மீண்டும் ஈழ நாடகம் :
தான் ஆட்சியில் இருக்கும் போது வராத , அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்ல படும் போது வராத , தலைவர் பிரபாகரன் கொடூரமான முறையில் கொல்லபட்ட செய்தி கிடைக்கும் போதெல்லாம் வராத ஈழ பாசம் , கருணாநிதிக்கு இப்போது வந்துள்ளது. தனி ஈழம் வாங்க என் உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் தருவேன் என காமெடி செய்கின்றார் .
இலங்கை போரை நிறுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவேன் என சொல்ல தைரியம் இல்லாமல் பதவிக்காக பத்து நிமிடம் உன்னாவிருத நாடகம் நடத்தி போரை நிறுத்திவிட்டேன் என சுய தம்பட்டம் அடித்து விட்டு தமிழர் படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்ட பாவம் உங்களை சும்மா விடாது .
அமைச்சர்கள் வேலை இதுதானா ?
புதுகோட்டை சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் பணிக்காக 32 அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். (இவரையும் சேர்த்த தமிழக அமைசர்கள் எண்ணிக்கை 33) மக்களுக்கு பணிபுரிய இதுபோல ஏதாவது குழு அமைத்தால் நல்லது , அதைவிடுத்து தேர்தல் பணிக்கு அமைப்பது என்ன நியாயம் ? . எப்படி இருந்தாலும் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் வீனா செலவு செய்றதுக்கு பதில் ஆளும்கட்சிதான் வெற்றி என அறிவித்து விடலாம் .
பிடித்த நக்கல் கவிதை
ஒரு மழைகால வேளை
ரயில் பெட்டிக்குள் ஜன்னலோரம் நான் ...
வெளியே நீ ..
நம் இருவர் கண்களும்
ஒன்றாக சந்தித்த அந்த வேளையில் தான்
நீ அந்த வார்த்தையை சொன்னாய்
அது .. அது ...
--
--
:”ஐயா .. சாமி .. தர்மம் பண்ணுங்க ..”
பிடித்த ஹைகூ
குழந்தையை
காப்பகத்தில்
விட்டனர் பெற்றோர்கள் ..
பெற்றோர்களை
முதியார் இல்லத்தில்
சேர்த்தான் மகன .
தெரியுமா ?
Register Number என்பதை சுருக்கமாக Reg. No . என்கின்றோம் , Register என்பதன் சுருக்கம் Reg, Number என்பதின் சுருக்கம் No. Number என்ற வார்த்தையில் “O” கிடையாதே அப்புறம் ஏன் “O “வருகின்றது ?
Number என்ற ஆங்கில வார்த்தை Numerio என்ற லத்தின் சொல்லில் இருந்தது வந்தது அதனால் தான் அந்த வார்த்தையின் முதல் மற்றும் கடைசி எழுத்தை சேர்த்து No என எழுதுகின்றோம் .
ரசித்த படம் :
அதிர்ச்சி :
கடந்த மூன்று நாட்களாக எண்கள் ஊரில் மின்தடை இல்லை
வாழ்த்துகள் :
உழைப்பாளர்தின வாழ்த்துகள்
அல்டிமேட் ஸ்டார் அஜித்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
இதையும் படிக்கலாமே :
அஜித் : தல போல வருமா ?
உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்
உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?
Tweet |
நீங்க கலக்குங்க தலை........!!!!!
ReplyDeleteada....
ReplyDeleteகேள்வி? சந்தேகம், எல்லாம் சரியாகத்தான் இருக்கு ம் ம்
ReplyDeleteஅப்போ கலீங்கர்ன்னா கேனையா?
ReplyDeleteஉங்களுக்கெல்லாம், அ.தி.மு.க. ரத்தம் பாய்ஞ்சு இருக்கு...
இருங்கைய்யா...
[co="orange"]அடுத்த முறை முதல்வராகி,[/co] உங்க மேல கேசப் போடச் சொல்றேன்....
கலைஞர் பற்றிய பதிவும் ஜே பற்றிய பதிவும் அருமை. கதம்பம் மணக்கிறது மே தின வாழ்த்துக்கள்
ReplyDeleteகதம்பம் அருமை!
ReplyDeletekathampam!
ReplyDeletenalla irukku!
////////////////////////ஒரு மழைகால வேளை
ReplyDeleteரயில் பெட்டிக்குள் ஜன்னலோரம் நான் ...
வெளியே நீ ..
நம் இருவர் கண்களும்
ஒன்றாக சந்தித்த அந்த வேளையில் தான்
நீ அந்த வார்த்தையை சொன்னாய்
அது .. அது ...
:”ஐயா .. சாமி .. தர்மம் பண்ணுங்க .///////////////////////////////
தல.., உங்களுக்கு குசும்பு கொஞ்சமில்லை ...!
அருமையான பதிவு
ReplyDeleteமே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
//பதவிக்காக பத்து நிமிடம் உன்னாவிருத நாடகம் நடத்தி//
ReplyDeleteஇதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...
அவர் வெறும் பத்து நிமிடம் தான் உண்ணாவிரதம் இருந்தாரா? அகில உலகம் முழுதும் கலைஞர் தொலைக்காட்சி பார்த்தவர்களுக்குத் தெரியும்.. அவரைப் பற்றி!!
தெரியாமல் பேசாதீர்கள்!!
காலை டிபன் முடித்து மதியம் லன்ச் சாப்பிடும் முன் வரை மொத்தமாக 210 நிமிடங்கள்.. அதாவது சுமார் 3 1/2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த தமிழ் பற்றாளர் அவர்!!
அப்புறம், கடந்த சில நாட்களாக காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் அதிகரித்துள்ளது (எதிர்பார்ப்பை விட அதிகமாம்). எனவே, தான் மின்தடை இல்லை. எப்போதும் காற்று அடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்..
ஹைக்கூ ரொம்ப அருமை.
அதே போல, Number பற்றிய செய்தியும் அருமை!
கதம்பம் அருமை .
ReplyDeleteஎங்கள் ஊரிலும் மின் அதிர்ச்சி தான் எப்ப புள்ள கட் பண்ண போறாங்களோ கதம்பம் அருமை .
ReplyDeleteசரசரன்னு பின்னி போட்ருக்கீங்க... சூப்பர் சார்...:)
ReplyDeleteமே நாள் வாழ்த்துக்கள்.. கதம்பம் நல்லாருக்கு..
ReplyDelete