மனிதனின் வாயில் பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதன் காரணமாக மிருகக் கடியினைப் போலவே மனிதக் கடியும் ஆபத்தானது. கடியினால் காயம் ஏற்பட்டால் உடனடியாக காயத்தை சுத்தமாக்கி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது மிக முக்கியமானது. கடியின் தன்மையைப் பொறுத்து உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானது.
மனிதக் கடிகள் எவ்வாறு ஏற்படுகின்றன?
மனிதக்கடி நேரடியாகவோ (உதாரணமாக ஒரு குழந்தை ஒருவரைக் கடித்தல்) அல்லது மறைமுகமாகவோ (சண்டைகளின் போது அல்லது விளையாட்டுக்களின் போது தற்செயலாக) வாயினால் ஒருவருடைய உடற்பாகங்களைக் கடிப்பதினால் ஏற்படுகிறது.
பொதுவாக மனிதக் கடி கைகளில் தான் ஏற்படுகிறது, ஆனால் நேரடியாகக் கடிப்பது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இடம்பெறலாம். தோலில் கடித்துக் காயப்படுத்துவது கன்றிப்போதல் அல்லது திசு சேதங்கள் மற்றும் தொற்றுக்கள் ஏற்படல் போன்றவற்றிற்கு காரணமாக அமையும். டெட்டனஸ் மற்றும் ஹெபாடைட்டிஸ் பி போன்ற தொற்றுக்களை மனிதக் கடி பரப்பும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காயத்தை ஏற்படுத்தும் கடி
காயங்கள், துளைகளை ஏற்படுத்தும் கடியினால் மேலோட்டமான அல்லது ஆழமான புண்கள் ஏற்பட்டு உதிரப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆழமாகக் கடிப்பது உதிரப்போக்கை ஏற்படுத்தும், இதற்கான முதலுதவியின் முதற் படி அந்தக் காயத்தை சோப் மற்றும் நீரினால் தூய்மைப்படுத்தி அதிலுள்ள பாக்டீரியாக்களை அகற்றுவது தான்.ஆழமான கடி
ஆழமான கடிகளின் போது தசை நாண்கள் அல்லது மூட்டுக்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கணுக்களில் ஏற்படும் ஆழ்ந்த கடிகள் காரணமாக எலும்புகள் மற்றும் தசைநார்களில் சேதங்கள் ஏற்பட்டு அந்தக் காயம் ஒழுங்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் விடப்பட்டால் நீண்டகால வலிகளுக்கு வழிகோலும். எனவே இதனை எக்ஸ்ரே மூலம் மருத்துவர் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலோட்டமான கடி
மேலோட்டமான கடி காயங்களை ஏற்படுத்தாவிட்டாலும் திசுக்களில் சேதங்களை ஏற்படுத்தக் கூடும். இவ்வாறான பெரும்பாலான கடிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சைகளை செய்துகொள்ள முடியும். குளிர்ந்த ஒத்தனம் வீக்கமடைவதிலிருந்து தடுக்கும். ஆழமான கடி இல்லாவிட்டாலும் அதைக் கழுவி சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களை நீக்குவது நல்லது.டிஸ்கி 1 : இந்த கடில சி.பி யின் பஸ் கணக்குல வராது ..
Thanks : வணக்கம்நெட்
Tweet |
வடை இதை கடிக்கவா வேணாமா
ReplyDeleteகடிகடிகடிகடிகடிகடிகடிகடிகடி!
ReplyDeleteநல்ல பதிவு தான் .......நன்றி
ReplyDeleteகடி பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்துடீங்க!!
ReplyDeleteஆனாலும் தேவையான பயன்படக்கூடிய ஆராய்ச்சிதான்.
நன்றி.
டிஸ்கி ரொம்ப முக்கியம்? ராஸ்கல்
ReplyDeleteநல்ல கடி..
ReplyDeleteஇந்தக் கடிக்கு என்ன மருந்தாம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு
டிஸ்கி.. சூப்பர்..
ReplyDelete