9. உறவுகளில் கவனிக்க வேண்டிய பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. பகிர்வு அருமை.பலருக்கு பயன்படும்.

    ReplyDelete
  11. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுடோமில்ல..

    ReplyDelete
  12. வழமான வாழ்க்கை வாழ்வதற்கேற்ற பயனுள்ள தகவல்கள் சகோ.

    ReplyDelete
  13. இதுவல்லவோ பரிந்துரை!மகுடமே அணிந்து கொள்ளலாம்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. நல்ல விடயங்களை சொல்லியுள்ளீர்கள் நன்றி நண்பா ..

    ReplyDelete
  15. எளிதில் கடைபிடிக்கக் கூடிய வழிகள்தான் நண்பரே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. எல்லோரும் அறிந்த தகவல் இது...
    கடைபிடிக்க மறுக்கும் தகவல் இது...
    தெரிந்தே தப்பு செய்யும் இடமும் இதுவே...

    நல்ல முயற்சி...
    அடிக்கடி இப்படி நினைவு படுத்துங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. உபயோகமான ஐடியாக்கள். அதிலும் 11 மற்றும் 12 மிக எதார்த்தம்.

    ReplyDelete
  18. எல்லாமே அருமை. கடைபிடிக்க வேண்டும்

    ReplyDelete
  19. \\\நீங்கள் செல்லும் வீட்டில் திருமணமாகி சில மாதமான பெண் இருந்தால் “எதாவது விஷேஷம் உண்டா?” என கேட்காதிர்கள்\\\ திருமணமாகாத பெண்கள் இருந்தால் ...ஹி ...ஹி ...
    அப்படி போடு அரிவாள

    ReplyDelete
  20. எல்லாமே நல்லா தகவல்

    ReplyDelete
  21. அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...