> என் ராஜபாட்டை : வடிவேலுவின் ஆபாச பேச்சு பொதுமக்கள் முகம் சுளிப்பு: கல்வீச்சு

.....

.

Friday, April 8, 2011

வடிவேலுவின் ஆபாச பேச்சு பொதுமக்கள் முகம் சுளிப்பு: கல்வீச்சு

நடிகர் வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரத்தில் அவரது ஆபாச பேச்சைக் கேட்டு பொதுமக்கள் முகம் சுளிப்பதோடு ஆத்திரமடைந்து கல்வீச்சும் நடத்திவருகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதுவரை தி.மு.க. என்ற கட்சியோ, அ.தி.மு.க. என்ற கட்சியோ இருப்பதாக கூட தெரியாத நடிகர் வடிவேலு, திடீரென விஜயகாந்த்துடன் இருந்த முன்விரோதத்தில் அவரை வசைபாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க.வில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் வடிவேலு, மேடைப்பேச்சு நாகரீகம் என்றால் என்னவென்றுகூட தெரியாமல் அநாகரீகமாக பேசிவருகிறார். நான்கு சுவற்றுக்குள் பேசவேண்டிய விஷயங்களை மக்கள் முன்னிலையில் பேசி ஆத்திரமடைய செய்வதோடு, அவமானப்பட்டும் திரும்புகிறார். கடந்த சில நாட்களாக மதுரையில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக கூறி, தி.மு.க.வைப் பற்றியோ, வேட்பாளர்கள் பற்றியோ எதுவுமே பேசாமல், விஜயகாந்த்தை வசைபாடுவதையே முழுமூச்சாக செய்துவருகிறார்.
 
மதுரையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் இவரது பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வடிவேலை பார்ப்போம் என்று வரும் பெண்கள், இவர் பேச ஆரம்பித்ததும் முகத்தை சுளித்தபடி கலைந்து செல்ல துவங்கிவிடுகின்றனர். இதில் உச்சகட்டமாக மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் வடிவேலுவின் ஆபாச பேச்சைக் கேட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து கல்வீசி தாக்கினர். இதனால் தொடர்ந்து பேசமுடியாமல் வடிவேலு திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.
 
வடிவேலுவின் கொமெடி என்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரசித்த நிலை மாறி, தற்போதைய அவரின் அரசியல் பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களிடமும் வெறுப்பையும், எதிர்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலி அவரது பிரச்சாரத்தின்போது மக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும்போதே தெரியவருகிறது.
 
Thanks : Kingtamil.com

8 comments:

 1. வடிவேலுவின் சினிமா கேரியர் அனேகமாக காலி..

  ReplyDelete
 2. venkatesh, maduraiApril 8, 2011 at 1:09 PM

  தமாசு தமாசு .. பரவலாக வடிவேலுவின் பேச்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் என்று தானே கேள்விப்பட்டோம் :)

  ReplyDelete
 3. நான் துவக்கத்துலே சொன்னேன்.பதிவுல சொல்றதையெல்லாம் வடிவேலு காதுல போடறுத்துக்கு ஆள் இருந்தா அவருக்கு ஏன் இந்த நிலமை.

  http://parvaiyil.blogspot.com/2011/03/blog-post_24.html

  ReplyDelete
 4. athu pothu makkal enru eppadi solriinga ? avarkal DMDK allatu AIADMK aatkalaaka irukkalaam

  ReplyDelete
 5. என்ன நடக்குதுன்னே புரியலீங்க.... எலக்சன் முடியட்டும்.....!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...