1. எங்கள் சாதனைகளை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள் என மேடையில் சொல்லிவிட்டு வீடு வீடாக பணம் தரும் அரசியல்வாதிகளை என்ன செய்ய போகிறோம் ?
2. ஒட்டு பதிவு அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க சொல்லி ஆணை , ஆனால் சரவணா ஸ்டோர் போன்ற பல நிறுவனங்கள் விடுமுறை அளிபதில்லை அவர்களை என்ன செய்ய போகிறோம் ?
3. வடிவேலு , குஷ்பு , சிங்கம் முது சொன்னால்தான் நாம் கேட்போம் என நினைக்கும் அறிவில்லாத அரசியல்வாதியை என்ன செய்ய போகிறோம் ?
4. இலவச கல்வி அளிக்க முடியாத அரசு மற்றவற்றை இலவசமாக தருகிறேன் என கூறி காதில் பூ சுற்றுகிறதே அதை என்ன செய்ய போகிறோம் ?
5. தமிழக மினவர்கள் காக்க படுவார்கள் என உறுதியளித்தனர் சோனியா , கருணாநிதி. இன்று ஒருவர் பலி . இப்பவும் நம்மை ஏமாற்றும் இவர்களை என்ன செய்ய போகிறோம் ?
6. மேற்கு வங்கத்தில் ௮௭ வயதானவர் ஏன் முதலமைச்சர் ஆகவேண்டும் என ராகுல் கேட்டார் , அப்பா கருணாநிதிக்கு
15 வயசா ஆகுது
7. வக்கனையா அரசியல் பேசிவிட்டு , அரசியல் பதிவு போட்டுவிட்டு ஒட்டு போடாமல் இருப்பவரை என்ன செய்ய போகிறோம் ?
Tweet |
என்னுடைய அரசியல் பார்வை. அலசல் மூலம் சொல்கிறேன்.. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஜெயலலிதா தவறிவிட்டார்.. எளிதில் வெற்றிக்கோட்டை தொட்டிருக்க வேண்டியவர் , தன் செயல்களாலேயே போட்டியை கடுமையாக்கி கொண்டு.. இன்றைய நிலையில்.. திமுகவிற்கு வழி விட்டு விட்டார் என்பதே நிதர்சனம்.. அவருக்கு கடந்த இரண்டு மாதத்தில் பக்கபலமாக நின்ற பத்திரிககள் பல ஓவர் கான்பிடன்ட் டோஸ் கொடுத்து விட்டது .. அதை தாமதமாகவே புரிந்துக்கொண்டு , இப்போது என்னனென்னமோ செய்து பார்கிறது.. ஆனால் டூ லேட்..
ReplyDeleteமற்றொரு முக்கிய காரணி , முகவின் பிரசார வியுகம் .. ஊடகத்தை பயன்படுத்திய முறை.. வடிவேலு முதல் லியோனி, நெப்போலியன், குஷ்பு வரை கடினமாக உழைத்தது ... கலைஞ்சரின் மேடை பேச்சு.. எங்குமே அம்மையாரை திட்டாமல், அர்ச்சிகாமல் .. பழைய தலைவர்களை நினைவு கூர்ந்து பேசியது மக்களை கவர்ந்துள்ளது.. ஸ்டாலின் சூறாவளி சுற்றுபயணனும் பெரிய பிளஸ்.
ஜெயா டிவியிலேயே வடிவேலுவையும், அவர் கலைஞரை "இவர் தான் தலைவர் " என்று சொன்னதை திரும்ப திரும்ப காண்பிக்க வைத்திருகிறது என்றால் வடிவேலின் பிரசாரம் பற்றி புரிந்துக்கொள்ளலாம் ..
மொத்தத்தில் பிரசார வியுகத்தில் திமுக பல்கலை கழகம் என்றால் அமரர் எம்ஜியார் உருவாக்கி வைத்த அதிமுக கோட்டை இன்னும் 6 ஆம் வக்குப்பு கூட தேறவில்லை..
என் கணிப்பு
திமுக - 128 - 148
அதிமுக - 85 - 105
மற்றவர்கள் - 1 - 3
பார்க்கலாம்
@sadhasivam, Karoor
ReplyDeleteவருக , வருக
மிகவும் சரி நண்பா. ..
எல்லா கேள்விகளுமே நியாயமானவை. குறிப்பாக நாலாவது கேள்வி வெகுகாலமாக மனதில் இருக்கிறது.
ReplyDeleteஎன்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.