Tuesday, March 20, 2012
Saturday, March 17, 2012
நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?
1. நமது அழகுக்கும், திறமைக்கும் கதா நாயகன் வாய்ப்பே கொடுக்க க்யூ கட்டி நின்றாலும் மறுத்து விட்டு, வடிவேலுக்கு அல்லக்கையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றலாம். மக்கள் தொலைக்காட்சியில் தோன்ற விரும்பினால், ரஷ்ய மொழி திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கலாம்.
2. நெடுந்தொடரில் கதா நாயகனாக நடிக்க விரும்பும் ஆண்கள் பேக்கு போலவும், வில்லனாக விரும்பும் ஆண்கள் பத்து கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கதாநாயகியாக விரும்பும் பெண்கள் பிறந்ததிலிருந்து சிரித்ததே இல்லை என்பது போலவும், வில்லி வாய்ப்பை விரும்புபவர்கள் சாணியை மிதித்தது போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.ஏற்கனவே வெள்ளித்திரையில் தோன்றி விட்டால் பிரச்சனையே இல்லை. நீங்கள் படப்பிடிப்பு இடைவேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஓய்வறையில் உட்காந்து கொண்டிருக்கும் போதோ குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்படுவீர்கள்.
3. தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய பிறகு அடுத்த கட்டம் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவது தான். நான்கு திரைப்படத்தில் நடித்து விட்டால் நடுவராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது.
4. இருபது நகைச்சுவை துனுக்குகளை பார்க்காமல் மனப்பாடமாக சொல்லப் பழகிக் கொண்டால், அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றலாம். நமது மொக்கை ஜோக்குகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பிரபலத்தை சிரிக்க(சிரிப்பது போல நடிக்க) வைத்து நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் sadist மிருகத்திற்க்கு தீனி போட்டுக் கொள்ளலாம்.
5. ஜாரியு(ஃபிகரு)டன் அலைபேசியில் மணிக்கனக்கில் மொக்கை போட்டு பழக்கமிருக்கிறதா?(அது தான் பொழப்பேவா?) இந்த ஒரு தகுதி போதும் நீங்கள் வர்ணனையாளராவதற்க்கு. இல்லையென்றாலும் பரவாயில்லை.. எங்கேருந்து பேசுறீங்க, என்ன பண்றீங்க, என்ன பாட்டு(நகைசுவை துனுக்கு) வேணும்? யாருக்கு டெடிக்கேட் பண்ணனும் என்ற நான்கு கேள்விகளை மனப்பாடமாகக் கேட்கத் தெரிந்தால் போதும். பர்ஸனாலிட்டி முக்கியமில்லை. மாறு வேடமிட்டு மறைத்துக்கொள்ளலாம்.
6. ஐம்பது கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கத் தெரிந்தால், தில் தில் மனதில் மற்றும் சவால் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றலாம்.(முயற்சியில் விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டவும்)
7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.
இது தவிர சித்த வைத்தியம், பாலியல் வைத்தியம், ராசிக்கல் ஜோதிடம், டெலி ஷாப்பிங் மாதிரி சொந்த செலவில் டைம் ப்ளாட் வாங்கி கொள்வது உங்கள் வசதி வாய்ப்பைப் பொருத்தது.இது தவிர உங்களுக்கு வேறு யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி : மெயில் அனுப்பிய நண்பனுக்கு .
Friday, March 16, 2012
நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்
'உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியா யத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால், நாம் இருவரும் தோழர்களே’ - கியூபா விடுதலைக்குப் போராடிய சே குவேராவின் தோழமை வரி இது. ஆனால், சே குவேராவுடன் தோளோடு தோளாக நின்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா இன்று, இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. காரணம்... அமெரிக்கா, இலங்கைக்கு எதிரியாக இருக்கிறது.
அமெரிக்கா எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பது என்று கியூபா முடிவெடுத்துவிட்டது. கியூபாவைப் போலவே அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் எல்லாம் இன்று இலங்கைக்கு ஆதரவாக மாறிவிட்டன. உலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத் தமிழர் பிரச்னை.
இதற்கு மையப் புள்ளியாக இருக்கப் போகிறது ஜெனிவா.
ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கியது. மார்ச் 23 வரை நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில்தான், இலங்கை இனப் படுகொலைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இலங்கை இனப் படு கொலைகளுக்கு எதிராக இரண்டாவது முறை இந்தத்
தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வரப்போகிறது. 2009 மே மாதம் முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆதரவுடன், கனடா, இத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அப்போது, உறுப்பினர்களான 47 நாடுகளில் 29 நாடுகள் இலங் கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. ஆறு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. அதனால், அந்தத் தீர்மானம் தோல்வியைக் கண்டது. இப்போது மீண்டும் இலங்கை இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிட அமெரிக்கா முனைப்புடன் செயல்படுகிறது.
ராஜபக்சே அரசின் தமிழ் இனப் படுகொலை களுக்கு நீதி கேட்டு ஈழத் தமிழர்கள், ஜெனிவாவில் நடை பயணம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாடும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அந்தந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால், ஈழத் தமிழர்களால் இலங்கையில் தங்கள் அரசியல் உரிமையை எடுத்துரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துரோகிகளாக மாறி விட்டனர் என்ற ஆவேசம் தமிழர்களிடையே இணையதளங்களில் பதியப்படுகிறது. இதற்குக் காரணம், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து இருப்பதுதான். உலகம் முழுவதும் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டுவரும் நிலை யில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இதில் பங்கேற்காமல் தட்டிக்கழித்ததை, 'சந்தர்ப்பவாதப் பின்வாங்கல்’ என்று உலகத் தமிழர்கள் கொந்தளித்துச் சாடுகின்றனர்.
''ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்துவிட்டு, திடீர் விலகலுக்கு என்ன காரணம்?'' என்று சம்பந்தனிடம் கேட்டோம்.
''ஐ.நா. கூட்டம் தொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ, அனைத்து செயல்களையும் செய்து விட்டோம். ஆனால், இப்பொழுது இதில் பங்கேற் காமல் பிரசங்கமாக (அமைதியாக) இருக்கும் முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்நாடு செல்லும் முன்னரே விவாதித்தோம். அதில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று எடுத்த முடிவு
அவருக்கும் தெரியும். மக்கள் சார்பாக அனைத்துப் பிரச்னைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் திறமான நோக்கத்துடன் உள்ளோம். ஊடகங்களின் பிரசாரத்துக்காக நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த முடிவு தொடர்பாக இனி ஊடகங்களிடம் பேச முடியாது'' என்று இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பேசினோம். ''இது மொத்தக் கூட்டமைப்பின் கருத்து அல்ல. தனிப்பட்ட சம்பந்தனின் கருத்து. எங்கள் விவாதத்தில், ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்று இறுதி முடிவு எடுக்காவிட்டாலும், எங்கள் உறுப்பினர்கள் பலரின் நிலைப்பாடு, 'இதில் பங்கேற்பது’ என்பதுதான். ஆனால் இல்லை என்று சம்பந்தன் சொன்னால், அது அவரே கூறிக்கொள்ளும் முற்றும் முழுதுமான பொய். நான் தமிழ்நாடு விரையும் முன் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றே முடிவு எடுக்கப்பட்டது'' என்றார்.
அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் முன்மொழியப் பட் டுள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட ஒரே குரலில், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரதான எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வைத்துள்ளன. ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
ஈழத்தமிழர்கள் மரணத்துக்கு சாட்சியாக இருந்த மத்திய அரசு, பாவத்தைக் கழுவிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
- ம.கா. தமிழ் பிரபாகரன் அவர்கள் விகடனில் எழுதிய கட்டுரை இது. நமது இன மக்களுக்காக இதை அனைவரிடமும் சென்று சேரும் அளவு பகிரவும் .
நண்பர் சி.பி யின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக்(
நண்பர் சி.பி யின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக்(
தமிழா! தமிழா! இருப்பாய் தமிழா நெருப்பாய்!ஈழத்தமிழனும் கலந்தான் நம் உயிர் உறுப்பாய்..
) செய்யவும்முந்தய பதிவுகள் :
"A" - Jokes
அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!
கதம்பம்
Labels:
CONGRESS,
indis.,
srilanks,
ஆனந்த விகடன்,
ஈழத் தமிழினமும்,
பிரபாகரன்
Tuesday, March 13, 2012
"A" - Jokes
அருண் : ஏம்ப்பா கரன்ட் ஷாக் அடிச்சிருச்சாமே? எப்படி ஆச்சு?
அன்பு : கரன்ட் வருதான்னு விரலாலே தொட்டுப் பார்த்தேன்.
அருண் : விரல்ல யாராவது கரன்ட்டைத் தொடுவாங்களா? பைத்தியக்காரனா இருக்கியே!
அன்பு : 'கட்டை' விரல்ல தொட்டா ஷாக் அடிக்கதுன்னு நெனைச்சேன்.
நன்றி : KR Vijayan
=====================================================
அரவிந்த் : நம்ம காதல பத்தி சொல்ல உன் வீட்டுக்கு போனேன். நம்ம
காதல் ஜெய்காதுனு நினைக்கிறேன்?
அனிதா : ஏன் எங்க அப்பாவை பார்திங்களா?
அரவிந்த் : இல்லை ! ! உன் தங்கசிய பார்தேன்.
அமல்(பேஷண்ட்) : நர்ஸ் ! ! நிங்க என் இதயதையே திருடிடிங்க…
அனுஷ்கா : போடா லூசு… டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டார்.
அருள் : I LOVE YOU
அழகி : நான் ஒத்துகளனா என்னா பண்ணுவ?
அருள் : நி ஒத்துகளனா நான் “வீடு ”, “அடரா சக்க”,"விக்கியுலகம் "BLOG அ 24 மணி நேரமும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.
அழகி : எனக்காக உன் உயிரயே பணயம் வைக்கிற.. SO I LOVE YOU
டா
ஆதவன் : சைக்கிள் கடைகாரர் பையனை திருகுரள் சொல்ல சொன்னது
தப்பா போச்சு..
ஆறுமுகம் : ஏன்?
ஆதவன் : பெல்லென்ப ஏனய பிரேக்கென்ப இவ்விரண்டும்
கண்னென்ப ஓடும் சைக்கிளுக்கு. என சொல்லுறான்.
இதுல எங்க “A” JOKE இருக்கு னு கேட்குறிங்களா ? இதுல வர எல்லா பெயரும் A ல ஆரம்பிக்கும் பாருங்க.
இது ஒரு மீள் பதிவு ,
இதையும் படிக்கலாமே :
இதையும் படிக்கலாமே :
அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!
கதம்பம்
உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)
Monday, March 12, 2012
அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!
அஜீத், ஆர்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். யுவன் இசையமைக்க இருக்கிறார்.இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'ரேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
சயூப் அலிகான், அக்ஷய் கன்னா, பிபாஷா பாசு, கத்ரீனா கைஃப், அனில் கபூர், சமீரா ரெட்டி மற்றும் பலர் நடித்து அப்பாஸ் - மஸ்தான் இயக்கத்தில் வெளிவந்த படம் 'ரேஸ்'. அண்ணன் - தம்பி இருவருக்குள் நடக்கும் போராட்டமே கதை.
அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

'ரேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் தான் அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படம் . இப்படத்தில் மங்காத்தா படத்தினை போலவே வில்லத்தனமான வித்தியசமான அஜீத் காணலாம் என்பது மட்டும் உறுதி!
தகவல் உதவி : விகடன்
இது குறித்து எழுத்தாளர் சுபா தனது facebook தளத்தில் சொன்ன தகவல் இதோ :
Good news is that we will be part of the team for next Vishnuvardhan project with ajith, arya and nayantara..
இதையும் படிக்கலாமே :கதம்பம்
உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...
Subscribe to:
Posts (Atom)








