> என் ராஜபாட்டை : கற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான்-சிங்கமுத்து

.....

.

Sunday, April 10, 2011

கற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான்-சிங்கமுத்து

மதுரை : தமிழகப் பெண்களின் கற்பு குறித்துப் பேசி பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டத்தால் தத்தளித்த நடிகை குஷ்புவை, காப்பாற்றி அவரை மீட்டது ஜெயலலிதாதான். ஆனால் அவர் நன்றி மறந்து பேசி வருகிறார் என்று நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார்.


மதுரை மாவட்டம் திருமங்கலம், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார் சிங்கமுத்து. அப்போது அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை குறித்து விளக்கிப் பேசினார். திமுக அரசின் குறைகளையும் விளக்கிப் பேசினார்.

பின்னர் வடிவேலு, குஷ்புகுறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

வடிவேலுவை குளிக்க வைத்து, முதன் முதலில் வேட்டி கட்டி நடிக்க வைத்ததே விஜயகாந்த் தான். நாங்கள் தான் அவரை உருவாக்கினோம். அதை மறந்து விட்டு, விஜயகாந்தை அவன், இவன் என்று பேசுகிறார்.

இந்த குஷ்பு. இவருக்கு ஜெயலலிதா குறித்து பேச என்ன தகுதி உள்ளது. முன்பு தமிழக பெண்களின் கற்பு குறித்துப் பேசி பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள், பாமக மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.

விளக்குமாறு உள்ளிட்டவற்றைக் கொண்டு குஷ்பு படத்தை அடித்து நொறுக்கிப் போராட்டம் நடத்தினர். கொடும்பாவிகளைக் கொளுத்தினர். இதனால் வெளியில் வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் குஷ்பு. ஆனால் அப்போது அவரைக் காப்பாற்றியவர் ஜெயலலிதாதான். சரி, நம்ம தமிழ்நாட்டை நம்பி வந்து விட்டார். தமிழ்நாட்டின் மருமகளாகப் போய் விட்டார் என்று கருதி அவரைக் காப்பாற்றி பிரச்சினையை அமைதிப்படுத்தினார். ஆனால் இன்று நன்றி மறந்து பேசி வருகிறார் இந்த செந்தமிழ்ச்செல்வி குஷ்பு.

மக்கள் இதையெல்லாம் சிந்தித்து்ப பார்க்க வேண்டும். பாமகவும் சரி, விடுதலைச் சிறுத்தைகளும் சரி குஷ்புவுக்கு எதிராக அவர்களை விட யாருமே மோசமாக போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் இன்று அவர்களுக்கு குஷ்புவின் ஆதரவு தேவைப்படுகிறது.

திமுககாரர்கள் அன்று இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தார் பூசி அழித்தனர். ஆனால் இன்று இந்தி பேசும் குஷ்புவின் ஆதரவில், அவரது தயவில் அண்டியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையுமே ஜெயலலிதா செய்வார், நிறைவேற்றுவார்.

தமிழக மக்களை பாடாய்ப்படுத்தி வரும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் ஆகியவற்றை சிந்தித்துப் பாருங்கள். இதை ஒழிக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் சிங்கமுத்து.

2 comments:

 1. வாழ்த்துக்களும் நன்றிகளும்

  ReplyDelete
 2. "உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

  இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

  இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

  மேலும் படிக்க...
  ஒரு தரம்... ரெண்டு தரம்...!
  http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...