> என் ராஜபாட்டை : நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ?

.....

.

Saturday, December 3, 2011

நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ?




நமது பதிவர் நாஞ்சில் மனோ நேர்மையானவர் என சொன்னால் சிபி, தமிழ்வாசி, சசி, கே.ஆர். விஜயன் போன்றவர்கள் ஓத்துகொள்ள மறுகின்றனர். அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன்.  நீங்களே அவர் நேர்மையை புரிந்துகொள்விர்கள்.

சம்பவம் 1:

மனோ சிறு குழந்தையாக இருக்கும் போது  நிறைய தப்பு செய்வார்[ இப்ப மட்டும் என்ன ] எனவே அவரிடம் அவர் அப்பா ஒரு உண்டியல் குடுத்து “நான் 6 மாதம் வெளிஊர் செல்கிறேன். இந்த ஆறு மாதத்தில் நீ ஒவ்வொறு முறையும் தப்பு செய்யும் போதும் இந்த உண்டியலில் 1 ரூபாய் போடு, நான் உர் திரும்பியதும் வந்து பார்கிறேன்” என சொல்லிவிட்டு சென்றார்.

6 மாதம் கழித்து வீட்டிர்க்கு வந்த மனோவின் தந்தை “மனோ உண்டியலை எடுத்து வா “ என்றார். மனோ எடுத்துவந்த உண்டியலை திறந்து பார்த்த அவர் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி. அதில் 1 ரூபாய் மட்டுமே இருந்தது. “மனோ இந்த 6 மாததில் ஒருமுறை மட்டுமே தப்பு செய்துள்ளாய் எனக்கு ரொம்ப சந்தொஷமா இருக்கு, அப்படி என்ன தப்பு பன்னியதற்க்கு இந்த 1 ரூபாய் போட்ட?”

மனோ “ அவசரமா பணம் தேவைப்பட்டது அதான் இந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 512 ரூபாய்ய எடுத்துகிட்டேன், அந்த தப்புகாக போட்டதுதான் இந்த 1 ரூபாய்.


சம்பவம் 2:

மனோ, விக்கி, கருன் மூவரும் ஒரு சேட்டிடம் தலா 10000 ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். அந்த சேட் திடிரென இறந்துவிட்டார். இவர்கள் கடன் வாங்கியது யாருக்கும் தெரியாது. அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மூவரும் அவர் உடலை எரிக்கும் இடத்திர்க்கு சென்றனர்.

விக்கி : என்னிடம் உள்ளது 4,000 ரூபாய் தான் அதை உங்கள் சிதையில்
          எறிகிறேன்,-  என கூறி பணத்தை நெருப்பில் போட்டார்.

கருன் : நான் விக்கியை போல இல்லை நான் உங்களிடம் வாங்கியதில்
         60% பணத்தை போடுகிறேன்- என கூறி 6000 ரூபாய் பணத்தை
          நெருப்பில் போட்டார்.

மனோ :அவனுங்க இரண்டு பேரும் ஃபிராடுங்க.. நான் நேர்மையானவன்.
         உன்னிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருகிறேன் என கூறி
        12000 ரூபாய்க்கான காசோலையை (செக்) தூக்கி நெருப்பில் போட்டார்.


இப்ப சொல்லுங்க மனோ நேர்மையானவரா? இல்லையா ?






39 comments:

  1. மனோ கிட்ட நீங்க எவ்வளவு வாங்கினிங்க?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. அடடா இம்புட்டு நேர்மையானவரா அண்ணே மனோ ஹிஹி!

    ReplyDelete
  3. இந்த ரெண்டு சம்பவங்களை மட்டும் வைத்து எப்பிடி சொல்ல இன்னும் கொஞ்சம் சொன்னால் நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ? என்று பரிசீலினை செய்து பார்க்க வாய்ப்பு உண்டு

    ReplyDelete
  4. எலேய் இன்னைக்கு சொறியுரதுக்கு நான்தானா கிடைச்சேன் ஹி ஹி...

    ReplyDelete
  5. விக்கி மானஸ்தன்ய்யா, ஆறாயிரம் ரூபாவை வசமா பதுக்கிட்டானே நாதாரி ராஸ்கல்...

    ReplyDelete
  6. சிபி பயபுள்ளை வந்து என்ன சொல்லப்போகுதோ ஹி ஹி...

    ReplyDelete
  7. //மனோ :அவனுங்க இரண்டு பேரும் ஃபிராடுங்க.. நான் நேர்மையானவன்.
    உன்னிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருகிறேன் என கூறி
    12000 ரூபாய்க்கான காசோலையை (செக்) தூக்கி நெருப்பில் போட்டார்.//

    அண்ணா

    மனோ அண்ணாச்சி பேங்க்ல பணம் இருந்திச்சா..

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  8. நல்ல கற்பனை நண்பரே..

    ரசிக்க வைத்தது..

    அண்ணாச்சி எப்பவுமே தங்கம் தானே...(!)

    ReplyDelete
  9. இன்னைக்கு உங்க சாதத்திற்கு நானும் ஊறுகாயா?

    ReplyDelete
  10. மனோ நேர்மையானவர்ன்னு ஊர், உலகத்துக்கே தெரியுமே..
    அவ்வ்வ்வவ்வ்வ்...

    ReplyDelete
  11. வயசானாலும் உங்க குறும்பும் குசும்பும் உங்கள விட்டு இன்னும் போகவே இல்ல...:)

    ReplyDelete
  12. இன்னைக்கு நம்ம கடைல "மனவாசம்"ன்னு ஒன்ன எழுதி வச்சிருக்கேன்..
    கடை விலாசம் இதுதானுங்க...
    http://cmayilan.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  13. ரொம்போ ரொம்போ நல்லவர் அண்ணே! பகிர்விற்கு நன்றி.
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  14. அண்ணே நேர்மைன்னா என்னண்ணே?

    ReplyDelete
  15. ஆகா, இன்னைக்கு ராஜா போதைக்கு மனோவா

    ReplyDelete
  16. மனோவின் நேர்மை பற்றிக் கேள்வி எழுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.-இப்படிக்கு -அவரது அமைச்சரவையின் அறநலத்துறை அமைச்சர்!

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

    ReplyDelete
  18. நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ? அதை நெப்போலியன் கிட்ட கேட்டா கரக்ட்டா சொல்லுவார்

    ReplyDelete
  19. ரைட்டு.... நல்லா கலாய்க்கறாங்கப்பா....

    ReplyDelete
  20. சென்னை பித்தன் said...
    மனோவின் நேர்மை பற்றிக் கேள்வி எழுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.-இப்படிக்கு -அவரது அமைச்சரவையின் அறநலத்துறை அமைச்சர்!//

    ஹா ஹா ஹா ஹா தல அசத்திப்புட்டீங்க...!!!

    ReplyDelete
  21. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அண்ணே நேர்மைன்னா என்னண்ணே?//


    அதானே கிலோ என்ன விலைன்னு கேளும்ய்யா...?

    ReplyDelete
  22. டொன்ட டொன்ட டொன்ட டொயிங்

    ReplyDelete
  23. நம்ம மக்கா இம்புட்டு நேர்மையா!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  24. ஹ, ஹ, ரைட்டு நடக்கட்டும்.

    ReplyDelete
  25. காமெடி கலக்கல் ...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    அண்ணன் நாஞ்சில் மனோ (512 ரூபாய்ய எடுத்துகிட்டேன்)
    என்று உண்மையை சொன்ன அ.நா.மானோ அவர்கள்
    மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும்
    நேர்மையானவர்.

    ReplyDelete
  26. பான்ட் என்ன எம்புட்டு பெரிய சைஸ் !!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  27. பகிர்வு நல்லாயிருக்கிறது.... நேர்மையானவர்கள் பணத்தை நெருப்பில் போட மாட்டார்கள்.... அப்படின்னா????

    ReplyDelete
  28. அவ்வ...... மனோ அண்ணே மேல ஏன் இந்த கொலை வெறி????

    ReplyDelete
  29. மனோ ரொம்ப நல்லாரும் கூட - எவ்வளோ அடிச்சாலும் தாங்குறாரே!

    ReplyDelete
  30. பகிர்வு நல்லாயிருக்கிறது....

    ReplyDelete
  31. ரொம்ப நேர்மையானவர்தான்....
    ஆளாளுக்கு அவரை ஆத்துறீங்களே....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...