> என் ராஜபாட்டை : விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

.....

.

Tuesday, December 6, 2011

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.



இன்று Facebook, Twitter, Buzz என அனைத்திலும் அதிகம் கலாய்க்கபடுகின்றவர் நமது இளைய தளபதி விஜய் அவர்கள் தான். ஏன் மற்ற நடிகர்களைவிட இவரை மட்டும் அதிகம் கிண்டல் செய்கின்றனர் என புலனாய்வு செய்ததில் கிடைத்த விஷயங்களின் தொகுப்புதான் இது.(மனசுல பெரிய துப்பறியும் சாம்புனு நினைப்பா? # விக்கி)

  1. பன்ச் டயலாக் (பன்சரான டயலாக்)

பன்ச் டயலாக் என திரையை பார்த்து அடிகடி சொல்வது. இதை முதலில் ஆரம்பித்தவர் கேப்டன் அவர்கள். அதும் காது பன்சர் ஆகும் அளவு கத்தி சொல்வதால் பலர் செவிடாகபோய்விட்டனர்.


  1. அந்தரத்தில் பறப்பது.

அந்தரத்தில் பறப்பது அதுவும் ரயில் மேல, சைடுல, கிழே என ரயிலைவிட வேகமா செல்வது. இப்பலாம் ரயிலை பார்த்தால் தளபதி நினைப்புதான் வருது. அடுத்த படத்துல விமானத்திலருந்து ரயில் மேல குதிக்கபோறாறாம்.

  1. அரசியல் ஆசை(பேராசையா? நிராசையா?)

அரசியல் ஆர்வத்துல நீங்கள் தான் அடுத்த முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் என அடிபொடிகள் சொல்வதையும், அவர் அப்பா சொல்வதையும்  நம்பி ஏமாறுவது.

  1. சுடுவது (கதை, காட்சி, சில சமயம் உடைகள்)

பிறமொழில் வந்த, வென்ற படங்களை உடனே ரீ-மேக்குவது அல்லது அதை சுட்டு படம் எடுப்பது. இப்ப கூட DOCOMO விளம்பரத்தில் வெறு மொழி விளம்பரத்தில் போட்ட அதே சட்டையை பயன்படுத்தியது.

  1. படத்தின் பெயர் ( சம்பத்தம் இல்லாமல் இருப்பது)

சுறா, குருவி, போக்கிரி என கண்டபடி பெயர் வைப்பது. கவிதை நடையில் பல பெயர் இருக்க கிண்டல் செய்வதர்க்கு வசதியாக பெயர் வைப்பதில் இவர் ரொம்ப நல்லவர்.


இதையும் மீறி படம் வந்தாலும் கிழே உள்ள நிலைமைதான்.


டிஸ்கி 1: மீண்டும் சொல்றேன் நான் விஜய்யை வெறுப்பவன் இல்லை.


டிஸ்கி 2: விஜய் பற்றி எது எழுதுனாலும் ஹிட்ஸ் எகிறுது
             அதான்.(ஆகா உண்மைய உளறிடேனா?)


26 comments:

  1. என் இந்த கொலை வெறி பாஸ், கலாய்ப்பு சூப்பர்.

    ReplyDelete
  2. நற....நற.....நற.....நற.....ம்ம்....

    ReplyDelete
  3. ஒரு கிட்ஸ் ச்சே ஹிட்ஸ் பதிவு பார்சல் ஹிஹி!

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா ஹா நேற்றுதான் வேலாயுதம் பார்த்தேன் நொந்து போனேன், நாகார்ஜூனின் தெலுங்கு பட ரீமேக் த்தூ த்தூ....முடியல...

    ReplyDelete
  5. அடுத்த ஹிட் போஸ்ட் ரெடி...

    ReplyDelete
  6. சோறு போட்டு டிக்கெட் இலவசமா?

    பார்ரா இலவச விளம்பரத்தை - ராஜா ஹும் ஹும் செம துப்பறியும் சிந்திப்பு

    ReplyDelete
  7. இப்படியும் கலைக்கலாமா??????
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  8. டிஸ்கி 2: விஜய் பற்றி எது எழுதுனாலும் ஹிட்ஸ் எகிறுது
    அதான்.(ஆகா உண்மைய உளறிடேனா?)////எங்கேய்யா?வெறும் எட்டுப் பேர் தான் இதுவரைக்கும் கமெண்டியிருக்காங்க,ஹிட்ஸ் எகிறுதாமில்ல?

    ReplyDelete
  9. விஜய் குண்டர் படை அமைச்சா முதல் அடி உங்களுக்குத்தான் மாப்பூ....

    ReplyDelete
  10. பாவம் சார்..பொழச்சு போட்டும் விட்ருங்க...
    இன்று என் வலைப்பூவில்...

    புரிதலும் புரிதல் நிமித்தமும்

    ReplyDelete
  11. விஜய் பாவம்ங்கண்ணா

    ReplyDelete
  12. ஹிட்ஸ் எகிற வாழ்த்துகள்!(டாக்குட்டர் தயவில்)

    ReplyDelete
  13. இனி உங்கள் பதிவிற்க்கு வரும் சில ஹிட்ஸ் குறையும்..... மைனஸ் vote

    ReplyDelete
  14. பாவம் சார்... அவரை விட்டு விடுங்களேன்.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    ReplyDelete
  15. பேசாம விஜய்-அஜீத் பற்றிய பதிவுகளுக்கென்றே தனி ப்ளாக் ஆரம்பிக்கலாமே!

    ReplyDelete
  16. அட.என்னுடைய சில கருத்துக்களும் ஒத்துப்போகின்றன,ஹிட்டு மேட்டர் உண்மைதான்.
    http://gokulmanathil.blogspot.com/2011/11/blog-post_09.html
    நேரமிருந்தா இந்த பதிவை பாருங்க.

    ReplyDelete
  17. விஜய் கொடுக்கும் ஹிட்ஸ்!!!

    ReplyDelete
  18. எவ்வளவு நாளைக்கு தான் அந்த புள்ளபூச்சியை அடிப்பீங்க...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...