> என் ராஜபாட்டை : அறியாமையால் பேசும் நடிகர் வடிவேலு அரசியல் வியாபாரம் செய்யும் கார்த்திக் : செந்தில்

.....

.

Saturday, April 9, 2011

அறியாமையால் பேசும் நடிகர் வடிவேலு அரசியல் வியாபாரம் செய்யும் கார்த்திக் : செந்தில்

தாங்க முடியாத அனல் வெயிலில் தீவிர பிரசாரம்...பசியுடன் முதுகு வலிக்கு இடையே நடிகர் செந்தில் அளித்த "விசேஷ' பேட்டி: தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, நத்தம் பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். நெல்லையை தொடர்ந்து விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சென்னை பகுதிகளில் பிரசாரம் செய்கிறேன். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நடுத் தெருவில்தான் நிற்க வேண்டும். மக்களிடமிருந்து மிச்ச சொத்தையும் பிடுங்கி விட்டு அனைவரையும் பக்கத்து மாநிலத்திற்கு விரட்டி விடுவர். இந்த தேர்தலுடன் கொள்ளை கூட்டணி விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று கருணாநிதி கூறி வருகிறார். இவர் என்ன குமரனா. வயதான இவரும் பென்ஷனை வாங்கி வீட்டில் உட்கார வேண்டியதுதானே. கருணாநிதி வீட்டில் உட்கார்ந்தால்தான் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டிற்கு செல்வதாக ஸ்டாலின் கூறி வருகிறார். கொடநாடு தமிழகத்தில்தான் உள்ளது. வெளிநாட்டில் ஒன்றும் இல்லை. தேவையில்லாத விஷயங்களை பேசி அவர் மக்களை குழப்பி வருகிறார்.
விஜயகாந்த் ஹீரோ அல்ல, வில்லன் என்று ஸ்டாலின் கூறுகிறார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என திமுகவினர் அனைவரும் வில்லன்கள்தான்.

கருணாநிதி தனது வாரிசுகளுக்காக கோடி, கோடியாக கொள்ளையடித்து வருகிறார். ஆனால் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு, மக்கள்தான் வாரிசுகள். அவர்களுக்காகத்தான் போராடி வருகிறார். எனவே, இத்தேர்தலில் கோபாலபுரம் கொள்ளை கூட்டத்தை விரட்ட வேண்டும். தேர்தலில் திமுகவினர் காசு, பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். அது உங்களின் பணம், மக்களின் பணம். பால் ஊற்றி சத்தியம் செய்ய கூறினால் அவர்களையும் சத்தியம் செய்ய கூறுங்கள். அந்த பணம் எப்படி வந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

இயக்குனர் சீமான் கூறுவதை போல் திமுகவினர் கொடுக்கும் பணத்தில் சிறிது கோயில் உண்டியலில் போட்டால் சரியாகி விடும். நடிகர் வடிவேலு அறியாமையின் காரணமாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதன் பின் விளைவுகள் என்ன என்பது அவருக்கு தெரியாது. கருணாநிதி அடுத்தவரை ஏவிவிட்டு மற்றவர்களை விமர்சனம் செய்வார். அதிமுகவுக்கு ஆதரவாக முதலில் குரலில் கொடுத்த கார்த்திக்கை, குஷ்பு திமுகவிடம் அழைத்து போய் அங்கு நன்கு கவனித்ததால் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார். தேர்தல் நேரத்திற்கு மட்டும் வந்து வியாபாரத்தை கவனித்து கார்த்திக் சென்று விடுவார். இவரை ரசிகர்கள் நம்ப வேண்டாம். உஷாராக இருக்க வேண்டும். தொடர்ந்து சாதி பிரச்னையை தூண்டி விட்டால் எந்த ஊருக்குள்ளும் அவரை மக்கள் வர விட மாட்டார்கள்.

இந்தி எதிர்ப்புக்கு போராட்டம் நடத்திய கருணாநிதி, இந்தி பெண்ணான குஷ்பு மூலம் ஆதரவு திரட்டுகிறார். ஜீப்பில் மைக்கை தவற விட்டு அதை கீழே குனிந்து எடுத்ததை வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு திமுகவினர் வந்ததால் நாடே குட்டிச் சுவரானது. கேபிள் டிவியை அரசுடமையாக்கப்படும் என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூறிய போது ஓடோடி போய் கவர்னரை சந்தித்தார் கருணாநிதி. ஆனால் பின்னர் அவரே கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும் என்று கூறி இத்திட்டத்தை கிடப்பில் போட்டார். மக்கள் வரிப் பணத்தில் இருந்து டிவி கொடுத்த அவர் மாதம் தோறும் மக்களின் சொந்த பணத்தை கேபிள் கட்டணமாக பிடுங்கி வருகிறார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ உளுத்து போன அரிசியை வழங்கினார். இதனை வேக வைக்க சிலிண்டர், மளிகை பொருட்கள், காய்கறிகள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பத்திரிக்கை, டிவி, சினிமா, கேபிள், விமானம் உட்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் கோடி, கோடியாக லாபம் பார்த்த வருகினறனர். இந்த நிலை தொடராமல் இருக்க மக்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மக்களுக்காக ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார். ஆனால் கருணாநிதியோ, தனது குடும்பத்தினருக்காக மட்டும் பாடுபடுகிறார். ஜெயலலிதாவால் எனது உயிருக்கு ஆபத்து என்று கனிமொழி பொய் பிரசாரம் செய்கிறார். எதையாவது அனுதாபத்தை ஏற்படுத்தி மக்களிடம் ஓட்டுகளை வாங்கி விடலாம் என திமுகவினர் கனவு காண்கின்றனர். இந்த கனவு ஒரு போதும் பலிக்காது.

இவ்வாறு நடிகர் செந்தில் கூறினார். தொடர்ந்து பசியை தணித்து விட்டு நெல்லை பகுதிகளில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு திரட்ட புறப்பட்டார் நடிகர் செந்தில்.

Thanks : Dhinamalar

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...