அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.
ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.
முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.
ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.
அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.
அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.
ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.
பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது என் தவறல்ல.
இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி :
இதையும் படிக்கலாமே :
யார் தெய்வம் ?
விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2
கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்
Tweet |
ஒ... இது தான் திருடர்கள் கதையா!
ReplyDeleteசொல்றதெல்லாம் சொல்லிட்டு அதென்ன கடைசியில் ஒரு விளக்கம். இதை திருடர்கள் என்ற ரீதியிலேயே புரிந்து கொள்கிறேன் ஹி ஹி
ReplyDeleteநானும் திருடர்கள்ன்னு மட்டும்தான் புரிஞ்சுக்கிட்டேன்.
ReplyDeleteஓ பூட்டானா...என்னாது வீட்டுக்காரன் செத்துப்பூட்டானா...சர்தான்!
ReplyDeleteநம் வீட்டில் திருடுவதற்கு நாம் ஓட்டு போட வேண்டும்.......ஜனநாயகம் வாழ்க!
ReplyDeleteஆஹா கொய்யால ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்காரனை கொன்னதை நினைச்சா கண்ணுல தண்ணியா கொட்டுது, ஒருவேளை அவன் வடிவேல் சொந்தக்காரனா இருப்பானோ...?
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteசொல்லறத ஆணித்தரமா சொல்லிட்டி
குறிப்பு எழுறது ....(:
கலக்கல் பதிவு தொடரட்டும் தோழரே
ஹி ஹி ஹி பாஸ் உங்க வீடு கதவை யாராவது தட்டாம பார்த்துக்கோங்க, பெட்டர் கொஞ்சநாளைக்கு நீங்க தலைமறைவா இருக்குறது ...!
ReplyDelete:))))))))))))))
ReplyDeleteநல்ல வேல நாட்டாம பண்ண நீங்க போகல்ல.........:)
ReplyDeletenalaa vacheengayya!
ReplyDeleteaapppu!
நல்ல கதை...
ReplyDeletesuper
ReplyDelete