முதலுதவிப் பெட்டியொன்றை இல்லத்தில் தயாரிப்பது எப்படி?

முதலுதவி பெட்டி அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு அவசியமான பொருள். ஆனால் பெரும்பாலானோரின் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருப்பதில்லை. உண்மையைச் சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேரின் வீட்டில் இந்தப் பெட்டி இருக்கிறது?
இன்றிலிருந்தாவது அனைவரது வீடுகளிலும் முதலுதவிப் பெட்டியை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு கடினமான விடயம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மருந்துப் பொருட்களை வீட்டில் வைக்கும் போது குழந்தைகளின் கவனம் அவ்விடத்தில் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது அவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குங்கள்.
தேவையான பொருட்கள் :
• தண்ணீர் புகாத, சிறிய, உறுதியான பெட்டி அல்லது பை
• சிப் கொண்டு மூடப்படும் பைகள்
• காயங்களுக்கான மருந்துகள் :- (கிருமி நீக்கி, காயத்துக்கு போடும் கட்டு, பஞ்சு போன்ற மென்மையான துணி, மருந்து சேர்க்கப்பட்ட துணி, வலி நிவாரணி மற்றும் antibiotic )
• ஓரல் antihistamines
• மருத்துவ சாதனங்கள் (கையுறைகள், tweezers மற்றும் கத்தரிக்கோல்)
• அவசர தேவைக்கான மருந்துகள்
• மேலதிகமானவை, உங்கள் தேவைக்காக (அவசர தொலைபேசி இலக்கங்கள், பாம்புக் கடிக்கான மருந்து,ipecac, charcoal tablets )
சிறிய பெட்டி அல்லது பையை தெரிவு செய்யுங்கள். அது கொண்டு செல்ல இலகுவானதாகவும், பாரமற்றதாகவும், சகல முதலுதவி பொருட்களையும் வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.• சிப் கொண்டு மூடப்படும் பைகள்
• காயங்களுக்கான மருந்துகள் :- (கிருமி நீக்கி, காயத்துக்கு போடும் கட்டு, பஞ்சு போன்ற மென்மையான துணி, மருந்து சேர்க்கப்பட்ட துணி, வலி நிவாரணி மற்றும் antibiotic )
• ஓரல் antihistamines
• மருத்துவ சாதனங்கள் (கையுறைகள், tweezers மற்றும் கத்தரிக்கோல்)
• அவசர தேவைக்கான மருந்துகள்
• மேலதிகமானவை, உங்கள் தேவைக்காக (அவசர தொலைபேசி இலக்கங்கள், பாம்புக் கடிக்கான மருந்து,ipecac, charcoal tablets )
அந்த பை அல்லது பெட்டி நீர் உட்செல்லாத வகையில் இருக்க வேண்டும். நீங்கள் பயணிக்கும் நேரங்களில் அதை எடுத்துச் செல்வீர்களானால் முதலுதவி பொருட்களை சிப் உள்ள பைக்குள் கவனமாக வையுங்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் முதலுதவி பை தேவையான சகல மருந்து உபகரணங்களையும் உள்ளடக்கியுள்ளதா என சரி பாருங்கள். ஒவ்வொரு பொருட்களின் எண்ணிக்கையும் உங்கள் குடும்ப அங்கத்தவரின் எண்ணிக்கைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
காயத்துக்கு போடும் கட்டு, பஞ்சு போன்றன அதிகளவில் தேவைப்படுவன. மருந்து சேர்க்கப்பட்ட துணி, கிருமி நீக்கி, வலி நிவாரணி, 4 அங்குல பஞ்சு, வெவ்வேறு அளவுகளில் வலி நிவாரணி துணிகள், ஒட்டும் துணி, ஓரல் antihistamines கையுறைகள், tweezers மற்றும் கத்தரிக்கோல், antibiotic கிறீம் போன்றன உள்ளனவா என உறுதிப்படுத்துங்கள்.சில வேளைகளில் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஒவ்வாமை ஏற்படுமானால் அதற்கான மருந்துகளையும் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள். அவசர தொலைபேசி இலக்கங்கள், பாம்புக் கடிக்கான மருந்து, ipecac, charcoal tablets என்பனவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். கட்டாயம் அவற்றையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் முதலுதவி பையை அல்லது பெட்டியை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதியில் அடிப்படை மருந்துப் பொருட்களும் உதாரணமாக மருந்து சேர்க்கப்பட்ட துணி, மருந்து நெய் போன்றனவும், இரண்டாவது பகுதியில் மருந்துகளையும் வையுங்கள். மீண்டும் ஒரு தடவை அனைத்துப் பொருட்களும் சிப் உள்ள பைகளில் போடப்பட்டுள்ளனவா என சரிபாருங்கள்.
Thanks: vanakkamnet
Tweet |
இப்போதைய உலக நிலையில் நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் இதுப்போன்று முதலுதவி பெட்டியை வைத்திருப்பது நல்லது.
ReplyDeleteபதிவுக்கு நன்றி
நிச்சயமாய் உபயோகமான செய்திதான். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பயணத்திலும் கூடவே கொண்டுசெல்லவேண்டிய அவசியமான பெட்டிதான்.
ReplyDeleteமிகவும் அவசியமான பதிவு .நன்றி !
ReplyDeleteஅன்பரே மிக அவசிய தகவல் அவசர மக்களுக்கு வழங்கிய உங்களுக்கு நன்றிகள்
ReplyDeleteNamdri!
ReplyDeleteNamdri!
ReplyDeleteNamdri!
ReplyDeleteஉபயோகமான செய்தி
ReplyDeleteரொம்ப உபயோகமான பதிவு ராஜா, மருந்து, பஞ்சு அகியவற்றை தனித்தனியாக வைத்து அவசரத்தில் தேடுவோம்.உடனடியாக தயார் செய்துவிட வேண்டிதான்..நன்றி..
ReplyDeleteஇப்போதைய உலக நிலையில் நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் இதுப்போன்று முதலுதவி பெட்டியை வைத்திருப்பது நல்லது.
ReplyDeleteபதிவுக்கு நன்றி//
REPEAT
மிக மிக அவசியமான ஒரு ஆலோசனை. எல்லோருக்கும் கண்டிப்பாக பயன்படும். நன்றி...
ReplyDeleteஅவசியமான பகிர்வு!
ReplyDelete