> என் ராஜபாட்டை : காங்கிரசை இன்று ஆதரித்து பேசும் வடிவேலு ஈழத்தமிழருக்காக அன்று பேசியது நீலிக்கண்ணீரா? நடிகர் மன்சூர் அலிகான்

.....

.

Saturday, April 9, 2011

காங்கிரசை இன்று ஆதரித்து பேசும் வடிவேலு ஈழத்தமிழருக்காக அன்று பேசியது நீலிக்கண்ணீரா? நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை, ஏப்.- 6 - ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசை இன்று ஆதரித்துப்பேசும் வடிவேலு, அன்று ஈழத்தமிழர்களுக்காக பேசியது நீலிக்கண்ணீரா என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார். நடிகர் மன்சூர்அலிகான் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் வடிவேலு அரசியல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசி வருகிறார். விஜயகாந்தின் குரல் எப்போதும் மெதுவாகத் தான் இருக்கும். அவர் மாதம் முழுவதும் வெளியில் அலைந்து மைக்கை பிடித்து பேசுவதால் அது போதையில் பேசுவது போல்தான் தெரியும். என்னுடைய குரலும் அப்படித்தான் இருக்கும். வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரால் ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்க்காமல் கோர்ட்டு வரை சென்று இப்போது அதனை வைத்து நடிகர் வடிவேல் அரசியல் மூலம் பழி வாங்குகிறார்.

வடிவேலுவிடம் 2 வருடத்திற்கு முன்பு இதுபற்றி பேசி இருக்கிறேன். நடிகர்கள் ஒரு தெருவில் வாழ்பவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு பலியாகி விடக் கூடாது. தேர்தல் இன்னும் 4 நாட்களில் முடிந்து விடும். அதன் பின்னர் நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலை வரும். அண்ணன் விஜயகாந்த் குடியரசு தலைவரால் சிறந்த குடிமகன் விருது வாங்கி உள்ளார். 32 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். என்னை போன்ற பலரையும் அறிமுகம் செய்தவர். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலம் பொற்காலம். கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டு கொண்டு வந்தவர்.
ஒரு கலைஞனை சக கலைஞனான வடிவேலு கீழ்தரமாக விமர்சித்து பேசுவது வேதனையானது. அரசியலில் நடிகர்களை பயன்படுத்தி விட்டு துடைத்து போட்ட கல் போன்று தூக்கி எரிந்து விடுவார்கள்.

நடிகர் வடிவேலு காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக வடிவேலு ராமேசுவரத்தில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சி nullர்வமாக பேசினார். ஆனால் இப்போது நான் போட்டியிடும் ஆலந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க உதவிய காங்கிரசை ஆதரித்து பேசுகிறார். அப்படியானால் ஈழத் தமிழர்களுக்காக வடிவேலு அன்று வடித்தது nullநீலிக் கண்ணீரா? நடிகர் விஜயகாந்தை 20 வருடங்களாக எனக்கு தெரியும். 18 படங்களில் அவருடன் நடித்து உள்ளேன். அவர் மது அருந்துவது இல்லை.
இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

Thanks :Dhinaboomi

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...