இன்று தமிழகத்தின் மிக பெரிய பிரச்னை (யாருப்ப அது கருணாநிதி , ஜெயலலிதானு சொல்றது பிசுபுடுவேன் .. பிச்சு ) மின்சாரம் தான் . மின்சாரம் கண்டுபிடிக்க பல வழிகளில் முயற்சிகள் நடக்கின்றன . ஆனால் சத்தமில்லாமல் ஒரு தமிழர் காற்றில் இருந்து மின்சாரம் தயாரித்துள்ளார் .
பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்து£ரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.
நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனையை உலகுக்கு எடுத்துரைப்போம் "SHARE "செய்து !!!
நன்றி : Facebook இல் பகிந்த நண்பனுக்கு
இதையும் படிக்கலாமே :
வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல ஸஎய்தி தான்.....
ReplyDeleteபீட்டர்ஜானுக்கு வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteவாழ்த்துக்கள் அந்த அன்பருக்கு !
ReplyDeleteநல்ல விசயத்தைதான் நம்மாளுங்க அங்கீகரிக்க மாட்டாங்களே!
ReplyDeleteநல்ல முயற்சிதான்.
ReplyDeleteநல்லதொரு கண்டு பிடிப்பு. பீட்டர் ஜானுக்கு பாராட்டுக்கள்.பின் தங்கிய மாவட்டத்தில் இருந்து வந்த பீட்டர் ஜானின் சாதனை மகிழ்ச்சிக்குறியது.
ReplyDeleteஜானுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு
ReplyDeleteமாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு
மிகவும் அருமை. பிட் நோட்டீஸ் அடித்து கொடுக்கலாம்