> என் ராஜபாட்டை : மைக்ரோசொப்ட்டின் புதிய சமூக இணைய வலையமைப்பு விரைவில்

.....

.

Saturday, July 23, 2011

மைக்ரோசொப்ட்டின் புதிய சமூக இணைய வலையமைப்பு விரைவில்

உலகின் முதனிலை மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சமூக இணைய வலையமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மைக்ரோசொப்ட் இணையதளத்திலிருந்து கசிந்த தகவல்கள் இதனை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
டுலாலிப் (Tulalip) என்னும் சமூக இணைய வலையமைப்பை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
டுலாலிப் என்னும் இந்த சமூக இணைய மற்றும் தேடுதளம் பற்றிய தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பிரசுரமாகியிருந்தது.
Socl.com”  என்னும் இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
மைக்ரோசொப்ட் ஆய்வு குழுவினரால் தயாரிக்கப்பட்ட புதிய திட்டம் தொடர்பான உத்தேச ஆவணமொன்றே இவ்வாறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் தகவல்களை தேடுவதற்கும் மிகவும் காத்திரமான இணையமாக இந்த புதிய சமூக இணைய வலையமைப்பு அமையும் என வெளியிடப்பட்டிருந்த தரவுகளைக் கொண்டு அணுமானிக்க முடிந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘உங்களுக்கு எது தேவையோ அதனை தேடுவதற்கும், எதனை பகிர வேண்டுமே அதனை மிகவும் இலகுவாக பகிர்ந்து கொள்ள முடியும்’ என்ற இந்த புதிய இணையத்தின் அறிமுக வாசகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
துரதிஸ்டவசமாக இணையத்தில் கசிந்த தகவல்களில் உத்தேச இணையத்தின் செயன்முறை தொழிற்பாடுகள் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை.
கடந்த 12ம் திகதி Socl.com என்னும் இணையத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் கொள்வனவு செய்திருந்தது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள மேற்கு வொஷிங்டன் பிரதேசத்தைச் சேர்ந்த அமெரிக்க மக்களை குறிக்கும் சொல்லே டுலாலிப் ( Tulalip ) என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக இணைய வலையமைப்பு ஒன்றை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் ஆர்வம் காட்டுகின்றதா என்பது இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், கூகிள் பிளஸ் சமூக இணைய வலையமைப்பு பிரபல்யம் அடைந்து வருகின்ற நிலையில், மைக்ரோசொப்ட் நிறுவனம் மற்றுமொரு சமூக வலையமைப்பை உருவாக்க முயற்சி செய்தால் அது சவால் மிக்கதாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Thanks: vanakamnet.com

23 comments:

 1. பேஸ்புக் ...
  கூகிள் + ...

  வரிசையில் இன்னொன்றா ?

  முடியலே...

  ReplyDelete
 2. அதையும் பாத்துருவோம் ........

  ReplyDelete
 3. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. சபாஷ் சரியான போட்டி.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 6. nalla payanulla pathivu..
  vaalththukkal..

  ReplyDelete
 7. இன்னொன்றா...முடியல! :-)

  ReplyDelete
 8. என்னையா புதுசு புதுசா கொண்டாறாங்க.. காட்டான் குளிக்கும்போது களட்டி வைக்கும் கோவணத்தையே எங்க வைச்சான்னு தேடுறவன்..?

  இவங்களுக்கெல்லாம் கொடுக்கிற பாஸ்வேட்டை என்னன்னுய்யா ஞாபகம் வைச்சிருக்கிறது.. என் ராஐ பேட்ட ராசா இதுக்கொரு வழி சொல்லுய்யா..

  காட்டான் குழ போட்டான்..!

  ReplyDelete
 9. என்னய்யா புது புது மேட்டரா வெளியே வருது....!!!!

  ReplyDelete
 10. அடடா.. இருக்கிறது போதாது என்று இது வேறயா?

  புதிய தகவல்.. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. புதிய தகவல். ஆனால் face book மாதிரி மீதி உள்ளவை பிரபலமாகுமா என்று தெரியவில்லை?

  ReplyDelete
 12. வரட்டும் இணைவோம்

  ReplyDelete
 13. பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. நல்ல தகவல் நண்பரே

  ReplyDelete
 15. பாஸ், இப்படிப் புதுசு புதுசா நிறைய சமூக வலைத் தளங்கள் வருகின்றதே, நாம் எதனைப் பயன்படுத்துவது என்று குழப்பமாக இருக்கிறது.

  மைக்ரோசொப்ட் சமூக வலைத்தளம் பற்றிய அறிமுகப் பதிவுக்கு நன்றி பாஸ்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...