> என் ராஜபாட்டை : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1

.....

.

Tuesday, May 8, 2012

அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1
சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் பாராட்டை பெற்று இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முதல் 3D படம் அம்புலி. அந்த திரைபடத்தின் வெற்றி இயக்குனர் , வருங்கால திரையுலகின் நம்பிக்கை நடசதிரம் ஹரிஷ் நாராயண் அவர்கள் நமது வலைதளத்திற்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இவர் ஒரு பதிவர் என்பது கூடுதல் சிறப்பு .

அம்புலி 3 D   படத்தின் இயக்குனர் ஹரிஷ் நாராயண் அவர்களின் சிறப்பு பேட்டி :

வலைபதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேட்டி தந்த அவர்களின் நல்ல மனதை தமிழ் பதிவர்கள் சார்பாக பாராட்டி வணங்குகின்றேன் .


1 . உங்களை பற்றி ஒரு சிறு அறிமுகம் ?

நான் ஹரீஷ் நாராயண், சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரில் அப்பா, அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன்... என் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை... உடன்பிறந்தாரில்லை... ஆனால் உடன்பிறவா சகோதர சகோதரிகள் பலருண்டு... படிப்பு : M.Sc.I.T. 2008 வரை I.T. துறையில் வேலை செய்து வந்தேன். குறும்படம்,  தொலைக்காட்சிக்காக ரியாலிட்டி ஷோ, ஃபிக்ஷன் கதைகள் என்று எடுத்துக் கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் எனது ஆதர்ச இயக்குனர் 'மர்மதேசம்' புகழ் திரு.நாகா அவர்கள் வார்தைக்கு கட்டுப்பட்டு வேலைத்துறந்து சினிமாத் துறவியானேன்.

2. சினிமா துறையில் நீங்கள் நுழைய காரணமானவர் யார் ?
எனது குருவும் நலன்விரும்பியும் நண்பருமான இயக்குனர் திரு. கிருஷ்ண சேகர் (என்னுடன் சேர்ந்து 'ஓர் இரவு' படத்தை இயக்கியவர்) என்பவரின் வழிநடத்துதலில் சினிமாத்துறை எனக்கு சாத்தியப்பட்டது. அவரது சினிமா நண்பர்களையும் நுணுக்கங்களையும் எனக்கு சொல்லித் தந்து தக்க சமயத்தில் தக்க மனிதர்களின் அறிமுகங்களையும் எனக்களித்து என்னை சினிமாத்துறைக்குள் நுழைய செய்தவர் இவர்தான். எனது முதல் குறும்படமான 'ராமன் எஃபெக்ட்' எடுக்க கையும், ஊக்கமும், ஆலோசனைகளையும், இடமும் அளித்தவர். 

3 . காதல் கதை , கிராம கதை என அனைவரும் பயணிக்கும் திசையில் செல்லாமல் வித்தியாசமான கதையுடன் படமெடுக்கும் துணிச்சல் எப்படி வந்தது ?
நானும் அதையே எடுத்து என் கதை எனது தனித்தன்மையின்றி போய்விடுமோ என்ற பயம்தான் வித்தியாசமான களம் கொண்ட கதைகளை எடுக்க துணிச்சலைக் கொடுத்தது.


4. திரை துறையில் உங்களால் மறக்கமுடியாத நபர் யார் ?
என் முயற்சிகளிலெல்லாம் கூட இருந்து, அம்புலியில் ஹுரோவாக (அமுதனாக) நடித்து இன்று அமரர் ஆகிவிட்ட எனது ஆருயிர் நண்பர் 'அஜய்'-ஐ என்னால் நிச்சயம் மறக்க முடியாது. அவருடன் சேர்ந்து பயணப்பட வேண்டிய இந்த கலைப்பாதையில் அவரில்லாத பயணம் வருத்தமே... இருப்பினும் நானும் என் குழுவினரும் என்றுமே அவரை மனதளவில் சுமப்போம்... சுகமான நினைவுகளுடன்... RIP அஜய்...

5. இந்த படத்தின் கதையை முதலில் சொன்ன போது தயாரிப்பாளர்களின் ரீ- ஆக்ஷன் எப்படி இருந்தது ?
கேட்பவருக்கு பிடிக்கு விதத்தில் நேர்த்தியாக கதை சொல்லும் வித்தையை...  என்னிடம் பலமுறை மாட்டிக்கொண்டு கதை கேட்டு முழித்த நண்பர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, ரியாக்ஷன் நான் எதிர்ப்பார்த்ததுபோல்தான் இருந்தது. ஆனால், நான் சிறுவயது முதல் சினிமாத்துறை பற்றி கேள்விப்பட்டதுபோல், 'கதை சூப்பர்... பிடி அட்வான்ஸ் செக்-ஐ' என்று எடுத்துக் கொடுத்துவிடவில்லை... ஆர அமர யோசித்து... சில நாட்களுக்கு பிறகே அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அவருக்கு கதையும் என் குழுவின் தொழில் பக்தியும் நிச்சயம் பிடித்துப்போயிருந்தது தெரிந்தது... எனவே, படம் ஆரம்பிக்கும் முன்னமே குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைத்தார், தனது முக்கிய நண்பர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார், இந்த அவகாசத்தில்... நானும் எனது நண்பர் ஹரியும் அவரை மேலும் நன்றாக புரிந்துக் கொண்டோம்... அவர் மீதிருந்த மரியாதை மேலும் கூடியது.
6. ஏன்டா இந்த திரை துறைக்கு வந்தோம் என என்றாவது எண்ணியதுண்டா ?  
      
                                         சரவணன் – ரோட்டரி கிளப் பள்ளி
'ஏன்தான் இந்த துறைக்கு இவ்வளவு லேட்டாக வந்தோமோ..' என்று எண்ணியதுண்டு...


7. இந்த படத்திற்கு உங்களுக்கு கிடைத்த பெரிய பாராட்டாக எதை நினைக்கின்றிர்கள் ?
-          ஜெயபிரகாஷ் - ரோட்டரி கிளப் பள்ளி
 சென்னை பெரம்பூரை சேர்ந்த 'ஆர்த்தி' என்ற 10 வயது சிறுமி 'அம்புலி' படத்தை பார்த்துவிட்டு மிகவும் பிடித்துப் போய்...  'அம்புலி ஆர்த்தி' என்று தனது பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்ததாக அக்குழந்தையின் அப்பா எப்படியோ என் நம்பரை தேடிப்பிடித்து எனக்கு ஃபோன் செய்து திட்டினார். அதுவே எனக்கு கிடைத்த பெரியா பாராட்டாக நினைக்கிறேன்.
8. ஒரு பழைய படத்தை ரீ- மேக் பண்ணலாம் என்றால் எந்த படத்தை பன்னுவிர்கள் ?
- சுப்பையா – அன்னம் புக் ஸ்டோர் , மேலையூர்
திரு.எம்.ஜி.ஆர். நடித்த 'விக்கிரமாதித்தன்' என்ற கற்பனை கலந்த வரலாற்றுப் புனைவுப் படம் ... இப்படத்தை இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் உச்சகட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன்... ரீமேக் செய்ய எனக்கு ரொம்ப ஆசை... அருமையான ஸ்க்ரீன்ப்ளேவுடன் கூடிய வித்தியாசமான கதைக்களன் கொண்ட படம் அது.
டிஸ்கி : விரைவில்  அடுத்த பாகம்


இதையும் படிக்கலாமே :

9 comments:

 1. நானும் வந்துட்டேம்லேய்......

  ReplyDelete
 2. இன்ட்லி ஒர்க் ஆகலை என்னான்னு பாருங்க..?

  ReplyDelete
 3. ரைட்டு கிளப்புங்க ..!

  ReplyDelete
 4. அப்படியே உங்களுக்கு பிடித்த விஜய் கிட்டயும் பேட்டி எடுங்களேன்...

  ReplyDelete
 5. ஏற்கனவே படித்த பேட்டி மாதிரி இருக்கிறதே?

  ReplyDelete
 6. என் நம்பரை தேடிப்பிடித்து எனக்கு ஃபோன் செய்து திட்டினார். அதுவே எனக்கு கிடைத்த பெரியா பாராட்டாக நினைக்கிறேன்.
  >>>
  திட்டுறதையே பாராட்டாக எடுத்துக்கிட்டாரா? அப்போ எதிர்காலத்துல நல்ல வருவார். பேட்டி அருமை சகோ. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. ராஜா!உங்கள் பின்னூட்டம் கண்டு இந்த பதிவைக் கண்டேன்.

  3D என்கிறீர்கள்.தியேட்டரில் கூகுள் தருகிறார்களா? 3D யை தொலைக்காட்சிப் பெட்டியில் காண வேண்டுமென்றாலும் தொலைகாட்சியும் 3D யாக இருக்கவேண்டும்.புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்துள்ள போதும் போதிய படங்கள் இல்லாத காரணத்தால் பழைய தொழில்நுட்பமே சந்தையில்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. பெரிய ஆளாகிவிட்டீர்....!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...