> என் ராஜபாட்டை : அசினையும் தெரியும், நமீதாவையும் தெரியும்! -திருமாவளவன்

.....

.

Sunday, July 17, 2011

அசினையும் தெரியும், நமீதாவையும் தெரியும்! -திருமாவளவன்

சென்னை, இந்தியா: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஓட்டுப் போடாமல் (ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை), தனக்குப் பின் அரசியலுக்கு வந்த விஜயகாந்தின் கட்சிக்கு ஓட்டுப்போட்ட மக்கள்மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
அவரது கோபம், வார்த்தைகளாக வெடித்திருக்கின்றன.“எங்களுக்கு ஓட்டுப் போடாமல், யார் யாரையோ சட்டமன்ற உறுப்பினர்களாக்கி எதிர்க்கட்சியில் உட்கார வைத்திருக்கிறீர்கள். எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தெரியும்?” என்று கேள்வி எழுப்பிய திருமா, அதற்கான பதிலையும் கூறியுள்ளார்.“எதிர்க் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சமூக நீதி அரசியல் தெரியாது. ஆனால், அசினைப் பற்றியும் நமீதாவைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.


அம்பேத்காரைப் பற்றித் தெரியாது. ஆனால், தமது தலைவனோடு (விஜயகாந்த்) சினிமாவில் சேர்ந்து டூயட் பாடிய நடிகைகளைப் பற்றி விலாவாரியாகத் தெரியும்!” என்று ஆவேசமாக முழங்கியுள்து இந்தச் சிறுத்தை!கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக விடுதலைச் சிறுத்தைககளின் கூட்டணிக் கட்சி தி.மு.க. மேடையேற்றியது யாரை? குஷ்பு உட்பட சினிமா நடிகைகளையும்தான். குஷ்புவுக்கு எதிராகப் போராட்டம் நடாத்திய திருமாவின் கட்சிக்கும் சேர்த்துத்தான் இந்த நடிகைகள் பிரசாரம் செய்தார்கள்.அட, அதை விடுங்கள். திருமா சினிமாவில் நடிக்கவில்லையா? அன்புத்தோழி என்றொரு படத்தில் (யாராவது பார்த்தீர்களா?) ஹீரோவாக நடித்தாரே? அதில் ஹீரோயினே கிடையாதா?

Thanks: Viruvirupu.com

4 comments:

 1. ha ha ha ....
  good question at da right time...
  gd post

  ReplyDelete
 2. சரியான கேள்வி.அந்தப்படம் நான் பாக்கலையே.பாத்திருந்தா இன்னும் சொல்லியிருப்பேனே.
  இவிங்க இப்பிடிதான்.தன் முதுகிலோடும் சாக்கடை தெரியாமல் அடுத்தவனின் காலில் தூசு பட்டிருக்கு என்று கூறிக்கொண்டு திரிவாங்க.இதயெல்லாம் கணக்கில எடுக்கப்படாது.
  தெருவில போகும்போது சில ஜீவன்கள் குரைக்கதான் செய்யும்.நாமளும் திருப்பி குரைக்கமுடியுமோ?

  ReplyDelete
 3. அரசியலில இதெல்லாம் சகஜமப்பா! லுாசா விடுங்க! ஹிஹிஹி

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...