> என் ராஜபாட்டை : SMS - சிறுகதை

.....

.

Monday, December 26, 2011

SMS - சிறுகதை




“எப்படிடா.. உனக்கு மட்டும் நிறைய பிகர் மாட்டுது” ஆபிஸ் விட்டு செல்லும் வழியில் ரவியிடம் கேட்டான் விஜய். “அது பெரிய விஷயமில்லடா… உன் மொபைல எடுத்துகோ யாராது புது நம்பர்க்கு அல்லது உனக்கு தெரிந்த ஆனால் உன் நம்பர் தெரியாத பிகருக்கு ஒரு Message அனுப்பு. “

“என்ன அனுப்பனும்…”- விஜய்

this is my new number, if you receive this message pls sent mesg or missed call” by பாரதி “ னு அனுப்பு”

“எதுக்கு இந்த மாதிரி அனுப்பனும் ?”

“ பாரதினு பெயர் பார்த்ததும் அது ஆணா ? பெண்ணானு தெரியாது, சிலர் நீ அனுப்புற SMS ய் கண்டுக்கமாட்டாங்க, சிலர் “நீங்க யாருனு” பதில் SMS அனுப்புவாங்க, அல்லது கால் பன்னி கேட்ப்பாங்க, அப்படி பேசுரவங்களுக்கிட்ட பிட்டு போட்டு புடிக்கவேண்டியதுதான்.”- ரவி

“செம ஐடியாடா!!! சரி நான் கிளம்புறேன்” என கூறிவிட்டு புறப்பட்டான் விஜய்.

“கமலா, கமலா என அழைத்துகொண்டே வீட்டிர்க்குள் வந்தான் ரவி.
“சமையல்கட்டில் இருக்கேன்ங்க..” என்றாள் கமலா.

“காப்பி எடுத்துவாமா” என கூறி சோபாவில் அமர்ந்த நேரம் கமலாவின் மொபைலில் SMS RING அடித்தது. என்ன SMS என எடுத்துபார்த்தான், அதில்…

“this is my new number, if you receive this message pls sent mesg or missed call” by பாரதி

டிஸ்கி : இது சிறுகதைனு நினைத்து எழுதியிருக்கேன், நல்லா இல்லைனா திட்டாதிங்க.


14 comments:

  1. உங்களை திட்டக்கூடாதா? அப்போ மனோ அண்ணாக்கிட்ட சொல்லி அறுவா கொண்டார சொல்றேன்.

    ReplyDelete
  2. ஆஹாஇஇ யாருக்கோ எய்ம் பண்ணா நமக்கே ரிபிட்டாகுதே...

    நல்லாயிருக்கு ராஜா..

    ReplyDelete
  3. ooraan figureah madaka ninaicha thaan figure thanakea yellama poidum

    ReplyDelete
  4. நல்லாயில்லைனு சொல்லலாம்; திட்டக் கூடாதாம்!
    எப்படிங்க முடியும்?

    ReplyDelete
  5. நீதி: தன் வினை தன்னைச் சுடும்!
    (நல்லாயிருக்கு)

    ReplyDelete
  6. ஆஆஆஆஆஆ.......
    அடப்பாவிகளா............
    டபுள் மீனிங்குல பேசுறத கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா,டபுள் மீனிங்க் பேர்ன்னு இப்பதான் கேள்விப்பர்றேன்.

    ReplyDelete
  7. கதை ரொம்ப நல்லா இருக்கு...
    இன்னும் நிறைய எழுதுங்க!!

    ReplyDelete
  8. வணக்கம்,
    "அம்புலி 3D" திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் நேற்றுமுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது... இதோ உங்கள் பார்வைக்கு...

    www.youtube.com/watch?v=qC_Mf4cVZY8

    மேலும் விவரங்களுக்கு
    http://ambuli3d.blogspot.com

    நன்றி

    அன்புடன்
    "அம்புலி" படக்குழுவினர்

    ReplyDelete
  9. அப்டியே குமுதத்துக்கு அனுப்பலாம். சான்ஸ் இருக்கு...

    என்னோட வலையில்;
    மலையாளிகளின் airlines
    திருவள்ளுவரின் Tweets

    ReplyDelete
  10. நண்பர்களுக்கு
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    நொடியாய்ப் பிறந்து
    மணித் துளியாய் மறைந்து
    புது ஆண்டாய் மலர்ந்த
    பொழுதே....
    வறண்ட வாழ்வும்
    தளர்ந்த கையும்
    உன் வரவால்
    நிமிர்ந்து எழுதே!
    புது வருடம் பிறந்தால்
    வாழ்வு மாறும்-என
    ஏங்கித் தவிக்கும்
    நெஞ்சம்..
    உன் வரவே
    நெஞ்சின் தஞ்சம்!
    இறந்த காலக்
    கவலை அதனை
    மறந்து வாழ
    பிறந்து வா வா
    என் புதிய வாழ்வே
    விரைந்து வா வா!
    அழுதுவிட்டேன்
    ஆண்டு முழுதும்
    முயன்று பார்த்தேன்
    விழுந்து விட்டேன்
    அழுத நாளும் சேர்த்து
    மகிழ்ந்து வாழ
    எழுந்து நின்று
    இமயம் வெல்ல
    இனிய ஆண்டே
    இன்றே வா வா
    நன்றே வா வா!

    அன்புடன் இனியவன்

    ReplyDelete
  11. எனது தளத்தில்:
    தனுசுக்கு போட்டியாக சிம்பு

    ReplyDelete
  12. நல்ல கதை சார்! Every Action there is a Reaction!
    தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    அன்புடன் அழைக்கிறேன் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...