கடந்த இரண்டு வாரமாக விடுமுறையாக இருப்பதால் நூலகம் (நான் நல்லபிள்ளை ) அல்லது டிவி அல்லது சரண் என பொழுது போகின்றது . இந்த நேரத்தில் வீட்டில் சில சீரியல் பார்த்தார்கள். வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டி இருந்தது. அப்படி பார்த்ததன் விளைவுதான் இந்த பதிவு .இந்த சீரியல்கள் பார்க்கும் போது தோன்றிய சந்தேகங்கள் , ஆத்திரங்கள் , கோவங்கள் ,வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
- நல்ல நண்பனாக பழகி விட்டு அவனை அவன் மனைவியிடன் இருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒரு பெண் . நாளை எந்த பெண்ணாவது தனது கணவனின் தோழியை பார்த்ததால் சந்தேகம் வராதா ?
- பெற்ற மகனை கெடுக்க அனைத்து வழியிலும் முயலும் தம்பி மற்றும் அம்மா . ( ஒருவேளை இயக்குனர் அம்மா அப்படியோ அல்லது அவர் அண்ணனை இப்படிதான் கெடுக்க நினைகின்ராரோ ?)
- கொழுந்தியாலை கொலை செய்யும் வில்லன் (யாருக்காது கொழுந்தியாலை கொல்ல மனம் வருமா ஹீ .. ஹீ )
- தன மகனும் மருமகளும் “ சேரக்கூடாது “ என மருமகள் இருக்கும் அறையை இரவில் பூட்டி வைக்கும் தாய் ( அப்ப பகலுல சேர்ந்துட்டா ?)
- கணவனை சந்தேகப்படும் மனைவி , மனைவியை சந்தேகப்படும் கணவன் .
- நிறைய தொடர்களில் கதாநாயகிக்கு இரண்டு கணவன் அல்லது ஏற்கனவே திர்மனமானவரின் மனைவியாக கதாநாயகி .
- ஏன் எல்லா சிரியாலும் பெண்களை மையமாக வைத்து வருகின்றது ?( நாதஸ்வரம் விதிவிலக்கு )
- ஏன் ஆண்கள் பெயரில் சிரியல் எடுத்தா ஓடாதா ?
- சினிமாவில் மட்டும் பார்த்த கற்பழிப்பு காட்சிகள் சீரியலிலும் ( செல்லமே மற்றும் நாதஸ்வரத்தில் )
- பச்ச குழந்தையை பெரிய மனுஷி போல பேச வைப்பது
சினிமாவுக்கு இருப்பது போல தொலைக்காட்சிக்கும் சென்சார் வேண்டும் ( ஹ்ம்ம் .. சினிமா சென்சார் மட்டும் பெருசா என்னத்த கிழிசாங்க ..). வீட்டில் உள்ள வர்களை கொஞ்ச கொஞ்ச மாக மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது இது . தயவு செய்து சிரியல் பார்ப்பதை குறையுங்கள்.
மாற்று வழிகள் :
- காமெடி நிகழ்ச்சிகள் பாருங்கள் ( ஜெயா நியுஸ் , கலைகர் நியுஸ் போல )
- கார்டுன் நெட்வொர்க் பாருங்கள்
- ஆன்மிக சேன்னல் பாருங்கள் ( நித்தியானதா வகை அல்ல )
- ஆங்கில காமெடி சேன்னல் பாருங்கள் ( பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பு பாருங்கள் )
- எதுமே இல்லையா “ ஏன் ராஜபாட்டை “ பிளாக் படியுங்கள் .
இதையும் படிக்கலாமே :
ஒரு வீடு இரு திருடர்கள்
யார் தெய்வம் ?
கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்
Tweet |
நீங்களுமா???!!!! ஹி...ஹி... Same pinch.. :)
ReplyDeleteமாற்று வழிகள் நல்ல ஆலோசனை...
ReplyDeleteஆனா, அந்த 5 வது -க்குப் பதிலா சீரியலே பாத்துடலாம் :)) :))
என்னையும் இந்த சீரியல்கள் கடுப்பேத்துகின்றன பாஸ்
ReplyDelete1. காமெடி நிகழ்ச்சிகள் பாருங்கள் ( ஜெயா நியுஸ் , கலைகர் நியுஸ் போல )
ReplyDelete>>
ஐயோ அது மெண்டல் ஆஸ்பிட்டலுக்கு போக வைக்குற அளவுக்கு காமெடியாச்சே
# எதுமே இல்லையா “ ஏன் ராஜபாட்டை “ பிளாக் படியுங்கள் .
ReplyDelete>>
இந்த இம்சைக்கு நான் சீரியலே பார்த்துக்குறேன்
மாற்று வழிகள் சூப்பர்
ReplyDeleteநல்ல யோசனை சொன்னீர்கள் -
ReplyDeleteso sad...:)
ReplyDeleteநாடகம் பார்த்து
ReplyDeleteகுழம்பி போய் இருப்பவர்களுக்கு நல்ல யோசனை நண்பா
உங்க ஆலோசனைகள் எல்லாம் சரி தான் நண்பா..
ReplyDeleteஆனால், "ஏன் ராஜபாட்டை“ பிளாக் படியுங்கள் படியுங்க.. என்று சொல்றீங்க...
பார்த்து!!
இதையெல்லாம் வீட்டுல சொன்னா செமையா விழுது....
ReplyDeleteநல்லவேளையா... நான் சீரியல்கள் எதுவும் பாக்கற வழக்கம் இல்லைங்கறதால தப்பிச்சேன்! ஐயோ பாவம் நீங்க... வேற எந்த வேலையும் இல்லாட்டாதான் ராஜபாட்டை பக்கம் மக்கள் வருவாங்கன்ற உண்மைய இப்படி ஓப்பனா ஒத்துக்கிட்டீங்களே...! Hi... Hi...
ReplyDeleteவணக்கம் ராஜா சார்..
ReplyDeleteநல்லா இருக்கீங்களா?
நீங்களும் சீரியஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்
சீரியல் மோகம் இலகுவில் பற்றிக் கொண்டால் நம்மை விட்டு விலகி விடாது.
விடுமுறை முடியவும் பின் தொடர்ந்திடும், ஜாக்கிரதை சார்..
இறுதியாக செம காமெடி கமெண்ட் போட்டிருக்கிறீங்க.
கண்டிப்பா ராஜபாட்டை படிச்சிடுவோமில்லே!!
இதை சொல்லி உங்க வீட்ல என்ன கமெண்ட் கிடைச்சது தல...ஹா ஹா ..சூப்பர் சார்
ReplyDelete